சினிமா
தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு: செப்.27ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு: செப்.27ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோருக்கு எதிராக அவர்களது மகன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ, வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை, தாய் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி, கடந்த ஏப்ரலில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் எதிர் மனுதாரர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.
அதனால் பதில் மனுக்களை திருப்பி அளித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினமே பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்: 'அரைத்த மாவை இனி அரைக்க முடியாது' - கொரோனா பேரிடரால் உருமாறும் பாலிவுட் சினிமா!