கோலாகலமாக நடைபெற்ற 96-வது ஆஸ்கர் விருதுகள்... விருது வென்றோர் பட்டியல் இதோ...!

96 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டொல்பி திரையரங்கில் நடைபெற்றது.
ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருதுட்விட்டர்

திரையுலகினரின் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் செலுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் பல்வேறு சினிமா விருதுகள் வழங்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் ஒப்பிடுகையில், திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.

ஆஸ்கர் விருது

1929 ஆம் ஆண்டுமுதல் ஆஸ்கர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இந்த வருடம், 96-வது ஆண்டாக ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 4 மணிக்கு தொடங்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘96-வது ஆஸ்கர் விருது விழா’ ஒளிபரப்பானது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் டொல்பி திரையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பல நட்சத்திரங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவானது சுமார் 2 மணி நேரம் நடைபெற்றுள்ளது.

இந்த 96 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வென்ற சாதனையாளர்களின் பட்டியலை இங்கே காணலாம்...

சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

Oppenheimer :

 • சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை புகழ்பெற்ற இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் Oppenheimer படத்திற்காக பெற்றுக்கொண்டார்.

 • Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிலியன் மர்ஃபிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

 • சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது Oppenheimer படத்திற்கு வழங்கப்பட்டது.

 • சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக ராபர்ட் டவுனி (3 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராபர்ட் டவுனி முதல்முறையாக விருதை வென்றார்)

 • Oppenheimer திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் ஜெனிஃபர் லேம் Oppenheimer படத்திற்காக சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார்.

 • சிறந்த ஆவணக் குறும்படம் - லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

 • சிறந்த விஷுவல் எபக்ட்ஸ் - Godzilla Minus One

 • சிறந்த துணை நடிகைக்கான விருது The Holdover படத்திற்காக டா வின் ஜாய் ரான்டோல்ஃப்க்கு வழங்கப்பட்டுள்ளது.

Poor Things

 • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை Poor Things படத்திற்கு நாடியா ஸ்டேசி, மார்க் கூலியர், ஜோஷ் வெஸ்டன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 • சிறந்த உடை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதையும் Poor Things படத்திற்காக ஹாலி வாடிங்டன் பெற்றார்

 • சிறந்த கலை இயக்கத்திற்கான விருதை ஜேம்ஸ் பிரைஸ், ஷோனா ஹீத், சூஸா மிஹாலெக் ஆகியோர் poor Things படத்திற்காக பெற்றுக்கொண்டனர்.

  (Poor Things திரைப்படம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது)

ஆஸ்கர் விருது
Maharani Season 3 Review | ஹாட்ரிக் அடித்திருக்கிறதா இந்த 'ராப்ரி தேவி' சீரிஸ்..!
 • சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றுக் கொண்டார்

 • சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை War Is Over என்ற குறும்படம் வென்றது

 • சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Boy And The Heron படம் வென்றது

 • சிறந்த மூல திரைக்கதைக்கான விருதை Anatomy Of A Fall திரைப்படத்திற்காக ஜஸ்டின் டிரெய்ட், ஆர்தர் ஹராரி ஆகியோர் வென்றனர்.

ஆஸ்கர் விருது
OTT தளத்தில் விலைப்போகாத “Manjummel Boys”! திரையில் வசூலை வாரிகுவித்த படத்திற்கு இவ்வளவுதான் விலையா?
 • சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அமெரிக்கன் ஃபிக்ஷன் திரைப்படத்திற்காக கோர்ட் ஜெஃபர்சன் பெற்றுக் கொண்டார்.

 • சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்காக விருதை The Zone Of Interest படத்திற்காகலண்டனை சேர்ந்த ஜானதன் கிளேசர் பெற்று கொண்டார்.

ஜானதன் கிளேசர்
ஜானதன் கிளேசர்
 • The Zone Of Interest படத்திற்காக டார்ன் வில்லர்ஸ், ஜானி பர்ன் ஆகியோர் சிறந்த ஒலிப்பதிவு விருதை பெற்றுக் கொண்டனர்.

 • Barbie படத்தின் What Was I Made For என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பில்லி எல்லிஷ் உள்ளிட்ட இருவர் விருதை பெற்றுக் கொண்டனர்.

ஆஸ்கர் விருது
J BABY REVIEW | பேபியாக ஊர்வசி செம்ம... மொத்தத்தில் J பேபி எப்படி..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com