அஜய் தேவ்கன், மாதவன் படத்தில் இணையும் ஜோதிகா!

இந்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில், ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார் நடிகை ஜோதிகா.
ஜோதிகா-அஜய் தேவ்கன்-மாதவன்
ஜோதிகா-அஜய் தேவ்கன்-மாதவன்File image

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஜோதிகா
ஜோதிகா

அதன்பின்னர், அஜித்தின் ‘முகவரி’, விஜய்யின் ‘குஷி’, கமல்ஹாசனின் ‘தெனாலி’, சூர்யாவின் ‘காக்க காக்க’, விக்ரமின் ‘தூள்’ உள்பட பல வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘Kaathal:The Core’ படத்திலும், இந்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில், ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார் நடிகை ஜோதிகா. இதில் ‘ஸ்ரீ’ படத்தில் ஜோதிகாவின் போர்ஷன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த நிலையில், அப்படத்தின் ஹீரோவான ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை தான் என்றும், பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து தனது நடிப்பை பகிர்ந்து கொள்ள தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் நடிகை ஜோதிகா உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்து நடிக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இந்தப் படத்தை ‘சூப்பர் 30’, ‘குட்பை’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்குகிறார். வரும் ஜூன் மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி, லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. மேலும், அஜய் தேவ்கனுடன், மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாதவன் மற்றும் ஜோதிகா தமிழில் ‘டும் டும் டும்’ மற்றும் ‘ப்ரியமான தோழி’ ஆகியப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஜோதிகா-அஜய் தேவ்கன்-மாதவன்
25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com