பிக்பாஸ் சீசன் 7ல் இன்று இந்த பிரபலம் வெளியேற்றப்பட்டாரா?

முதல்நாள் முதல் இன்றுவரை சமையலை தவிர வேறு எதுவுமே இவர் செய்யாததுதான் எவிக்‌ஷனுக்கு காரணம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
பிக்பாஸ்
பிக்பாஸ்PT

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நேரத்தில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, ஐஷூ, அனன்யா, ரவீனா, யுகேந்திரன், ப்ரதீப், ஜோவிகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாடகர் மலேஷியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் அன்பே அன்பே, யூத் போன்ற சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் பாடகர்தான். பல ஐகானிக் பாடல்களை பாடியுள்ளார். தற்போது அனைத்திலிருந்தும் ஒதுங்கி, வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

நீண்ட நாளுக்குப்பிறகு மீண்டும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துக்கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சமயம் இவரது அப்பாவின் நினைவை நினைவு கூர்ந்துவிட்டு, அவரது ஞாபகமாக மூக்கு கண்ணாடியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஒருவாரமேயான நிலையில், இவர் எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

முதல்நாள் முதல் இன்று வரை சமையலை தவிர வேறெதுவும் செய்யாததுதான் இவரது எவிக்‌ஷனுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ்
”ச்சீ… இந்தப்பழம் புளிக்கும்“ - முதல் நாளிலேயே அலப்பறையை கிளப்பிய பிக் பாஸ் சீசன்7 - நடந்தது என்ன?!

ஆரம்பத்தில் கேப்டன்ஷிப் பதவிக்காக அனன்யாராவ் கேட்ட கேள்வியான “பிக்பாஸ் வீட்டில் இதுவரை வந்துள்ள போட்டியாளார்களில் எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள்” என்ற கேள்விக்கு யுகேந்திரன் சரியான பதில் கூறாமல் இருந்தார். இதனால் அனன்யாவிற்கும் இவருக்கும் இடையில் கேப்டன்ஷிப் பதவிக்கான இழுபறி நடந்தது. அதற்குள் நேரம் கடந்து விடவே... அடுத்ததாக வந்த விஜய் வர்மாவிடம் கேப்டன்ஷிப் பதவி தானாகவே சென்றது.

இவரிடம் கேப்டன் பதவி இருந்திருந்தால் இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் இவரின் பெயர் இடம் பெற்றிருக்காது. தவிர, ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவருக்கு உதவி செய்வதாய் நினைத்து நூடுல்ஸ் செய்வதற்கு ஹெல்ப் செய்ய போய், இவரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மொத்தமாய் அனுப்பி விட்டிருந்தார் பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவரை நாமினேஷன் செய்யும் சமயத்தில் இவரின் பெயரும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டது. இது இப்படி இருக்க... இவர் எல்லோரிடமும் ஒரு சுமூக உறவை தான் கொண்டிருந்தார். முதல்நாள் இவர், ப்ரதீப், மாயா, மணிச்சந்திரா, ரவீனா போன்றோர் கூடி தள்ளிபோகச் சொல்லாதே, அன்பே அன்பே, உன்னை அறிந்தால், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ராஜராஜ சோழன் நான், லூசு பெண்ணே லூசு பெண்ணே, வெண்நிலவே வெண்நிலவே, போன்ற பாட்டை பாடி ரசிகர்களை கவர்ந்தனர். இதில் இவர் குரலும் ஸ்ருதியும் இவர் அப்பாவை நினைவூட்டியது.

பிக்பாஸ்
BIGG BOSS DAY 3 | “நீங்கள் செய்வதெல்லாம் சரியென்று சொல்ல முடியாது” - பவாவின் கதையால் வந்த வினை!

இவர் பிக்பாஸில் அடுத்த வாரம் வரை நீடித்திருந்தால் ரசிகர்கள் மனதில் இவருக்கென்று ஒரு இடத்தை பெற்றிருந்திருப்பார் என்பது நிச்சயம். ஆனால் அதற்கு முன்னதாக இவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் கசிந்துள்ளது. இன்று நடந்த நிகழ்ச்சி நாளைதான் டெலிகேஸ்ட் ஆகுமென்பதால், நாளையே தெரியவரும். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று.!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com