‘ஜவான்’ படத்தை அடுத்து மற்றொரு பாலிவுட் நடிகரை இயக்கும் அட்லீ?

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Atlee-shah rukh khan-varun dhawan
Atlee-shah rukh khan-varun dhawanFile image

ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், நயன்தாரா, ப்ரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில், வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக வெளியீட்டு தேதி மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது.

Atlee-shah rukh khan-varun dhawan
தள்ளிப்போகும் ‘ஜவான்’ திரைப்படம்? - இதுதான் காரணம்!

வரும் செப்டம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ஜவான்’ படத்தைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் வருண் தவானை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கபீர் சிங்’ படத்தை தயாரித்த முராத் கேதான் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என்றும், அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ‘ஜவான்’ திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கானை சந்தித்து நகைச்சுவை கதை ஒன்றை அட்லீ கூறியிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், விஜய்யின் 68-வது படத்தை அட்லீ இயக்கப்போவதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது வருண் தவானை வைத்து இயக்கப்போவதாக தகவல் கசிந்து வரும் வேளையில், புதியப் படம் எதிலும் இயக்குநர் அட்லீ கமிட் ஆகவில்லை என்றும் புதுத் தகவல் பரவி வருகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com