\
Devyani
Devyaniinstagram

எல்.கே.சுதீஷ் மகள் திருமணத்தில் கோபமான தேவயானி... அப்படி என்ன நடந்தது? வைரலாகும் வீடியோ!

திருமண வரவேற்பில் கூட்ட நெரிசலால் சிரமப்பட்ட தேவயானி... வைரலாகும் வீடியோ!
Published on: 
Summary

நடிகை தேவயானி, எல்.கே.சுதீஷ் மகளின் திருமண வரவேற்பில் கூட்ட நெரிசலால் சிரமப்பட்டு, கோபமாக வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை தேவயானி, எல்.கே.சுதீஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் – பூர்ணஜோதி தம்பதியின் மூத்த மகள் டாக்டர் ஜானு ஸ்ரீக்கும், ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் – ராதா தம்பதியின் மகன் அகில் ரவிக்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி சென்னையில் உள்ள நீலாங்கரை ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நவம்பர் 21-ம் தேதி பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Devyani
Devyani Instagram

பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகை தேவயானியும் தனது இரண்டு மகள்களான பிரியங்கா, இனியா ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய தேவயானி, தனது மகள்களுடன் வெளியேற முயன்றுள்ளார். அப்போது அங்கு ஏராளமானோர் திரண்டிருந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மணமக்களை சந்திக்க மகள்களுடன் மேடை ஏறிய தேவயானி, அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததும் கீழே இறங்கி வந்தார். அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்ததால், அவரைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியாளர்களும் கூட்டமும் குவிந்தது. இதனால் தேவயானியும் அவரது மகள்களும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Devyani
Devyani instagram

கூட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்ட தேவயானி, தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் வழிவிடுமாறு கேட்டும் வழி கிடைக்காததால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, 'தள்ளுங்க... தள்ளுங்க!' என்று கோபமாகக் கூறியபடி அங்கிருந்து வெளியேறினார். அவரது இரண்டு மகள்களும் முகத்தை மூடியபடி தாயைப் பின் தொடர்ந்து சென்றனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பலரும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொள்ளும் இத்தகைய பெரிய நிகழ்ச்சிகளில் முறையான கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.கூடவே எல்.கே.சுதீஷ் மகள் திருமண வரவேற்பில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

Devyani
'ராவண தாண்டவத்துக்கு 13 versions..' ராமாயணம் குறித்து ரஹ்மான் பெருமிதம்!