டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்முகநூல்

இளையராஜாவுக்கு வந்த சிக்கல்; டெல்லி உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதை நீதிமன்றம் தடை செய்தது.
Published on

செய்தியாளர்: ராஜீவ்

பிரபல தமிழ் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே’வின் பதிப்புரிமையை "சரிகமா இந்தியா லிமிடெட்" நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

delhi high court
delhi high courtx page

‘என் இனிய பொன் நிலாவே’ உட்பட, மூடு பனியின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருக்கும் சரேகமா இந்தியா லிமிடெட் (SIL), டெல்லி உயர்நீதிமன்றத்தில் “உரிய அங்கீகாரம் இல்லாமல் ‘என் இனிய பொன் நிலாவே பாடலை வரவிருக்கும் தமிழ்ப் படத்திற்காக மீண்டும் உருவாக்கி உள்ளனர்” என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
Pushpa 2 | Identity | Tharunam | Bioscope - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ் லிஸ்ட்!

அதன்படி, இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பாடலை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது.

மேலும், “என் இனிய பொன் நிலவே’வின் பதிப்புரிமையை ‘சரிகமா இந்தியா லிமிடெட்’ நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது” என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com