நகைச்சுவை நடிகர் விக்னேஷ்வர ராவ் காலமானார்!

தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த நடிகர் நகைச்சுவை நடிகர் விக்னேஷ்வர ராவ் இன்று காலை காலமானார்.
விக்னேஷ்வர ராவ்
விக்னேஷ்வர ராவ்PT

தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த நடிகர் நகைச்சுவை நடிகர் விக்னேஷ்வர ராவ் இன்று காலை காலமானார்.

விக்னேஷ்வர ராவ்
‘படத்தில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ...’ - மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி சினிமாவில் கடந்து வந்த பாதை!

சென்னையை அடுத்த சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ளது. சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வந்த இவர், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பன்முகம் கொண்டவர். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர், தனது சினிமா வாழ்க்கையில் நுழையும் முன் எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார்.

விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்திலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் இரண்டு முறை தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெற்றார்.

நகைச்சுவை நடிகர் சேஷூ, டேனியல் பாலாஜி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், இப்போது நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இறந்துள்ளார். நடிகர்களின் இறப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com