\
delhi High court relief to AR Rahman in copyright case
ar rahmanPT web

'ராவண தாண்டவத்துக்கு 13 versions..' ராமாயணம் குறித்து ரஹ்மான் பெருமிதம்!

ராமாயணத்திற்கு இசை அர்ப்பணித்தது ரஹ்மான் பெருமையோடு பேசியுள்ளார்.
Published on: 
Summary

ராமாயணம் படத்தின் இசை உருவாக்கத்தில் 3 ஆண்டுகள் உழைத்த ஏ.ஆர்.ரஹ்மான், 'ராவண தாண்டவம்' பாடலை 13 முறை மாற்றிய பின்னர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இசை வடிவத்தை உருவாக்கினார். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணியாற்றிய ரஹ்மான், படத்தின் இசைக்காக பல வாய்ப்புகளைத் தவிர்த்ததாக கூறியுள்ளார்.

செய்தியாளர் - M.மீரா

ராமாயணம் திரைப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருக்க கூடாது, இஸ்லாமிய இசையை புகுத்திவிட்டார் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்கு ரஹ்மானும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்தசூழலில் ராமாயணத்திற்காக 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்திற்காக சுமார் 10 முதல் 12 படங்களில் பணியாற்றும் வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IFFI) பேசிய அவர், ராமாயணம் படத்தின் இசைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக கூறினார். இந்தப் படத்திற்காக ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து ரஹ்மான் பணியாற்றி வருகிறார்.

Ramayana
RamayanaRamayana Trailer you tube Screenshot

படத்தின் இசைக்காக பல முக்கிய இயக்குநர்களின் பட வாய்ப்புகளைத் தவிர்த்ததாகக் குறிப்பிட்ட ரஹ்மான், ராமாயணத்தின் இசை உலகில் முழுமையாக ஈடுபட விரும்பியதாகவும், இதற்காகப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், படத்தில் இடம்பெறும் 'ராவண தாண்டவம்' பாடல் மட்டும் 12 முதல் 13 முறை மாற்றி அமைக்கப்பட்டதாகவும், இறுதியில் அனைவருக்கும் பிடித்த இசை வடிவம் கிடைத்ததாகவும் கூறினார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தின் இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'ஜெய் ஜெய் ராம்' பாடலை அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். 'ராவண தாண்டவம்' பாடலை விஷால் தத்லானி பாடியுள்ளார். சீதையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் 'சீதாஸ் ஆஸ்பிரேஷன்' பாடலில் ஏ.ஆர்.அமீன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கவிஞர் குமார் விஸ்வாஸ் எழுதியுள்ளார்.

Ramayana
RamayanaKumar Vishwas

இருப்பினும், பாடல்கள் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ராவண தாண்டவம் பாடலில் எதிர்பார்த்த வேகம் மற்றும் பாரம்பரிய இசை இல்லை எனச் சிலர் விமர்சித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

delhi High court relief to AR Rahman in copyright case
’இனி தனுஷின் எழுச்சி..’ 3 நாளில் 100 கோடி வசூலை கடந்து ’ஓம்’ சாதனை!