“விளையாட்டு உலகமே செம லைஃப்”- நினைவுகளை பகிரும்  தீபிகா படுகோன்

“விளையாட்டு உலகமே செம லைஃப்”- நினைவுகளை பகிரும் தீபிகா படுகோன்

“விளையாட்டு உலகமே செம லைஃப்”- நினைவுகளை பகிரும் தீபிகா படுகோன்
Published on

பள்ளிக் காலத்தில் பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்தபோது திரைப்படங்கள் பார்க்கவில்லை என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மூத்த பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள்தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தந்தையைப் போலவே இவரும் படிக்கும்போது பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், பள்ளிக் காலத்தில் விளையாட்டு வீராங்கனையாக இருந்தது குறித்து பகிர்ந்துகொண்டார்.

 “எனது பள்ளிக் காலங்கள் அனைத்தும் பேட்மிண்டன் விளையாட்டால் நிரம்பியது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடவோ, திரைப்படங்கள் பார்க்கவோ முடியவில்லை. ‘நாங்கள் உன்னை தண்டிக்கலாம். ஆனால், உனது அப்பாவின் மிகப்பெரிய ஃபேன்கள்’  என்று  எனது ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துவார்கள்.

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பயிற்சி செய்துவிட்டு பள்ளிக்குச் செல்வேன். மீண்டும் மாலை பயிற்சிக்கு சென்றுவிடுவேன்.தினமும் இதே நிலைமைதான். அந்த வாழ்க்கையில் தாமதமாக தூங்கும் இரவுகள் இல்லை. டிவி இல்லை. திரைப்படங்கள் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வு, ஒழுக்கம் தியாகம் மற்றும் உறுதியை விளையாட்டு உங்களுக்கு கற்பிக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com