\
முத்தையா இயக்கத்தில் இணையும் கமல்ஹாசன்?

முத்தையா இயக்கத்தில் இணையும் கமல்ஹாசன்?

முத்தையா இயக்கத்தில் இணையும் கமல்ஹாசன்?
Published on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விக்ரம்’ வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து, ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இப்படமும் நிறைவடைந்தபிறகு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி - ஷங்கர் மகள் அதிதி நடிக்கும் ‘விருமன்’ படத்தை இயக்கிவரும் முத்தையா விக்ரம் பிரபுவின் ‘டைகர்’ படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த நிலையில், இப்படங்களை முடித்தப்பிறகு கமல்ஹாசனுடன் இணையவுள்ளார் என்றும் கிராமத்துப் பின்னணி கதைக்களத்தில் உருவாகவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த, எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com