Sourav Ganguly biopic directed by Vikramaditya Motwane
Sourav GangulyDADA

சௌரவ் கங்குலி பயோபிக் ஆரம்பம்.. கங்குலியாக நடிப்பது யார் தெரியுமா? | DADA | Sourav Ganguly

`Udaan', `Lootera', `CTRL' உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் கவர்ந்த இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இப்படத்தை இயக்குகிறார். ஜனவரி மாதம் முதலே இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் வேலைகள் துவங்கியது.
Published on

இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் நவீன இந்திய கிரிக்கெட் அணியின் சிற்பியுமான சௌரவ் கங்குலியின் பயோபிக் பாலிவுட்டில் தயாராகிறது. கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த இவரது வாழ்க்கை வரலாறு `Dada: The Sourav Ganguly Story' என்ற பெயரில் படமாக தயாராகிறது.

Rajkumar Rao
Rajkumar Rao

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்குமார் ராவ்தான் இப்படத்தில் கங்குலியாக நடிக்கவுள்ளார். `Udaan', `Lootera', `CTRL' உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் கவர்ந்த இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே இப்படத்தை இயக்குகிறார். ஜனவரி மாதம் முதலே இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் வேலைகள் துவங்கியது. இதனை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா Eden Gardensல் நேற்று முதல் துவங்கியுள்ளது.

இதனை நடிகர் ராஜ்குமார் ராவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து, "And it begins … The one and only #DADA" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படம் கங்குலியின் கேப்டன்சி காலம் மற்றும் நவீன இந்திய கிரிக்கெட்டை வடிவமைப்பதில் அவரது பங்கு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025இல் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பாத்திரத்தில் நடிக்க சரியானவர் ராவ்தான் எனவும், அவருக்கு நான் எல்லா விதத்திலும் உதவுவேன் எனக் கூறி இருந்தார் சௌரவ் கங்குலி.

Sourav Ganguly biopic directed by Vikramaditya Motwane
" 'எதிர்நீச்சல்' எடுத்தபோது சிவா ஸ்டார் கிடையாது.." - துரை செந்தில்குமார் | Sivakarthikeyan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com