‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடித்த ‘டாடா’ ஹீரோயின் அபர்ணா தாஸ்!

டாடா திரைப்பட நடிகை அபர்ணா தாஸின் திருமணம், கேரளா மாநிலம் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.
அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்
அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்ட்விட்டர்

பீஸ்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர், மலையாள நடிகை அபர்ணா தாஸ். இவருக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தீபக் பரம்போலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

கேரளா மாநிலம் குருவாயூரிலுள்ள குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில், இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்கின்றனர்.

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்
“ 'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினி மாதிரி ரோல்னு விஜய்ட்ட சொன்னேன்!” - கில்லி ரீ-ரிலீஸ் ஷேரிங்க்ஸ்!

முன்னதாக, திருமணத்தை முன்னிட்டு அபர்ணா தாஸுக்கு ஹல்தி சடங்கு கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அபர்ணா தாஸும் - தீபக் பரம்போலும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்
20 ஆண்டுகளுக்கு பிறகும் ‘ஆல் ஏரியாலயும் ஐயா கில்லிடா..’ - ரீரிலீஸ் செய்த முதல் நாளிலேயே இவ்ளோ வசூலா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com