காலாவில் ரஜினியுடன் தனுஷ் கூட்டணி?

காலாவில் ரஜினியுடன் தனுஷ் கூட்டணி?
காலாவில் ரஜினியுடன் தனுஷ் கூட்டணி?

காலா படத்தில் தனுஷ் நடிக்கிறார் என வதந்தி பரவிய நிலையில் அது குறித்து தனுஷிடம் கேட்டபோது இயக்குனர் ரஞ்சித்திடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தனுஷ், கஜோல், அமலா பால் நடிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் விஐபி 2 விரைவில் ரீலிஸாக உள்ளது. படம் குறித்த பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் தனுஷிடம், " காலா படத்தில் நீங்கள் நடிப்பதாக செய்தி பரவுகிறதே. அது உண்மை தான என கேட்கப்பட்டது". அதற்கு நிதானமாக பதிலளித்து பேசிய நடிகர் தனுஷ் " இயக்குனர் ரஞ்சித்திடம் இருந்து அப்படி ஒரு அழைப்பு ஏதும் இதுவரை எனக்கு வரவில்லை" என்றார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் அண்மையில் நடைபெற்றது. அந்த சமயத்தில் நடிகர் தனுஷ் மும்பையில் தான் இருந்துள்ளார். அதனால் தான் காலா படத்தில் ரஜினிகாந்துடன் தனுஷ் நடிக்கிறார் என கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வதந்திக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனுஷ் தான் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிற்புகாக மும்பையில் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com