\
chennai to japan rajinikanth fans celebrations jailer2 movie relesed
ஜெயிலர் 2எக்ஸ் தளம்

சென்னை முதல் ஜப்பான் வரை | அதிகாலை 3 மணிக்கே ஹவுஸ்ஃபுல்.. ’ஜெயிலர் 2’ ரிலீஸால் அதிர்ந்த உலகம்!

வட அமெரிக்கா முழுவதும் இதேபோன்ற காட்சிகள் காணப்பட்டன. கனடாவிலும் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன.
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜெயிலர் 2. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரஜினி உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், சுராஜ், வித்யாபாலன் என பல திரைநட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் இன்று (அக்.15) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் நிலையில், படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை மற்றும் பெங்களூரு முதல் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் வட அமெரிக்கா வரை படத்தின் வெளியீட்டைக் கொண்டாடுவதற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர்களில் திரண்டனர்.

chennai to japan rajinikanth fans celebrations jailer2 movie relesed
”தலைமுறை கடந்து மாயாஜாலம் நிகழ்த்தும்..” ஜெயிலர் 2 ரிலீஸ் முன்னிட்டு அனிருத் பதிவு!

ஆட்டம் பாட்டம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட கட்-அவுட்கள், பாலபிஷேகத்துடன் ஜெயிலர் 2 வெளியீட்டைத் திருவிழாவாக மாற்றினர். இது தமிழ்நாட்டைக் கடந்து உலகளிலும் எதிரொலித்தது. பெங்களூருவில், காலை 6.30 மணிக் காட்சிகளுக்கு முன்னதாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் நாகரியில் வரவேற்பு களைகட்டியது. இந்தியாவுடன் ஒரே நேரத்தில் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியான முதல் நிகழ்வாக ஜப்பான் அமைந்தது. அங்கும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

துபாயில், டெய்ரா சிட்டி சென்டர் அரங்குகள் அதிகாலை 3 மணிக்கெல்லாம் நிரம்பி வழிந்தன. சிங்கப்பூரில், ரசிகர்கள் முதல்காட்சிகளுக்காகத் திரையரங்குகளை நிரப்பி , தங்கள் கைபேசி டார்ச் விளக்குகளால் இருளை ஒளிரச் செய்தனர். வட அமெரிக்கா முழுவதும் இதேபோன்ற காட்சிகள் காணப்பட்டன. கனடாவிலும் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன.

chennai to japan rajinikanth fans celebrations jailer2 movie relesed
முதல் பாகத்தின் சாதனையை முறியடிக்குமா ஜெயிலர் 2 ? திரையுலகின் கவனம் ஈர்த்த முன்பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com