\
மோகன்லால் அதிமனோஹரம் திரைப்படம்
மோகன்லால் அதிமனோஹரம் திரைப்படம்web

மோகன்லால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்.. சபரிமலையில் படம்பிடிக்கத் தடை!

மோகன்லாலின் புதிய படத்திற்காக சபரிமலையில் படம்பிடிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
Published on
Summary

மோகன்லாலின் 366வது படமான ‘அதிமனோஹரம்’ சபரிமலை, பெரியார் புலிகள் காப்பகப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகிய நிலையில், கேரள உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் வணிகரீதியிலான படப்பிடிப்புக்கு தடை உள்ளதையும், சபரிமலையில் பக்தி, புராணப் படங்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

மோகன்லாலில் 366வது திரைப்படமாக உருவாகிவரும் படம் 'அதிமனோஹரம்'. இப்படத்தை ரதீஷ் ரவி எழுதி, தருண் மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால் சப் இன்ஸ்பெக்டர் டிஎஸ் லவ்லாஜனாக நடிக்கிறார், மீரா ஜாஸ்மின் நைசியாக நடித்துள்ளார். இதன் திரையரங்கு வெளியீட்டை 2026 டிசம்பர் 24 அன்று படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தசூழலில் இப்படத்திற்காக பம்பா மற்றும் நிலக்கலில் படப்பிடிப்பு நடத்துவதற்குத் தயாரிப்பு நிறுவனம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அந்தக் குழுவுக்குத் தனி அனுமதி தேவைப்பட்டது.

பாம்பா பகுதிக்கு அப்பால் உள்ள இடங்களுக்கு. தயாரிப்புக் குழு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது. பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் அந்த இடம் அமைந்திருப்பதைக் காரணம் காட்டி வனத்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் சபரிமலை மற்றும் பெரியார் புலிகள் காப்பகப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கள் செய்யப்பட்ட நிலையில், அனுமதி கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில் வணிகரீதியிலான படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், சபரிமலையில் பக்தி மற்றும் புராணப் படங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பம்பா பகுதியில் மோகன்லாலின் ’அதிமனோஹரம்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரிசையாக 7 படங்களில் நடக்கவிருப்பதாக மோகன்லால் அடுத்த படங்களுக்கான அப்டேட்டை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் அதிமனோஹரம் திரைப்படம்
கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்! - சாய் அபயங்கர் | Sai Abhyakkar
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com