Sometimes its difficult to accept love says ​​Mrunal Thakur
Mrunal ThakurLove

"சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வது சிரமமானதாக இருக்கும்" - மிருணாள் தாக்கூர் சொன்ன விளக்கம்

காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்தப் பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும்.
Published on

ஏ.ஆர.ரஹ்மான் இசையில் அமீன், ஜெஸ்லீன் ராயல் பாடி வெளியாகியுள்ள பாடல், Bheegi Bheegi. மியூசிக் வீடியோவாக இதில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர். இந்தப் பாடலின் புரமோஷன் பேட்டிகளை அளித்து வருகிறார் மிருணாள்.

Mrunal Thakur
Mrunal Thakur

அப்படியான ஒரு பேட்டியில், ’காதல் என்றால் உங்களை பொறுத்தவரை என்ன’ என்ற கேள்வி கேட்கப்பட, அதற்கு பதிலளித்த மிருணாள், "காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்தப் பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். காதலில் முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதோ, அங்கீகரிப்பதோ சிரமமானதாக இருக்கும். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. 

காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது. ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன், காதலில் இருப்பவர்கள் யாரானாலும் அவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் பேதமில்லை, நீங்கள் காதல்வயப்பட்டால் do things for that person. அவர்களிடம் சரணடையுங்கள்." என்றார்.

Sometimes its difficult to accept love says ​​Mrunal Thakur
"வெற்றியாளர்களை விட, தோல்வியடைந்தவர்களை அதிகம் கவனிப்பேன்!" - ஏ ஆர் ரஹ்மான் | A R Rahman

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com