போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவிகள்.. OTT-ல் கவனம் ஈர்க்கும் ’COURT: STATE Vs A NOBODY’ திரைப்படம்!
போக்சோ வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளுக்கான நீதி குறித்து பேசும் ஒரு படம். நீதிமன்ற வழக்காடுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் நேச்சுரல் ஸ்டார் நானி வழங்கியுள்ள தெலுங்கு திரைப்படம். இப்படம், தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பார்க்கலாம்.
ஓடிடியில் கோடிக்கணக்கானவர்கள் வரவேற்கும் கோர்ட்
பிரியதர்ஷி புலிகொண்டா, பி.சாய்குமார், சிவாஜி, ரோஹிணி, ஹர்ஷ வர்தன், சுபலேகா சுதாகர்,ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி அப்பல்லா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஒடிடியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 11 ஆம்தேதி வெளியான வேகத்தில் 6 கோடி பேருக்கும் மேலாக இத்திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை.
இது ஸ்பாயிலர் அல்ல. படத்தின் போக்கை ஒரு கோடிட்டு மட்டும் காட்டுகிறோம். படத்தின் தொடக்கமே நீதிமன்றம்தான். 2013 ல் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் 19 வயது இளைஞர் சந்து என்கிற சந்திரசேகரன், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான் என்பதுதான் புகார். சிறுமியை மிரட்டி வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதியப்படுகிறது. மிரட்டல், கடத்தல், பாலியல் வன்கொடுமை உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு போக்சாவிலும் சந்து மேல் வழக்கு. போக்சோ என்பதால் கடுமையான பிரிவுகளில் சந்துவுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. சுமார் 80 நாட்கள் சிறையில் இருக்கும் சந்துவுக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்போதுதான், மூத்த வழக்கறிஞர் மோகன்ராம் பற்றி சந்துவின் குடும்பத்துக்கு தெரியவர, இறுதிமுயற்சியாக மோகன்ராமை நாடுகிறார்கள். ஆனால் அவரை பார்ப்பதே தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
தீர்ப்புநாள்நெருங்கும்போது, மோகன்ராமிடம் ஜூனியராக இருக்கும் இளம் வழக்கறிஞர் சூர்யதேஜா (பிரியதர்ஷி) தனக்கென்றுவழக்குஏதுவும்சீனியர்மோகன்ராம்தராததாலும், இவர்கள் பக்கம் சில நியாயமான விஷயங்கள் இருப்பதையும் உணர்ந்து சீனியரிடம் கேட்காமலேயே இந்தவழக்கில்இறங்குகிறார். அப்போது சூடுபிடிக்கிறது நீதிமன்ற விசாரணை..
சந்து பொய்சாட்சிகளால் எப்படி சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்ற முடிச்சுகளை அவிழ்க்கும் அவருக்கு ஒருவீடியோ அதிரவைத்து முடக்கிப்போடுகிறது. அதில் அந்த 17 வயதுபெண்ணும், சந்துவும் , பெண்ணின் உறவினர் திருமணநிகழ்ச்சியில் ஒருஅறைக்குள் சென்று 16 நிமிடங்கள்கழித்துவெளியேவருகிறார்கள். இந்த வீடியோ மீண்டும் சந்துவின் குற்றத்தைஉறுதிசெய்கிறது.
இந்ததகவலைஅறிந்துமனம்நொந்து, தனக்கு வழக்கறிஞராக இருக்க தகுதிஇல்லை என்று சொந்தஊருக்கு சென்றுவிடுகிறார். அவ்வளவுதான் சந்துவின் நிலை என்று நினைக்கும் போதுதான் திருப்பம் நேர்கிறது. தேஜாவுக்கு தனியாக வழக்குதராமல் அங்கீகரிக்காத மோகன்ராம், தேஜாவின் ஊருக்குவந்து அவரிடம்பேசுகிறார். அந்தபேச்சு, நமக்குமே ஒரு ஐ ஓபனிங்தான். மீண்டும் நீதிமன்றம் திரும்புகிற தேஜா, அசத்துகிறார். சந்துவிடம் இன்கேமிரா விசாரணைநடக்க, பல தடைகளுக்குப்பிறகு அந்தசிறுமியும் இன்கேமிராவிசாரணைக்கு வருகிறார். தனித்தனியாக இருவரின் இன்கேமிரா வாக்குமூலமும் ஒன்றாகஇருக்க, சந்து குற்றமற்றவன் என்று நிரூபணமாகிறது.
காதல் பின்னணி
படிப்பை முடிக்காமல் சின்னசின்ன வேலை பார்க்கும் சந்து (ஹர்ஷ் ரோஷன் )-வின் தாய் இஸ்திரி போடுபவர், தந்தையோ வாட்ச்மேன். சந்துவுக்கும் தகுதித்தேர்வெழுத பயிற்சிக்கு படிக்கும் ஜாபிலி ( ஸ்ரீதேவி ) இருவருக்கும் இடையே மலரும் காதலுக்கு ஜாபிலியின் பணக்கார பின்னணியும், தாய்மாமன் மங்கபதியும் (சிவாஜி) வில்லனாகிறார்கள். குடும்ப கௌரவம் என்ற பெயரில் மங்கபதி காட்டும் ஆணவமும், குடும்பத்தினரிடம் காட்டும் கோபமும் மிரட்டலாக இருக்கிறது. குடும்ப கௌரவத்தின் பெயரால் ஒரு காதல், போக்சோ வழக்காக மாற்றப்பட்டு ஜோடிக்கப்பட்டு ஓரு அப்பாவியை பலிகடா ஆக்கிய கதை.
போக்சோவும் பொய் வழக்குகளும்
போக்சோ சட்டம் சில அப்பாவிகள் மீதும் பாய்வதை எடுத்துக் கூறும் விதமாக நீதிமன்ற விசாரணையில் தேஜாவின் வாதங்கள் இருக்கின்றன. 17 வயது 8 மாதங்களில் இல்லாத மெச்சூரிட்டி 18 வயதில் வந்துவிடும் என்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது என்பதும், இத்தனைக்கும் மத்தியில் இருப்பது காதல் என்பதும் டச் செய்யும் வசனங்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்கள் குறித்து குரலெழுப்புகிறது கோர்ட் திரைப்படம்.
பிளஸ்
படத்தின் நாயகன் பிரியதர்ஷிக்கு இது முக்கிய கதாபாத்திரம். இயல்பாக நடித்திருக்கிறார்.
நீதிமன்ற குறுக்கு விசாரணைகள், கதாபாத்திரங்களின் கனம், வசனங்கள், முந்தைய கதையை ஊடாகச் சொல்லும் நேர்த்தி
திரைக்கதை மிகவும் இயல்பாக முன்பின்னாக ஊடாடி தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.
கதையில் 19 வயது இளைஞனாக, போக்சோவில் கைதாகும் சந்து வேடத்தில் நடித்துள்ள ஹர்ஷ் ரோஷன், ஜாபிலி வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவி இருவருமே தங்கள் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள்.
மங்கபதியாக பணத்திமிர், அத்தனையையும் விலைக்கு வாங்கும் வேடத்தில் நடித்துள்ள சிவாஜி இத்தனையும் பிளஸ்.
இந்த படத்தில் ரோஹிணிக்கு நடிப்பதற்கான பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், அவர் பேசும் கடைசி வசனமான "உம்புள்ளையா இருந்தாலும், எம்புள்ளையா இருந்தாலும் பெண்ணைப்பத்திப் பேசும்போது நாவடக்கம் வேணும்" னு நிஜமாகவே முகத்தில் அறைந்து பேசுகிறார்.
நீதிமன்ற வழக்காடுகளை ரசித்து பார்ப்பவர்களுக்கு மட்டும் இன்றி, இப்போதைய காலகட்டத்தில் முக்கியமான படமாகவும் "COURT
STATE Vs A NOBODY" இருக்கிறது