“பிக்பாஸ பார்க்கணுமே..” பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெயம் ரவி? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..

ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
kamal, jayam ravi
kamal, jayam ravipt web

நடிகர் ஜெயம்ரவி தற்போது சைரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ப்ரதர், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து அடுத்து வெளியாக இருக்கும் சைரன் திரைப்படத்தின் டீசர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

jayam ravi
jayam ravipt desk

ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் சைரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான இறைவன், அகிலன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்மறையாக ஆன நிலையில் தற்போது சைரன் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் இத்திரைப்படத்தின் டீசர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியாக இருக்கிறது. வீட்டிற்குள் படக்குழுவினர் செல்வார்களா? அல்லது கமல்ஹாசனோடு ஸ்டூடியோவில் வைத்து டீசரை வெளியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

BIGG BOSS DAY
BIGG BOSS DAY

அதேசமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெயம்ரவி செல்ல இருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது. ப்ரதீப் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் அது குறித்தான பேச்சு தற்போது வரை ஓயவில்லை. ப்ரதீப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வாரத்திலும் எலிமினேட் குறித்தான பேச்சுகள் இருக்க அதற்கான எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியிடப்படுவதும் ஜெயம்ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வாரா என்ற கேள்வியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com