’என் வாழ்நாளின் உணர்ச்சிபூர்வமான தருணம்!’ - இளையராஜா வருகை குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவிற்கு இளையராஜா வருகை தந்திருந்தார். இந்நிலையில், அவருடன் தான் எடுத்தப்புகைப்படத்தினை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
தேவி ஸ்ரீ பிரசாத்
தேவி ஸ்ரீ பிரசாத்முகநூல்

தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவிற்கு இசைஞானி இளையராஜா வருகை தந்திருந்தார். இந்நிலையில், அவருடன் தான் எடுத்தப் புகைப்படத்தினை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழ் மொழியிலும் தனது துள்ளலான இசையோடு கூடிய நடனத்தினை வழங்கி முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் தேவி ஸ்ரீ பிரசாத். ஒரு ஐகானிக் இசையமைப்பாளராகவே பார்க்கப்படும் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

கடந்த வருடம் தேசிய விருது வழங்கும் விழாவில் புஷ்பா திரைப்படத்திற்கு முதல் முதலில் தேசிய விருது வாங்கினார். மேலும், புஷ்பா இரண்டாம் பாகம் உள்பட சில தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இசையின்மீது அதீத பிரியம் கொண்ட தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

காரணம் என்னவென்றால், தேவி ஸ்ரீபிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளதுதான்.

அங்கு இவர்கள் இருவரும் எடுத்துகொண்டுள்ள புகைப்படத்தினை பகிர்ந்தும், இது குறித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

அந்த அறிக்கையில், “என் வாழ்நாள் கனவு நனவாகிய தருணம் இது. நான் என் சிறுவயதில் இசை என்றால் என்ன என்று தெரிவதற்கு முன்பே, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்கு ஒரு மாயாஜாலமாக இருந்தது. எனது தேர்வு நேரங்களில் படித்து கொண்டிருக்கும்போது கூட , என்னை சுற்றி அவருடைய இசை என்றென்றும் ஒலித்து கொண்டே தான் இருக்கும்.

சாரின் இசையுடன் தான் நான் வளர்ந்தேன். இதுதான் நான் ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தினை என்னுள் விதைத்தது.

நான் இசைப்பாளராக மாறியதும், எனக்கென்று ஒரு ஸ்டுடியோவை நான் உருவாக்கியபோது இளையராஜா சாரின் ஒரு பெரிய புகைப்படத்தினை அங்கே வைத்தேன்.என்றைக்காவது ஒருநாள் சார் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தரவேண்டும், அப்போது அந்த புகைப்படத்தின் அருகில் நின்று அவருடன் நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு.

ஆனால், யுனிவர்ஸ் எப்போதும் இதற்கு சதி செய்தது, ஆனால் இப்போது இறுதியாக எனது கனவு நனவாகி விட்டது. குறிப்பாக எனது குரு ஸ்ரீ மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணாவின் பிறந்த நாளில்...

இதற்கு மேல் எனக்கு என்னவேண்டும்?. இது என் வாழ்நாளின் மிகுந்த உணர்ச்சிபூர்வமான தருணம். உங்கள் வருகையால் எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதற்கும், எங்களை ஊக்குவித்து கற்பித்ததற்கும் இளையராஜா சாருக்கு நன்றி.

இந்த சந்தர்ப்பத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இசை லேபிள்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழுவிற்கு எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் என் இசையை நேசிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
இப்படியும் ஒரு ஹீரோவை உருவாக்க முடியுமா! ரசிகர்கள் கொண்டாட மறந்த படைப்பு - ‘காதலும் கடந்து போகும்’!

இந்நிலையில் இவர்களின் புகைப்படமும், இவர் எழுதியுள்ள கடிதமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com