\
Imtiaz Ali
Imtiaz AliMain Vaapas Aaunga

இம்தியாஸ் அலியின் `Main Vaapas Aaunga' ட்ரெய்லர் வெளியீடு! | Imtiaz Ali | A R Rahman

2024இல் இவர் இயக்கத்தில் வெளியான `Amar Singh Chamkila' படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர், தன் அடுத்த படத்துடன் வந்திருக்கிறார்.
Published on

`Jab We Met', `Rockstar', `Tamasha' போன்ற பிரபலமான படங்களை இயக்கியவர் இம்தியாஸ் அலி. 2024இல் இவர் இயக்கத்தில் வெளியான `Amar Singh Chamkila' படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் தன் அடுத்த படத்துடன் வந்திருக்கிறார். தில்ஜித், நசிருதீன் ஷா, ஷர்வரீ, வேதாங் ஆகியோர் நடித்துள்ள `Main Vaapas Aaunga' என்ற படத்தை இயக்கியுள்ளார் இம்தியாஸ்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இரு காலகட்டங்களில் நிகழும் கதையாக இப்படத்தின் கதை இருக்கப் போகிறது. 80 ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையில் பிரிக்கப்படாத இந்தியாவில் கீனுவுக்கும், ஜியாவுக்கும் இடையே மலரும் ஓர் இளம் காதல், நிகழ்காலத்தில் வயதானவராக இருக்கும் கீனு, இறப்பதற்கு முன்பு ஒருமுறை பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் கதை என்ற இரு கதைகளும் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கிறது.

`Main Vaapas Aaunga' திரைப்படம், பிரிவினை, காதல் மற்றும் எல்லா இன்னல்களையும் கடந்து ஒருவரை மீண்டும் ஒன்றிணைக்கும் சொந்த வேர்கள் போன்ற கருப்பொருள்களைத் தொட்டுச் செல்லும் ஒரு காதல் கதையாக அமையும் என தெரிகிறது. இம்தியாஸ் படங்களில் எப்போதும் அற்புதமான இசையைக் கொடுக்கும் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

Imtiaz Ali
பிரஷாந்த் நீல் - ஜூனியர் என் டி ஆரின் 'Dragon' கதை இதுதான்! | Prashanth Neel | NTR Jr
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com