பிக்பாஸ் 7 Day 25: ஜோவிகாவுக்கும் பிரதீப்பிற்கும் எழுந்த பிரச்சனை; நிக்சனுக்கு அக்காவாக மாறிய ஐஷூ!

”பிக்பாஸ் எனக்கும் முதல் இடம் தான் தேவை. ஏன்னா.. நானும் மிடில்கிளாஸ், சிங்கிள் பேரண்டா எங்கம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க, அதனால அதன் வலி என்னன்னு எனக்கு தெரியும் அதனல் எனக்கு 50 லட்சம் வேண்டும்”
பிக்பாஸ்
பிக்பாஸ்vijay tv

பிக்பாஸ் 25ம் நாளான நேற்று..

கோல்டு ஸ்டார் டாஸ்கில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் இருவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் கூறும் கருத்து சரியானதா என்பதைத் தெரிந்துக்கொண்டு அவர்களுக்கு லைக் பட்டன், டிஸ்லைக் பட்டன் கொடுக்கப்பட வேண்டும். இதில் நிக்சன் தனக்கு பிடித்த விஷ்ணு, ஐஷூ பற்றி கேட்டு லைக் பட்டனை ஐஷூக்கும் டிஸ் லைக் பட்டனை விஷ்ணுக்கும் தந்தார். அடுத்ததாக வந்த மாயா, மணியையும், யுகேந்திரனை பற்றியும் தெரிந்துக்கொண்டு, மணிக்கு லைக் பட்டனையும் யுகேந்திரனுக்கு டிஸ்லைக் பட்டனையும் தந்தார். என்ன மணிக்கு லைக்பட்டனா என்ற அதிர்ச்சி மணிக்கும் மட்டுமல்ல... நமக்கே ஷாக்கிங்காகதான் இருந்தது.

பிக்பாஸ்
பிக்பாஸ்7 Day 24: “இப்படிஎல்லாம் என்கிட்ட பேசாதீங்க” விசித்திராவுக்கு வந்த க்ரஷ்.. காதல் நிறைவேறுமா?

ஐஷு அடுத்ததாக ரவீனா, நிக்சனைப்பற்றி தெரிந்துக்கொண்டு நிக்சனுக்கு லைக் பட்டனையும் ரவீனாவுக்கு டிஸ்லைக் பட்டனையும் தருகிறார். இறுதியில் பிரதீப் கோல்ட் ஸ்டார் பெறுகிறார்.

பாதை மாறிய ஐஷு:

ஐஷூம் நிக்சனும் பேசிக்கொள்கிறார்கள் இதில் ஐஷு நிக்சனிடம் ”என்னை நம்பாதே.. நானும் யாரையும் நம்பமாட்டேன்” என்கிறார்.

ஆனால் நிக்சனோ, “உனக்கு என்னைக்காவது பிரேக் ஆச்சுன்னா?.. அந்த இடத்தை நான் ஃபில் பண்ணிக்கிறேன்” என்கிறார். இந்த வார்த்தை ஐஷூக்கு உறுத்தியிருக்கவேண்டும், அதனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஐஷூ நிகசனிடம் வந்து, “ நிக்சா என்னை நீ இனிமேல் அக்கா என்று கூப்பிடு. அதுவும் ஒருவாரத்துக்கு தான்” என்கிறார். அதென்ன ஒருவாரம்? என்ற நிக்சன், இனிமே நமக்குள்ள எதுவும் வேண்டாம். வெளியில வந்ததும் நான் உன்னை டீவியில பார்த்துக்கறேன்” என்கிறார்.

அதற்கு சரி என்ற ஐஷு மணியைப்பற்றி நிக்சனிடம் கவலைப்படுகிறார். “மணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது.. இந்த மனுஷன் இப்படியே இல்ல.. கிச்சன்ல நின்னு புளி கரைச்சுக்கிட்டு இருக்காரு ஆனா.. வெளியில வேற புலி மாதிரி இருப்பாரு.. நானும் போனவாரம் அவனை நாமினேட் பண்ணிவிட்டேன். அதனால அவரு வெளியில போயிடுவாரோன்னு கஷ்டமா இருக்கு என்று நிக்சனிடம் புலம்புகிறார்.

விஜய் டீவி

பதிலுக்கு நிக்சனும், “ஆமா ஆமா.. நீ சொல்றது சரிதான். ரவீனா, மணி ரெண்டு பேரும் விளையாட வந்துட்டு விளையாடவே இல்ல.. லவ் பண்ணிட்டு இருக்காங்க.. இதுல மணி வயசுல பெரியவன் அவனுக்கு ரவீனா எப்படி செட் ஆவார்” என்கிறார். இவருக்கு மணிமேல கொஞ்சம் பொறாமையோ..?

விஷ்ணுவின் புலம்பல்:

இங்கு விஷ்ணு பூர்ணிமாவிடம், ”நான் பிக்பாஸ விட்டு வெளில போய் சினிமாவில் நடிக்கணும்னு நினைச்சேன். ஆனா போறப்போக்கைப்பார்த்தா சீரியல் கூட கிடைக்காது போல.. ” என்று புலம்புகிறார்.

அதற்கு பூர்ணிமா. சில தத்துவத்தை உதிர்க்கிறார், ”அதாகப்பட்டது விஷ்ணு, நீ இங்க உன்னோட நெகட்டிவை கேம் சேஞ்ச் பண்ணி அத பாஸிட்டிவா மாத்தினா சினிமால சான்ஸ் கிடைக்கும்” என்கிறார். மகா ஜனங்களே.... பூர்ணிமா சொன்னதுல ஏதாவது புரிகிறதா என்பதை தெளிவு படுத்தவும்.

விதியை மீறிய பூர்ணிமா:

யாரும் மேக்கப் போடக்கூடாது என்று பிக்பாஸ் மேக்கப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றாலும், இந்த கேப்டன் பூர்ணிமா யாருக்கும் தெரியாது என்று ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் நியூ ஜெல் லிப்டிக்கை கையில் எடுத்து போட்டுள்ளார். இதை கவனித்த பிக்பாஸ் எல்லோர் முன்பும் கூறி பூர்ணிமாவின் மானத்தை வாங்க.. போட்டியாளர்கள் கேப்டனே இப்படி பண்ணலமா? இது விதி மீறல் என்று சொல்ல ஆரம்பித்தனர்.

இதற்கு என்ன தண்டனை? என்பதை பிக்பாஸ் அனைவரையும் கேட்கவும், அனைவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குள் கேப்டன்ஷிப் முடிந்துவிடும்.

NGMPC22 - 147

ரேங்கிங் டாஸ்க்

ரேங்கிங் டாஸ்க் நடக்கிறது. இதில் முதலிடத்தை பிடிக்க மாயா, பிரதீப், ஜோவிகா மூவரும் முயல்கிறார்கள். இதில் மாயா ”பிரதீப், உனக்கு 50 லட்சம் தான் முக்கியம் டைட்டில் இல்லன்னு சொன்ன.. ஆனா எனக்கு 50 லட்சம் முக்கியம் இல்ல டைட்டில் தான் முக்கியம். அதனால் நான் முதல் இடம் வந்தா நீ கேட்ட 50 லட்சத்தை கொடுத்துவிடுகிறேன். இதை ஒரு அக்ரிமெண்டாக வைத்துக்கொள்ளலாம்” என்றதும், மாயாவுக்காக பிரதீப் முதல் இடத்தை விடுகிறார்.

இதைப்பார்த்த ஜோவிகா, ”பிக்பாஸ் எனக்கும் முதல் இடம் தான் தேவை. ஏன்னா.. நானும் மிடில்கிளாஸ், சிங்கிள் பேரண்டா எங்கம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க, அதனால அதன் வலி என்னன்னு எனக்கு தெரியும் அதனல் எனக்கு 50 லட்சம் வேண்டும்” என்று கூறவும்,

பதிலுக்கு பிரதீப் ”நீங்களெல்லாம் விதவிதம்மா டிரஸ்ஸூக்கு தகுந்த ஷூ போடுறீங்க, விதவிதமா டிரஸ் போடுறீங்க.. நீங்களே மிடில்கிளாஸ் என்றால் இதெல்லாம் இல்லாத நான் என்ன பிச்சைக்காரனா? மிடில் கிளாஸ் அர்த்தத்தையே மாத்திடீங்களே” என்று கூறவும் பிரதீப்பிற்கும், ஜோவிக்காவிற்கும் பிரச்சனை அதிகரிக்கிறது.

விஜய் டீவி

இதில் வழக்கம்போல் ஜோவிகா பிரதீப்பை வாடா போடா என திட்டியது மட்டுமல்லாமல் வாயில் கெட்ட வார்த்தையை உதிர்க்க நினைத்தார். ஆனால் உதடு அசைவுடன் அதை நிறுத்திக் கொண்டார். இந்த பிரச்சனையை பற்றி இந்த வாரம், கமல் என்ன சொல்கிறார் இதன் முடிவு என்ன என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com