\
Nitesh Tiwari
Nitesh TiwariRamayana

"நேர்மை, உண்மை மற்றும் மரியாதையுடன்..." - ராமாயணா பற்றி நிதேஷ் திவாரி | Ramayana | Nitesh Tiwari

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம்.
Published on
Summary

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்த ‘ராமாயணா: பகுதி 1’ 2026 தீபாவளிக்கு வெளியாகிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், DNEG, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை, ராமாயணத்தின் காலத்தை வென்ற மனித மதிப்புகளை நேர்மை, உண்மை மற்றும் மரியாதையுடன் உலகத் தரத் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தும் முயற்சியாக திவாரி விளக்குகிறார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள படம் ‘ராமாயணா: பகுதி 1’. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

யஷ் - ராமாயணா
யஷ் - ராமாயணா

இந்நிலையில் படம் பற்றி கூறிய நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, "ராமாயணம் உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல. அது எடுத்துரைக்கும் காலத்தை வென்ற மனித மதிப்புகள்தான். ஒரு திரைப்பட இயக்குநராக, இந்தக் கதையை உலகளாவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், அது ஏற்கனவே உலகளாவிய கதையாகவே உள்ளது. என் பொறுப்பு, அதை முழுமையான நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் மிகுந்த மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதே.

Nitesh Tiwari
'தி ஒடிஸி' படத்தை பாராட்டி கமல் பதிவு | The Odyssey | Kamalhaasan

திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் எடுக்கப்பட்ட அனைத்தும் ஒரே எண்ணத்தால் வழிநடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம். அதே சமயம், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் தொழில்நுட்பங்களுடன் அதை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் இலக்காகக் கொண்டோம்.

உலகின் தலைசிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதை சொல்லிகளுடன் இணைந்து இந்தக் கனவை நனவாக்கியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் வெறும் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்ல, ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை உயிருடன் வைத்திருக்கும் அதன் ஆன்மாவையும் திரையில் கண்டு மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com