\
deva raagam - bku
deva raagam - bkudeva raagam - bku

35 ஆண்டுகளாக முடங்கியிருந்த படம்.. உயிர்கொடுத்த ’பெத்லகேம் குடும்ப யூனிட்’!

35 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'Anna' படம், Bethlehem Kudumba Unit படத்தில் இடம்பெற்ற Yavanakathayil பாடலின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது
Published on: 
Summary

35 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'Anna' படம், Bethlehem Kudumba Unit படத்தில் இடம்பெற்ற Yavanakathayil பாடலின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது. தயாரிப்பாளர் டொமிச்சன் முலகுப்பாடம் உரிமைகளை வாங்கி புதிய குழுவுடன் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்திய சினிமாவை பொறுத்தவரை படங்கள் கைவிடப்படுவது புதிதல்ல. பல படங்கள் அப்படி கைவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு படம் மலையாளத்தில் துவங்கப்பட்ட படம் `Anna'.  அர்விந்த் சுவாமி, ஸ்ரீதேவி நடிப்பில் துவங்க திட்டமிடப்பட்ட இந்தப் படம், படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. இப்போது இந்தப் படம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

anna malayalam movie
anna malayalam moviesony music

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி ஹிட்டான Bethlehem Kudumba Unit படம் தான் அதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? இந்தப் படத்தில் `Anna' படத்திற்காக உருவாக்கப்பட்ட Yavanakathayil பாடலை ஒரு காட்சியில் பயன்படுத்தி இருந்தனர். கூடவே அப்படம் உருவாக்கப்படவில்லை என்ற தகவலையும் வைத்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் பலருக்கும் Anna படம் பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் தெரியவந்து ஒரு வைரல் விஷயமாகி இருக்கிறது.

deva raagam - bku
”தலைமுறை கடந்து மாயாஜாலம் நிகழ்த்தும்..” ஜெயிலர் 2 ரிலீஸ் முன்னிட்டு அனிருத் பதிவு!

ANNA படம் என்ன ஆனது?

மலையாளத்தில் Tiger Salim படம் மூலம் அறிமுகமான ஜோஷி `New Delhi', `No.20 Madras Mail', `Lelam', `Twenty:20', `Run Baby Run', `Porinju Mariam Jose', `Antony' எனப் பல படங்களை இயக்கினார். இவர் நாவலாசிரியர் என் மோகனன் எழுதிய கதையை வைத்து 1990ல் துவங்கிய படம் தான் `Anna'. இந்தப் படம் இசையை மையமாக கொண்ட படம் என்பதால், படத்தின் பாடல்கள் உருவான பின்புதான் படப்பிடிப்பு என உறுதியாய் இருந்தது தயாரிப்பு தரப்பு. எனவே பாடலாசிரியர் ஷிபு சக்ரவர்த்தி எட்டு பாடல்களையும் எழுத ஓசேப்பச்சன் இசையமைத்து முழு ஆல்பமும் தயாரானது.

ஆனால் அப்போது உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த அர்விந்த் சுவாமி, ஸ்ரீதேவி இருவரது தேதிகளை பெறுவது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்ததால் படப்பிடிப்பே துவங்கப்படாமல் இருந்தது. ஒருகட்டத்தில் அர்விந்த் சுவாமி தேதி கிடைத்தும், ஸ்ரீதேவி தேதி கிடைக்காததால் மீனாவை நாயகியாக்க முயன்றனர். ஆனால் பெரிய இடைவெளியானதால், படத்தை எடுக்கும் ஆர்வம் படக்குழுவுக்கு குறைந்தது. இயக்குநர் ஜோஷியும் காத்திருக்க மனமில்லாமல், மம்மூட்டி நடிப்பில் Sainyam படத்தை இயக்க கிளம்பிவிட்டார்.

`Anna' படம் வெளியாகாமல் போனாலும், அதற்காக உருவாக்கப்பட்ட பாடல்களும், அதற்கு செய்த செலவும் வீண் போகக்கூடாது என நினைத்த தயாரிப்பு நிறுவனம், படத்தின் பாடல்களை மட்டும் 1995ல் வெளியிட்டது. அந்தப் பாடல்களுக்கு என தனி ரசிகர்பட்டாளம் உருவானது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் பாடல்கள் தான், இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க முக்கிய காரணமாக இருக்கப் போகிறது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். Bethlehem Kudumba Unit படத்தில் இடம்பெற்ற `Anna' படத்தின் Yavanakathayil பாடல் பிரபலமானது. இதன் மூலம் `Anna' படத்தின் மீது கவனம் ஏற்பட்டத்தை கவனித்துள்ளார் தயாரிப்பாளர் டொமிச்சன் முலகுப்பாடம். மலையாளத்தில் Pulimurugan உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த டொமிச்சன், `Anna' படத்தின் உரிமைகளை வாங்கியுள்ளார். கூடவே இந்தப் படத்தை புதிய குழுவை வைத்து உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். விரைவில் இதில் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர் பற்றிய அறிவிப்பு வரும் என கூறப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க இருந்து, பின்னர் கைவிடப்பட்ட ஒரு படம் மீண்டும் புத்துயிர் பெற Bethlehem Kudumba Unit காரணமானது பற்றி தற்போது இணையத்தில் பேசப்படுகிறது.

deva raagam - bku
மனிதனின் ஒரே நோக்கம் அதுதானா..? மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com