"இந்த துறையில் Casting Couch Culture.." - சிரஞ்சீவி | Chiranjeevi | Mana Shankara Vara Prasad Garu
சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான தெலுங்கு படம் `Mana Shankara Vara Prasad Garu'. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. இப்படம் வெளியாகி 15 நாட்களில் உலக அளவில் 358 கோடி வசூல் செய்துள்ளது. படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனதை கொண்டாடும் விதமாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி சினிமாத்துறைக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும் எனப் பேசினார். அவர் பேசியபோது "ஆணோ, பெண்ணோ சினிமா துறைக்கு வர விரும்பினால் அவர்களை ஆதரிக்க வேண்டும். இது மிகச் சிறந்த துறை. இங்கு யார் உங்களை தடுக்கிறார்கள், எதிர்மறையான நபர்களாக இருக்கிறார்கள், மோசமான அனுபவங்கள் நேர்ந்தது என கூறினால், அதில் அவர்களின் தனிப்பட்ட விருப்பமும் பங்கும் வகிக்கிறது என நான் நம்புகிறேன். நீங்கள் கண்டிப்புடனும், தீவிரத்துடனும் இயங்கினால் உங்களிடம் யாரும் அத்து மீற மாட்டார்கள், Casting Couch Culture இருக்காது. உங்களின் ஒழுக்கம் சார்ந்தே எல்லாம் இருக்கிறது.
ஒருவேளை அப்படி இப்படி இருக்க வேண்டுமோ என்றெல்லாம் நினைக்கக் கூடாது. நீங்கள் Professional-ஆக நடந்துகொண்டால் மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்வார்கள். இந்த துறை என்பது ஒரு கண்ணாடி போன்றது.
நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும். கடின உழைப்பை மட்டுமே நம்பி இங்கு வாருங்கள். இது மிகச்சிறந்த துறை, இங்கு ஆண், பெண் என அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. அதற்கு உதாரணமாக என் மகள் சுஷ்மிதா, தத் அவர்களின் மகள்கள். ஆகியோரை எல்லாம் சொல்வேன்" என்றார்.

