குழந்தையைக் கொஞ்சும் விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய தோற்றம்!!

குழந்தையைக் கொஞ்சும் விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய தோற்றம்!!

குழந்தையைக் கொஞ்சும் விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய தோற்றம்!!
Published on

தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எதார்த்தம் காட்டுகிறவர் விஜய் சேதுபதி. ஒரு கடும் பாதையைக் கடந்து திரையில் உயரத்துக்கு வந்துள்ள இந்த மக்கள் செல்வன், எப்போதும் சவாலான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பதில் பேரார்வம் காட்டிவருகிறார். அப்படியொரு இயல்பான வீடியோ காட்சிதான் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக தோன்றும் விஜய் சேதுபதி இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமூகப் பிரச்சினைகளுக்கும் தயங்காமல் குரல் கொடுத்துவரும் அவர், ஒரு குழந்தையுடன் கொஞ்சம் அந்த வீடியோ ரசிகர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அந்தக் குழந்தை அவரது ரசிகரா அல்லது உறவினரின் குழந்தையா என்று ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

கொரோனா காலத்தில் வேலையிழந்து தவித்த சினிமா தொழிலாளர்களுக்கும் நலிந்த மக்களுக்கும் வெளியில் தெரியாமல் உதவி செய்துவரும் விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். ஊரடங்கு முடிந்த தியேட்டர்கள் திறக்கப்படும்போது க. பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என அவர் நடித்துள்ள படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com