Martin Scorsese, Neeraj Ghaywan
Martin Scorsese, Neeraj GhaywanHomebound

"2000 வருடங்களாக Social Distancing, சாதி என்ற வைரஸ்!" - Martin Scorseseக்கு சாதியை விளக்கிய நீரஜ்

நாங்கள் 2000 வருடங்களாக Social Distancingஐ கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் முன்னோர்களும், உங்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளும் நிரந்தரமாக Social Distancingஐ கடைபிடிக்க வேண்டும்.
Published on

நீரஜ் கெய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் நடித்து செப்டம்பர் 26 திரையரங்கில் வெளியான படம் `ஹோம்பவுண்ட்'. திரைவிழாக்களில் பாராட்டுகளை குவித்த இந்தப் படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது. லாக்டவுனின் போது புலம்பெயர் தொழிலாளிகள் பட்ட துயரத்தை, ஒரு நிஜ கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் குவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நியூயார்க்கில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. அதன் பின் பிரபல  ஹாலிவுட் இயக்குநர் மற்றும் `ஹோம்பவுண்ட்' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான மார்ட்டின் ஸ்கார்சஸி, இயக்குநர் நீரஜ் கெய்வானுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தினார். அதில் இந்தியாவில் நிலவும் சாதியம் குறித்து விளக்குமாறு மார்ட்டின் கேட்க, கொரோனா வைரஸை மறை பொருளாக வைத்து விளக்கி பேசி இருக்கிறார் நீரஜ் கெய்வான்.

Homebound
Homebound

"நான் இதுவரை குறைவான வேலைகளே செய்திருந்தாலும், எல்லாவற்றையும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்தே எடுத்திருக்கிறேன். நான் என் குழந்தை பருவத்திற்கு நினைவுகளுக்கு சென்றேன். நான் ஒரு தலித் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். எனவே என்னுடைய சாதியால் நண்பர்களை இழப்பேனோ, வாய்ப்புகளை இழப்பேனோ என பயப்படுவேன். இந்தப் படத்தில் சந்தன் எப்படியோ, அது போலத்தான் நானும். எனவே நான் எப்போதும் நான் என்னுடைய பெயரை நீரஜ் குமார் என்றே சொல்வேன், என் உண்மையான பெயரை மறைப்பேன். பெயரில் என்ன இருக்கிறது என கூறிய சேக்ஷ்பியர், இந்தியாவுக்கு வர வேண்டும். இங்கு எல்லாமே பெயரில் தான் இருக்கிறது. உங்கள் பெயரை வைத்து உங்கள் முன்னோர்களின் 2000 ஆண்டு வரலாற்றை கண்டுபிடித்து விடுவார்கள்.

Martin Scorsese, Neeraj Ghaywan
"நானும் தவறு செய்திருக்கிறேன்" - அஞ்சான் ட்ரோல் பற்றி மனம் திறந்த லிங்குசாமி | Anjaan | Lingusamy

2019க்குப் பிறகு நமக்கு நன்கு பரிட்சயமான ஒரு விதி, Social Distancing. நாங்கள் 2000 வருடங்களாக Social Distancingஐ கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் முன்னோர்களும், உங்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளும் நிரந்தரமாக Social Distancingஐ கடைபிடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் அது ஏன் என எப்போதும் சொல்லவே இல்லை. அதற்கான ஒரே காரணமாக உங்களது பிறப்பு இருக்கிறது என நம்ப சொல்கிறார்கள். பிறந்ததும் அந்த வைரஸ் உங்களுக்கு வந்து விடுகிறது. அது என்ன வைரஸ்? எனக் கேட்டால், அது உன் முன்ஜென்மத்தில் கர்மபலன் என்கிறார்கள். இந்த வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதற்கு பரிசோதனை எதுவும் இல்லை. உங்கள் பிறப்பே அப்படியான பரிசோதனை தான்.

எனவே அனைவருடனும் சேர்ந்து வாழ உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உங்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.  ஒருவேளை பள்ளிக்கு நீங்கள் சென்றாலும், வகுப்பறையின் பின்புறம் தரையில் அமர வைக்கப்படுகிறீர்கள். வேலையும் கிடைப்பதில்லை, முன்னேற எந்த வாய்ப்பும் இல்லை. உங்களால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. உங்களை போலவே வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும். எனவே இந்த வைரசுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு போதும் புரிந்து கொள்ளப்போவதில்லை, இந்த வைரஸ் உங்களுக்குள் இல்லை, உங்களை ஒதுக்கி வைப்பவரின் மூளையில் தான் உள்ளது என. அந்த வைரஸ் தான் சாதி" என விளக்கியுள்ளார். இந்த பதில் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com