Dhanush
DhanushRaanjhanaa

"என்னை விட்டுப் போக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்" - குந்தன் பற்றி தனுஷ் நெகிழ்ச்சி | Dhanush

குந்தன் என்ற பெயர் பனாரஸின் சந்துகளில் மக்கள் என்னை அழைப்பதை எதிரொலிக்கிறது, நான் இப்போதும் திரும்பிச் சிரிக்கிறேன்.
Published on

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள `Tere ishk mein' படம் நாளை (நவம்பர் 28) வெளியாகவுள்ளது. தனுஷை இந்தி சினிமாவில் `Raanjhanaa' மூலம் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் பின்பு `Atrangi Re' படத்திலும் நடிக்க வைத்தார். இப்போது மூன்றாவது முறையாக `Tere ishk mein' படைத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்திற்காக வாரணாசி சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார் தனுஷ். வாரணாசியில் முதல் இந்திப் படத்தில் நடித்த இடங்களுக்கு மீண்டும் சென்றதை பற்றி இன்ஸ்ட்டாவில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் "நினைவுப் பாதையில் ஒரு நடை, இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது, குந்தன். ஒரு தசாப்தத்திற்கு மேலாகியும் என்னை விட்டுப் போக மறுக்கும் ஒரு கதாபாத்திரம். குந்தன் என்ற பெயர் பனாரஸின் சந்துகளில் மக்கள் என்னை அழைப்பதை எதிரொலிக்கிறது, நான் இப்போதும் திரும்பிச் சிரிக்கிறேன்.

Dhanush
"நானும் தவறு செய்திருக்கிறேன்" - அஞ்சான் ட்ரோல் பற்றி மனம் திறந்த லிங்குசாமி | Anjaan | Lingusamy

எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன், இப்போது அதே சந்துகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்தது, ஒரு முழு வட்டம் போல் தோன்றுகிறது. இப்போது ஷங்கருக்கான நேரம். நாளை முதல் Tere ishk mein" எனப் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவின் கீழ் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தனர். பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் "தனுஷ் சார்.. என்ன ஒரு அழகான பயணம். BLOCKBUSTER!! CULT!!! LEGACY!!" என கமெண்ட் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com