Bigg boss 7: 59 ம் நாள்.. நிக்சனை வெளியேற்ற துடிக்கும் மாயா.. காப்பாற்ற நினைக்கும் பூர்ணிமா!

இதில் விசித்திரா ஆங்காங்கே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தூண்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT
Published on

பிக்பாஸில் 59ம் நாள்

பூர்ணிமாவுக்கும் மாயாவுக்கும் சில நாட்களாக மறைமுக  மோதல் ஏற்பட்டு இருக்கு. இதற்கு காரணம் பூர்ணிமா விஷ்ணுவுடன் க்ளோசாக பேசியது மாயாவிற்கு பிடிக்கவில்லை. அதனால், ”என் ஆட்டத்தைப்பாரு” என்ற ரீதியில் பூர்ணிமாவை நாமினேசன் செய்தார் மாயா.

ஆனால் மாயாவின் உண்மையான எண்ணம் எப்படியாவது நிக்சனை இந்த வாரம் எலிமினேசன் செய்து வெளியில் அனுப்பவேண்டும் என்பதே… இந்த ஐடியாவை பூர்ணிமாவிடம் சொல்லியும் விட்டார்.

மாயாவின் உண்மையான எண்ணம் எப்படியாவது நிக்சனை இந்த வாரம் எலிமினேசன் செய்து வெளியில் அனுப்பவேண்டும் என்பதே… இந்த ஐடியாவை பூர்ணிமாவிடம் சொல்லியும் விட்டார்
பிக்பாஸ் 7
BiggBoss 7: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண், இந்துஜா! பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளாதது ஏனோ!

ஆனால், மாயா தன்னை நாமினேட் செய்த கோபத்தில் இருந்த பூர்ணிமா, மாயாவின் எதிரியான நிக்சனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

பாவம் நிக்சன் தெரியாதனமாக கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டு உரலில் தலையைக்கொடுத்த நிலையாய் அனைவரும் தேடி தேடி வந்து நிக்சனை கேப்டன் பதவியை காலி பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் விசித்திரா ஆங்காங்கே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தூண்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  நிக்சன் விசித்திராவிடம், “நான் கேப்டன் ஆன சமயத்தில் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்கு நடுவுல நீதி மணியை வச்சுருக்காரு, அதனால என் கேப்டன் பதவியை பறிக்க நினைச்சு எல்லாரும் வச்சு செய்றாங்க” என்று கவலைப்படவும்,

“நான் கேப்டன் ஆன சமயத்தில் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்கு நடுவுல நீதி மணியை வச்சுருக்காரு, அதனால என் கேப்டன் பதவியை பறிக்க நினைச்சு எல்லாரும் வச்சு செய்றாங்க”

நிக்சா… அதுக்கு நீ தான் காரணம். நீ பிக்பாஸ்கிட்ட என்ன சொன்ன…? நானும், அர்ச்சனாவும் ரூல்ஸ் ப்ரேக் பண்ணிய சமயம் நீ பிக்பாஸ்கிட்ட ரூல்ஸ் ப்ரேக் பண்றவங்களுக்கு கடுமையான தண்டனை தரணும்னு சொன்ன நியாபகம் இருக்கா?… அதான் பிக்பாஸ் இத உன் கேப்டன்ஷிப்ல வச்சு இருக்காரு. யாராவது விதியை மீறினா இந்த மணியை அடிச்சு நியாயம் கேட்டு உன் சீட்ட காலி பண்ண செய்யற திட்டம் தான் இது. உன் தலையில நீயே மண்ணைகொட்டிகிட்ட…” என்று இது தான் சமயம்  நு விசித்திரா சொல்லவும்,

அப்படியா சொன்னேன் நியாபகம் இல்லையே… ” என்று அங்கிருந்து நழுவ நினைத்த நிக்சனை நிறுத்தி விசித்திரா அவரின் காதில் ஒரு ப்ளானையும் சொல்கிறார்.

நிக்சா… பிக்பாஸ் கொடுத்த இந்த ஐடியாவை நீ அழகா யூஸ் பண்ணிக்கலாம். விஷ்ணு ரூல்ஸ் ப்ரேக்கிற்கு இந்த தண்டனை தரலாம்னு பிக்பாஸுக்கு ஐடியா கொடுத்து இருக்கார். அதையே வச்சு நீ அவருக்கே பனிஷ்மெண்ட் தரலாம் ” என்று சொல்லவும், தலையை ஆட்டியபடி செல்கிறார் நிக்சன்

பிக்பாஸ் 7
BIGG BOSS Day 57 | ‘இது அழுகை அல்ல... அதையும் தாண்டி’ - பூர்ணிமாவின் கண்ணீருக்கான டிக்‌ஷ்னரி!

ஆக… அனைவரும் சேர்ந்து நிக்சனை கேப்டன் பதவியிலிருந்து இறக்கி அவரை நாமினேஷன் செய்ய நினைக்கிறார்கள். இவர்களின் சதி திட்டத்திலிருந்து தப்பிப்பாரா நிக்சன்? பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com