Chidhambaram's Balan Movie Release date update
ChidhambaramBalan

`மஞ்சுமெல் பாய்ஸ்' இயக்குநரின் அடுத்த பட ரிலீஸ் எப்போது? | Balan The Boy

இப்போது சிதம்பரம் `பாலன்' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். `ஆவேஷம்' இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
Published on

Jan.E.Man படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். இப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய `மஞ்சுமெல் பாய்ஸ்' மிகப்பெரிய ஹிட்டானது. மலையாளத்தில் மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்றாலும் மொழி எல்லைகள் தாண்டி பலராலும் கொண்டாடப்பட்டது. மேலும் படத்தில் ’குணா’ பட ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டு வந்தது, ’கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தியது என பல ஹைலைட். அதில் உச்சபட்சமாக கமல்ஹாசன் படக்குழுவை அழைத்துப் பாராட்டினார்.

இப்போது சிதம்பரம் `பாலன்' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். `ஆவேஷம்' இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒரு மனிதனின் அடையாளம், அவனது வேர்கள் மற்றும் சமூகத்தில் அவன் கொண்டுள்ள பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான உணர்ச்சிகரமான கதையாக இப்படம் உருவாகியுள்ளதாம்.  இந்தப் படம் வருகிற ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவின் (Cannes Film Festival 2026) ஒரு பகுதியான 'மார்ச் டு ஃபிலிம்'-இல் (Marché Du Film) மே 14ஆம் தேதி திரையாக உள்ளது. விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் (KVN Productions) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (Thespian Films) இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Chidhambaram's Balan Movie Release date update
"ஜார்ஜ் குட்டி ஒரு கிரிமினல் அல்ல" - மோகன்லால் | Mohanlal | Drishyam 3
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com