BIGG BOSS DAY 26 | “இது அன்பு என்னும் டிராமா”

பூர்ணிமாவோ… “இந்த வீட்ல என்ன நடக்குது? இங்க இருக்கவங்க அங்க போறதும், அங்க இருக்கவங்க இங்கே வர்றதும், சகிக்கல… “ என்கிறார்.
பூர்ணிமா - விஷ்ணு விஜய்
பூர்ணிமா - விஷ்ணு விஜய்BIGG BOSS DAY 26

அன்பு என்னும் டிராமா...

Ranking டாஸ்க் ஒருவழியாக சண்டை சச்சரவுடன் நடந்து முடிந்தது. இதில் கூல் சுரேஷ் 4-வது இடத்தை பெறுவதற்கு வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரால் அந்த இடத்தை தக்கவைக்க முடியவில்லை. அன்றிரவு விஷ்ணு இந்த டாஸ்கைப்பற்றி பூர்ணிமாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“மாயா என்னமோ டைட்டில் வின் பண்ணுவாங்களாம்... அதில் வரும் பணத்தை பிரதீப்பிற்கு தருவாங்களாம்... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு” என்றார் விஷ்ணு.

பூர்ணிமா உடனே “இது அன்பு என்னும் டிராமா, இந்த டிராமா நல்லாவே இல்லை. இதுல மணியும் ரவீனாவும் கிரிஞ்ச் பண்ணிட்டு இருக்காங்க” என்றார்.

மணி - ரவீனா
மணி - ரவீனாBigg Boss

அன்று இரவு விஷ்ணுவிற்கு தூக்கம் வந்திருக்காது போல... மறுநாள் காலை மாயா தூக்கி எழுந்ததும் விஷ்ணு இதைப்பற்றி மாயாவிடமே கேட்டார். “நீங்க திடீர்னு பிரதீப்ப அண்ணன்ணு சொல்றதும், 50 லட்ச ரூபாயை அவருக்கு தருவேன்னு சொல்றதும் நம்புற மாதிரியா இருக்கு?” என்றார்.

“நீங்க என் ட்ரஸ்ட்ட (நம்பிக்கையை) சந்தேகப்படுறீங்க… அவரு யாரு தெரியுமா? என் உடன் பிறவா சகோதரன். நீங்க இப்படி கேட்கறது நல்லா இல்ல” என மாயா பதில் சொல்கிறார்.

விஷ்ணு சொல்றமாதிரி யாராவது 50 லட்ச ரூபாயை தூக்கி தருவாங்களா? இந்த மாயா பொண்ணு கம்பிகட்டுற கதையெல்லாம் சொல்லிட்டு திரியுது!

அடுத்து பூர்ணிமாவும் இதே கேள்வியை மாயாவிடம் கேட்க, மாயா “இந்த கேள்வி உங்க அறியாமையிலிருந்து வருது. விஷ்ணு சொல்லலாம். அது எனக்கு பெருசா தெரியல… ஆனா என்னுடன் பழகிய நீயே இத எங்கிட்ட கேக்கறதுதான் கஷ்டமா இருக்கு” என்றார்.

ஆனால் இந்த கேள்வி எல்லாருக்கும் வருது மாயா.

பூர்ணிமா
பூர்ணிமாBigg Boss

அடுத்து, ஷாப்பிங் ரீ-பேமெண்ட் டாஸ்க்!

இதில் அக்‌ஷயா, விக்ரம், ஐஷூ விளையாண்டார்கள். ஆனால் நேரம் முடிந்ததாக பிக்பாஸ் அறிவிக்கவும், இப்போட்டி தோல்வியை தழுவியது. இதில் இவர்களுக்கு ஸ்மால் பாஸ் வீட்டு சாப்பாடு கட் என்றதும் பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் “அடடா…. உப்பு போடாத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது” என்று கவலைபட்டார்கள். இதில் கூல் சுரேஷ் கமெண்ட்ரி என்ற பெயரில் உளறிக்கொட்டி கிரிஞ்ச் செய்துக்கொண்டிருந்தார்.

‘உப்பில்லாத சாப்பாட்டை நான் எப்படி சாப்பிடுவது’ என்று நினைத்த மாயா, கூல் சுரேஷ், ரவீனா ஆகியோர் விதியை மீறி நல்ல சாப்பாட்டிற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றனர். கேப்டன் பூர்ணிமா “ஏப்பா கண்ணுகளா… நீங்க மூணுபேரும்  இந்த வீட்டிற்கு திரும்பி வந்துடுங்கப்பா… பிக்பாஸுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று கெஞ்சினார். காலில் விழாத குறைதான்.

ஆனால் பிரதீப் “இவங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிகள். அவர்களுக்கு சாப்பாடு போடுவது எங்களின் கடமை” என்றார்.

கூல் சுரேஷ் - மாயா
கூல் சுரேஷ் - மாயாBigg Boss

ஆனால் பிக்பாஸ் “விதிமீறல் அடிப்படையில் சென்ற மூவருக்கும் நேரிடையான நாமினேஷன்” என்று சொன்னதும், பயந்தடித்துக்கொண்டு போன வேகத்திலேயே மூவரும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வந்தனர். கூல்சுரேஷும், மாயாவும் சென்றுவிட... ரவீனா மட்டும் அங்கேயே இருக்க... அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியில் விடுகிறார் பிரதீப்.

பற்றாகுறைக்கு பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். பூர்ணிமாவோ… “இந்த வீட்ல என்ன நடக்குது? இங்க இருக்கவங்க அங்க போறதும், அங்க இருக்கவங்க இங்கே வர்றதும், சகிக்கல… “ என்கிறார்.

பிரதீப் இந்த பக்கம் வந்ததும் விஷ்ணு அவரிடமும் 50 லட்ச ரூபாய் மேட்டரை இழுக்கிறார்.

விஷ்ணு : “மாயா முதல் இடம் வருவாங்களாம். இவருக்கிட்ட 50,00,000 ரூபாயை தூக்கி தருவாங்களாம். இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?”

பிரதீப் : “நீ 50,00,001 கொடுக்கறேன்னு சொல்லு; உனக்கு முதலிடத்தை தருகிறேன்” என்கிறார் பிரதீப்

பூர்ணிமா - விஷ்ணு விஜய்
பிக்பாஸ் 7 Day 25: ஜோவிகாவுக்கும் பிரதீப்பிற்கும் எழுந்த பிரச்சனை; நிக்சனுக்கு அக்காவாக மாறிய ஐஷூ!
Bigg Boss Day 26
Bigg Boss Day 26

இப்படி இவர்களின் சண்டை பெரிதாகிறது. “நீ பைத்தியமாக்கிடுவ, உனக்கு ஏதோ பிரச்னை இருக்கு. டாக்டரை போய் பாரு. மக்களிடையே சிம்பத்தி க்ரியேட் பண்ற. படிச்சிருக்கல்ல… காலேஜ்ல ப்ரொபசரா வேலைபாரு. நீ ஒரு டம்மி, ஒரு ஊசி பட்டாசு” என்று மனதில் உள்ளத்தை கக்கிவிடுகிறார்.  இப்படி சண்டை சச்சரவுடன் நேற்றைய பொழுது கழிந்தது.

இனி நாளை என்ன நடக்கப்போகிறதென பார்க்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com