”ச்சீ… இந்தப்பழம் புளிக்கும்“ - முதல் நாளிலேயே அலப்பறையை கிளப்பிய பிக் பாஸ் சீசன்7 - நடந்தது என்ன?!

"புது வீடு, விதி மாறி இருக்கு, விளையாட்டும் மாற போகுது" என்று கம்பீர குரலில் கமல் கூறும் சமயம், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து அலாரம் அடிக்கிறது. அகம் டிவி வழியாக அகத்திற்குள் யார் என்று அவருடன் சேர்ந்து நாமும் பார்க்க…
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7 முகநூல்

மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று தொடங்கியுள்ளது.

"புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் நாம் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். புதிதாக செய்யப்படும் எக்ஸ்பிரிமெண்ட் எல்லாம் வெற்றியில் முடியும் என்று இல்லை. அது நமக்கு பாடமாக கூட மாறும்" என்றபடி பிக் பாஸ் ஷோவுக்குள் அறிமுகம் ஆன கமல்ஹாசன், "இப்படி ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்ய தைரியம் தேவை அதனால் தான் நான் இங்கு நிற்கின்றேன்" என்றார்.

பிக்பாஸ் சீசன் 7 - கமல் ஹாசன்
பிக்பாஸ் சீசன் 7 - கமல் ஹாசன்முகநூல்

"புது வீடு, விதி மாறி இருக்கு, விளையாட்டும் மாற போகுது" என்று கம்பீர குரலில் கமல் கூறும் சமயம், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து அலாரம் அடிக்கிறது. அகம் டிவி வழியாக அகத்திற்குள் யார் என்று அவருடன் சேர்ந்து நாமும் பார்க்க…

வீட்டிற்குள் மிக சாதாரண தோற்றத்தில் மற்றொரு கமல். இரு கமல்களும் டீவி வழியாக ஒருவருக்குள் ஒருவர் பேசிக் கொள்கின்றனர். பிறகு வீட்டினுள் இருக்கும் கமல் வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பிக்கிறார். புது பிக்பாஸ் வீட்டில் ஒரு வாசல், இரு வீடு, ஒரு கிச்சன் மட்டுமே இருக்கிறது. ”என்னடா இது ஒரு கிச்சன் தான் இருக்கிறது… போட்டியார்கள் என்ன செய்யப் போகிறார்களோ…?” என்றபடி கமல் வெளியேறி செல்கிறார்.

கூல் சுரேஷ்

பிறகு மேடையில் இருக்கும் கமல் போட்டியாளர்கள் யார்யாரென்று ஒருவர் பின் ஒருவராக அழைக்கிறார்.

முதலில் வருவது கூல் சுரேஷ். கமலை பார்த்ததும், ஆனந்த கண்ணீர் வடிந்தது அவருக்கு. கூல் சுரேஷை கமல் அறிமுகப்படுத்தியதும், சுரேஷ் தன்னை பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறார். அப்போது அவர் பேசுகையில் “அனைவரும் என்னை ஜோக்கர் என்று தான் கூறுவர். ஒரு சீட்டாட்டத்திற்கு ஜோக்கர் எத்தனை முக்கியமோ அதை விட முக்கியம் அடுத்தவர்களை சிரிக்க வைப்பது .” என்று தனது வருத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றி கூறுகிறார்.

கூல் சுரேஷ்.
கூல் சுரேஷ்.முகநூல்

கேப்டன் பதவிக்கு இதுதான் கண்டிஷன்!

பிறகு கமல் அவரை அங்கு இருக்கும் பரிசு பெட்டியை திறக்க சொல்கிறார். அதில் சுரேஷ் என்று பெயர் பொறித்த டாலர் செயின் இருக்கிறது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். "நான் தூணிலும் இருப்பேன். துரும்பிலும் இருப்பேன், இரும்பிலும் இருப்பேன் இனிக்கின்ற கரும்பிலும் இருப்பேன்" என்று பஞ்ச் டயலாக்கை கூறிவிட்டு, வீட்டை சுற்றி பார்க்கிறார். அப்பொழுது பிக்பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு வரச் சொல்கிறார்.

ரூமிற்கு சென்றவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படுகிறது. அதற்கான பேட்ச்சை பெற்றுகொள்கிறார். கூடவே ஒரு நிபந்தனை ஒன்றையும் பிக் பாஸ் விதிக்கிறார் .

அதன்படி ”வருகின்ற வாரம் வரை நீங்கள் கேப்டன் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அடுத்து உள்ளே வருபவர்கள் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்று கூற வேண்டும். மாறாக அவர்கள் பதவி வேண்டும் என்று கூறினால் இருவரும் சேர்ந்து, ஒரு முடிவு செய்து யார் கேப்டன் பதவியைப் பெற்றுக் கொள்வது என்ற முடிவு செய்ய வேண்டும். முடிவு ஏற்படாத பட்சத்தில் கேப்டன் பதவி அடுத்து வருபவர்களிடம் சென்றுவிடும்” என்கிறார் பிக்பாஸ்.

”சரி பிக்பாஸ்” என்றபடி கூல் சுரேஷ் கேப்டன் பேட்ச்சை தனது கையில் கட்டி கொள்கிறார்.

பூர்ணிமா ரவி

அடுத்த போட்டியாளராக வேலூரைச் சேர்ந்த பூர்ணிமா ரவியை அறிமுகபடுத்துகிறார் கமல்ஹாசன்.

பூர்ணிமா ரவி
பூர்ணிமா ரவி முகநூல்

இவர் தன்னை குறித்து கூறிகையில் “நான் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தேன். பிறகு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு தற்போது பிக் பாஸ் நுழைந்திருக்கிறேன். எனக்கு நண்பர்கள் மிகவும் பிடிக்கும். ஆகையால் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை. இங்கு புது நண்பர்கள் கிடைப்பார்கள் ” என்றபடி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அவருக்கு பரிசு பெட்டிக்குள் விசில் பரிசாக கிடைக்கிறது.

அங்கு போட்டியின் விதிமுறைப்படி கூல் சுரேஷிடம் நைசாக பேசி அவரது கேப்டன் பேட்சை வாங்கிவிடுகிறார்.

ரவினா தாஹா!

அடுத்தது, ஒரு நடனத்தை அறங்கேற்றிவிட்டு வரும் ரவினா தாஹாவை போட்டியாளராக கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

raveena daha
raveena dahaFace book

”எனது வெற்று பக்கத்தில் பிக்பாஸ் மூலம் கதை எழுத வந்துள்ளேன்” என்று கூறும் ரவினா குழந்தைதனமாக இருக்கிறார், பரிசு பெட்டிக்குள் இருந்து பட்டர்ப்ளை ரிங் அவருக்கு கிடைக்கிறது. அதை தன்னுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு செல்கிறார். பிறகு போட்டி விதியின் படி பூர்ணிமாவிடம பேசி கேப்டன் பேட்சை பெற்று விடுகிறார்.

ப்ரதீப் ஆண்டனி

ரவினா தாஹாவை தொடர்ந்து ப்ரதீப் ஆண்டனியை கமல்ஹாசன் அறிமுகபடுத்துகிறார்.

பிரதீப் அந்தோனி
பிரதீப் அந்தோனிமுகநூல்

இவர் தன்னை குறித்து கூறிகையில், நான் நிறைய புத்தகங்களை படித்திருக்கிறேன். நேர்மையாக இருப்பது எனக்கு பிடிக்கும். சினிமா துறையில் காலடி வைக்க விருப்பம் கொண்டு பிக்பாஸ் வந்தேன்” என்கிறார் . இவருக்கான பரிசுபெட்டிக்குள் வீடியோ கேம் ரிமோட் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் செல்கிறார். இவரது சிரிப்பு தான் ஹைலைட். பிறகு அப்படி இப்படி பேச்சால் ரவினாதாஹாவிடமிருந்து கேப்டன் பேட்சை பெற்று விடுகிறார்.

நிக்ஸன்!

அடுத்த போட்டியாளராக நிக்ஸனை அறிமுகப்படுத்துகிறார் கமல். இவர் ஒரு நடிகர். சினிமாவிற்குள் தனக்கான இடத்தை பிடிக்க ஆசைப்படுபவர்.

நிக்ஸன்
நிக்ஸன் முகநூல்

அதனால் ”சினிமாவில் எந்த வேலை வந்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறும் அவருக்கு பரிசு பெட்டியில் இருந்து முகம் பார்க்கும் கண்ணாடி கிடைக்கிறது. அதில் ‘you have you..’ என்று எழுதப்பட்டிருந்தது. பரிசுப் பொருளுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். பிறகு பிக்பாஸின் ரூல்ஸ் படி கேப்டன் பேட்சை தன்னிடம் தருமாறு ப்ரதீப் ஆண்டனியிடம் கேட்கிறார். ஆனால் ப்ரதீப் தரமறுத்ததால், நிக்ஸன் ”ச்சீ… இப்பழம் புளிக்கும்“ என்ற ரீதியில் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்று விட்டு கொடுத்து விடுகிறார். ஆகையால்தற்போது வரை ப்ரதீப் வசம் கேப்டன் பேட்ஸ் இருக்கிறது.

வினிஷா!

அடுத்ததாக வினிஷாவை வைத்தார். இவர் ஏற்கனவே பாரதி கண்ணம்மா நாடகத்தில் கண்ணமா கதாபாத்திரத்தில் நடித்தவர்.

வினிஷா
வினிஷாமுகநூல்

”கருப்பி என்று நண்பர்கள் என்னை அழைத்ததால் நான் அதிக மனவருத்தத்திற்கு உள்ளானேன். அதையே எனது பாஸிட்டிவாக மாற்றிக்கொண்டு மேலே வந்தேன்” என்று கூறிய இவருக்கு பரிசு பெட்டியில் 4 கருப்பு டைமன் கல் பரிசாக கிடைத்தது. அதனுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். தன் கேப்டன் பதவிக்காக ப்ரதீப்புடன் விவாதம் செய்கிறார். இருவருக்குள்ளும் யார் கேப்டன் என்ற முடிவு எட்டப்படவில்லை.

மணிசந்திரா!

அடுத்ததாக மணிசந்திராவை அறிமுகபடுத்தி வைக்கிறார் கமல் ஹாசன். இவர் ஒரு டான்சர்.

மணிசந்திரா
மணிசந்திராமுகநூல்

ஜோடி சீசன் 9 ல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர். தன்னை குறித்து அவர் கூறுகையில், ”நான் மிகவும் ஜாலியான டைப் யார் பிக்பாஸ் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்” என்று சொல்கிறார். இவரின் பரிசு பெட்டிக்குள் குருநாதா என்ற வசனம் பொறித்த பனியன் கிடைக்கிறது. அதை எடுத்துக கொண்டு வீட்டிற்குள் செல்கிறார். பிரதீப்புக்கும் வினிஷாவுக்கும் இடையில் கேப்டன்ஷிப் முடிவு எட்டப்படாத நிலையில் விதிமுறைப்படி இவர் கைக்கு கேப்டன் பேட்ச் கிடைக்கிறது.

அக்க்ஷயா!

அடுத்த போட்டியாளராக அக்க்ஷயா வருகிறார்.

அக்க்ஷயா
அக்க்ஷயாமுகநூல்

இவர் தன்னை குறித்து கூறுகையில், ”நான் நடிகையாக வரவேண்டும். அதற்கான முதல் அடி இந்த பிக்பாஸ் “என்றார். இவர் கையில் பரிசாக ஆலுவேரா செடி கிடைக்கிறது. அத்துடன் வீட்டிற்குள் செல்கிறார். அங்கு தனக்குரிய கேப்டன் உரிமையைப் பெறுவதற்கு, மணிச்சந்திரனுடன் விவாதத்தில் ஈடுபடுகிறார்

ஜோவிகா!

அடுத்த போட்டியாளராக ஜோவிகா களம் இறங்குகிறார். இவர் பிரபல வனிதா விஜயகுமாரின் மகள். தன்னை குறித்து அவர் கூறுகையில், “எனக்கு படிப்பு சரியாக வரவில்லை. அதனால் நடிகையாக வரவேண்டும் என்பது எனது எண்ணம். அதனால் தான் நான் பிக்பாக்ஸிற்குள் நுழைந்தேன்.

ஜோவிகா
ஜோவிகாமுகநூல்

என் தாத்தா, பாட்டி அம்மா எல்லோரும் நடிகர்கள் தான் அதனால் நானும் இத்துறையை தேர்ந்தெடுத்தேன். என் அம்மா என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். எனக்கு என் அம்மா என்றால் பிடிக்கும்” என்றார். இவருக்கு பரிசாக அம்மாவும் பெண்ணும் இருப்பது போல் ஒரு மொமெண்டோ பெட்டிக்குள் இருந்து கிடைக்கிறது. அதை அணைத்தபடி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்PT

மீதமுள்ள போட்டியாளர்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com