ஸ்ருதிகா
ஸ்ருதிகாpt web

இந்தி பிக்பாஸில் வெளியேறுவதாக அறிவித்த ஸ்ருதிகா.. நடந்தது என்ன? வெளியேற காரணம் என்ன?

இந்தி பிக்பாஸில் இருந்து ஸ்ருதிகா வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, திடீரென ஸ்ருதிகா வெளியேறுவதற்குக் காரணம் என்ன? விபரங்களைக் காணொளியில் காணலாம்...
Published on

தமிழில் பிக் பாஸ் சீசன் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வருடந்தோறும் பிக்பாஸ் துவங்கினாலே அது டாக்கிலே இருந்து வரும் என்றாலும், இந்த முறை தமிழ் பிக்பாஸைத் தாண்டி, இந்தி பிக்பாஸ் குறித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலாக பேசப்படுகிறது. இந்தி பிக்பாஸில் இறங்கி கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிகாதான் இதற்கு முழு முதற்காரணம்.

ஸ்ருதிகா
ஸ்ருதிகாpt web

இந்தியில் பிக் பாஸ் 18வது சீசன் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானுக்கே அவ்வப்போது தமிழை கற்றுக்கொடுத்து வருகிறார் ஸ்ருதிகா. தமிழ் சினிமாவில் பெரிதாக கொண்டாடப்படாவிட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கை, பிஸினஸை கையாளும் விதங்களால் பலராலும் ஈர்க்கப்பட்ட நபர்தான் ஸ்ருதிகா.

ஸ்ருதிகா
7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், 30 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய ஆச்சர்யம்... எப்படி சாத்தியமானது?

விஜய் டீவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கியவர், இந்தி பிக்பாஸில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். டாஸ்க்கை கையாளும் விதம், சுட்டித்தனங்கள், சக போட்டியாளர்களிடம் தமிழில் பேசுவது என்று இவரது செயல்பாடுகள் சமூகவலைதளத்தில் அவ்வப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையேதான், சமீபத்தில் வெளியான ஃப்ரொமோ வீடியோவில், ஸ்ருதிகா கதறி அழுவது போன்றும், பிக் பாஸை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.

இதனைப் பார்த்த பலரும், எல்லாம் நல்லாத்தானே போய்ட்டிருந்துச்சு.. இப்போ என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசன் 18ல் ஸ்ருதிகாவுக்கு நெருங்கிய தோழியாக இருப்பவர்தான் Chum Darang. இந்த வார எலிமினேஷில் இருக்கும் நபரை காப்பாற்றிவிட்டு மற்றொருவர் அந்த இடத்திற்கு வருவதற்கான டாஸ்க் நடந்துள்ளது. அப்போது தனது தோழி Chum Darangஐ காப்பாற்றிவிட்டு எலிமினேஷனில் இடம்பெற்றுள்ளார் ஸ்ருதிகா.

இந்த நேரத்தில் Chum Darangக்கும், ஸ்ருதிகாவுக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட, ஸ்ருதிகா கதறி அழுதுள்ளார். தான் சீசனில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, Chum Darangகும் கதறி அழுதுள்ளார். இருவரும் வெடித்து அழும் காட்சிகளைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஸ்ருதிகா
“வேகமாக குணமடைகிறார்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com