அனுராக் காஷ்யப்பின் `Bandar' பட ட்ரெய்லர் வெளியீடு! | Anurag Kashyap | Bobby Deol
இந்திய சினிமாவில் கவனிக்கத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரின் Dev.D, Gangs of Wasseypur இரு பாகங்கள், Raman Raghav 2.0, Manmarziyaan எனப் பல படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான ’Nishaanchi’ மற்றும் இந்த ஆண்டு வெளியான ’Kennedy’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
தற்போது இவர் இயக்கியுள்ள `Bandar' ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் பாபி தியோல், சபா ஆசாத், சன்யா மல்ஹோத்ரா, சப்னா, இந்திரஜித் சுகுமாரன், ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புகழை இழந்து கொண்டிருக்கும் ஒரு டிவி நடிகர், அவரின் முன்னாள் காதலியால் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் சட்டப் போராட்டங்களுமே கதை.
இப்படத்தின் டீசர் மே 7ம் தேதி வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வியில் இருக்கும் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் மூலம் பழையபடி தன் புகழை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

