தள்ளிப்போகும் ‘ஜவான்’ திரைப்படம்? - இதுதான் காரணம்!

வரும் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஜவான்
ஜவான்ட்விட்டர்
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய்-அட்லீ-ஷாருக்கான்
விஜய்-அட்லீ-ஷாருக்கான்@Atlee_dir twitter

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயிண்மெண்ட் தயாரித்து வருகிறது. வரும் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியிட்டு தேதி மாற்றப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 4 ஆண்டுகள் கழித்து வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ படம் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால், அவசரக்கதியில் ‘ஜவான்’ படத்தை முடித்து வெளியிட நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ஜவான்
‘என்னது போஸ்ட் புரொடக்ஷனுக்கு ஆட்கள் தேவையா?’ - ‘ஜவான்’ படக்குழுவின் புதிய போஸ்டரால் குழம்பிய ரசிகர்கள்!

ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதிதான் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியான வி.எஃப்.எக்ஸின் சிலப் பகுதிகளுக்கு ஆட்கள் தேவை என்று ‘ஜவான்’ படக்குழு ட்விட்டரில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனால், திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் அப்போதே ட்விட்டரில் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ‘ஜவான்’ படம் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆகஸ்ட் 11-ம் தேதி பாலிவுட்டில் சன்னி தியோலின் ‘Gadar 2’ திரைப்படமும், ரன்பீர் கபூரின் ‘Animal’ படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரன்பீர் கபூரின் கோரிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 25-ம் தேதி ‘ஜவான்’ படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், தமிழில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால், ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தை முன்பாகவே, அதாவது ஜூலை 11-ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், ‘ஜவான்’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com