கணவருடன் யோகா பிபாசா பாஷு ஸ்டைல் !

கணவருடன் யோகா பிபாசா பாஷு ஸ்டைல் !

கணவருடன் யோகா பிபாசா பாஷு ஸ்டைல் !
Published on

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது கணவர் கரன் சிங் ஹ்ரோவருடன் பிபாசா பாஷு யோகா பயிற்சி செய்த படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. 
யோகா தினத்தை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பலரும் யோகா பயிற்சி செய்த படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை தனது கணவர் கரன் சிங் ஹ்ரோவருடன் பிபாசா பாஷு யோகா தினத்தை கொண்டாடினார். இருவரும் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் பதிவேறி உள்ளார்.

உத்ராசனா, ஹலாசனா உள்ளிட்ட யோகா முறைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்:  வாழக்கையில் யோகாவை விரும்புங்கள்.  அது உங்களது வாழ்க்கையை பிடிப்போடும், சம நிலையோடும் அழகாக மாற்றி விடும். இது ஒரு மேஜிக். பயிற்சி செய்வோம்...பயனைப்பெறுவோம்’ என தெரிவித்துள்ளார் பிபாசா பாஷு. 


38 வயதாகும்  பிபாசா பாஷும்,  35 வயதாகும் கரன் சிங் ஹ்ரோவரும் யோகா பயிற்சி செய்வதால் பிட்டாக இருப்பதாக கூறி உள்ளனர்.  உலகில் எங்கு சென்றாலும் அவர்கள் ஒரு நாள் கூட யோகா பயிற்சியை நிறுத்தியல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com