Biggboss7: “என்ன பார்த்தா எப்படி தெரியுது?”..களைகட்டிய அர்ச்சனாவின் ஆட்டம்; க்ளைமேக்ஸில் ட்விஸ்ட்!

‘நீங்க கயிற்றையா கழட்றீங்க இப்ப பாருங்க’ என்று பிக்பாஸ் அர்ச்சனாவின் இன்னொரு கையையும் பூர்ணிமா கையுடன் சேர்த்து கட்டச்சொன்னதும், அர்ச்சனாவுக்கு மேலும் காண்டானது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 61 வது நாள் (01.12.2023)!

அர்ச்சனாவின் அழுகையுடனே இன்றைய எபிசோட் ஆரம்பித்தது. ஒரு டாஸ்கில் விஷ்ணுவையும் அர்ச்சனாவை ஒரே கயிற்றால் இருவர் கைகளையும் கட்ட அதில் கோபமடைந்த அர்ச்சனா விஷ்ணுவிடம் சண்டை போட்டு, விதியை மீறி கயிற்றை கழட்டினார்.

நீங்க கயிற்றையா கழட்றீங்க இப்ப பாருங்க’ என்று பிக்பாஸ் அர்ச்சனாவின் இன்னொரு கையையும் பூர்ணிமா கையுடன் சேர்த்து கட்டச்சொன்னதும், அர்ச்சனாவுக்கு மேலும் கோபம் ஏற்பட்டது. இதில் விஷ்ணுவிடம் சப்பை காரணத்துக்கு மேலும், சண்டைபோட, இவர்களின் சண்டையை பார்க்க மாயா, மணி, தினேஷ், ரவினா ஆகியோர் சேர் போட்டு அமர்ந்து சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

இதில் கோபமான அர்ச்சனா தன் இரு கைகட்டையும் அவிழ்த்து விட்டு வரண்டாவில் வந்து அமர்ந்து அழ ஆரம்பித்தார். விஷ்ணு சும்மா இல்லாமல் அர்ச்சனாவிடன், நடந்த டாஸ்கில் ”பளார் பளார்” ன்னு “நான் உன்னை சொல்லலை, ஆனா நீ ஏன் எதெற்கெடுத்தாலும் கோபப்படுகிற?” என்று கேட்டதும், மீண்டும் அர்ச்சனாவுக்கு கோவம் வருகிறது. சண்டை ஆரம்பிக்கிறது.

”பளார் பளார்” ன்னு “நான் உன்னை சொல்லலை, ஆனா நீ ஏன் எதெற்கெடுத்தாலும் கோபப்படுகிற?”

(ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்: அர்ச்சனா இதெல்லாம் ரொம்ம ஓவரா இருக்கு, மக்கள் உங்கள் பக்கம் இருக்காங்கன்னு நெனச்சுகிட்டு நீங்க செய்யறத எல்லாத்தையும் அவங்க சகிச்சுகிட்டு போகனுமா?)

விஷ்ணு அப்படியும் வந்து அவரை சமாதானம் செய்யும் விதமாக பேச வருகிறார், ”அர்ச்சனா நான் வந்து உங்ககிட்ட ரீசன் தான் கேட்டேன்.. நீங்க ரொம்ப பண்றீங்க..” விஷ்ணு முடிக்கும் முன்னால்,

அர்ச்சனா ஹை டெசிபிலில் குரலை எழுப்புகிறார், “நீங்க வந்தீங்கன்னா, நா வெளில போயிடுவேன். நீங்க இருக்குற இடத்துல நா இருக்கமாட்டேன். என்னை distrub பண்ணாதீங்க..” என்று கத்தவும், இது என்னடா வம்பா போச்சுன்னு அனைவரும் அங்கிருந்து நகர்ந்து விடுகின்றனர்.

நீங்க வந்தீங்கன்னா, நா வெளில போயிடுவேன். நீங்க இருக்குற இடத்துல நா இருக்கமாட்டேன். என்னை distrub பண்ணாதீங்க..
விஜய் டீவி

அனன்யாவிடம், ஆங்கிலத்தில், ” அவரு தான்... (யாரு விஷ்ணு) இந்த வீட்ல ஸ்வீட் பர்சனா இருந்தாரு, அடிக்கடி சில்சில்னு சொல்லுவாரு, இப்போ கம்ளீட்டா வேற மாதிரி ஆகிட்டாரு... ” என்று இல்லாத ஒரு விஷயத்திற்கு ஓவராக பில்டப் செய்கிறார்.

(ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்: “ஏம்மா எங்கள பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? இப்படியே நீங்க நடிச்சுட்டு இருந்தீங்கினா அடுத்தவாரம் வீட்ல போய் அழுதுட்டு இருங்கன்னு மக்கள் உங்கள வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க பார்த்துக்கோங்க..)

இந்த பக்கம் விஷ்ணு வீட்டிற்குள் சென்று, ”அர்ச்சனா நல்லாவே வில்லி ரோல் பண்றாங்க... ஆனா என்னை வேற மாதிரி காட்றாங்க... அவங்ககிட்ட இருக்குற 10 முகத்தையும் வீட்ல வச்சுக்கட்டும் இங்க வந்து காட்ட வேண்டாம்...” என்று புலம்பி தள்ளுகிறார்.

பிக்பாஸ் 7
BIGG BOSS DAY 60 | அர்ச்சனா, விஷ்ணு மோதல்... என்னதான் ஆச்சு கடைசியில?

பூர்ணிமா, அர்ச்சனா அருகில் வந்து அமர்ந்ததும், “i am not weak”... நா அழல... என்று பீரிட்டு வரும் கண்ணீரை துடைக்கிறார். ”பிரவீனா என்னடானா friends ஆகிடாதீங்க சண்டை போட்டுக்கோங்கன்னு சொல்றாங்க... நா விஷ்ணுவுடன் சண்டைபோடும் பொழுது எல்லோரும் சேர் போட்டு உட்காந்து வேடிக்கை பார்க்கறாங்க... என்ன பார்த்தா எல்லாருக்கும் எப்படி தெரியுது? என் கைய பாருங்க கயிறு கட்டி தடி தடியா போச்சு, ஒரு காட்டுமிராண்டி தனமா கயிரை இழுக்கிறாரு விஷ்ணு. இருந்தாலும் டாஸ்க்ன்னு நா சும்மா இருந்தேன்” என்று அனைவரின் சிம்பத்தியை பெற முயற்சிக்கிறார்.

நா விஷ்ணுவுடன் சண்டைபோடும் பொழுது எல்லோரும் சேர் போட்டு உட்காந்து வேடிக்கை பார்க்கறாங்க... என்ன பார்த்தா எல்லாருக்கும் எப்படி தெரியுது?

அனைவரும் அவரை சுற்றி அமர, ’ஒரு கதை சொல்லட்டுமா...’ என்று விக்ரம் வேதா மாதிரி கதை சொல்லவும் ஆரம்பிக்கிறார். “எங்க அப்பா, அம்மா ரொம்ப ஸ்டிரிட் தெரியுமா? நான் ஸ்கூல் படிக்கும் போதும் காலேஜ் போகும் போதும் ஒரு நாள் கூட கட் அடிச்சு நா சினிமா கூட போனதில்ல... காலேஜ் முடியறவரைக்கும் எங்க அப்பா தான் டிராப் செஞ்சு கூட்டிட்டும் போவாரு. நா அந்த வயசுல அனுபவிக்கவேண்டிய எதையுமே நா அனுபவிக்கல... நா சொல்றது புரியுதா... ”என்று அங்கிருப்பவரையும் குழப்பி நம்மையும் நன்றாக குழப்புகிறார்.

காலேஜ் முடியறவரைக்கும் எங்க அப்பா தான் டிராப் செஞ்சு கூட்டிட்டும் போவாரு. நா அந்த வயசுல அனுபவிக்கவேண்டிய எதையுமே நா அனுபவிக்கல... நா சொல்றது புரியுதா...

(ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸ்... “ஏம்மா... நா எதையும் அனுபவிக்கல... அனுபவிக்கல... ன்னு சொல்லி தான் அடிக்கடி போய் சிகரெட் பிடித்து வறீங்களே.... அது?... நல்லா சிம்பத்தி கிரியேட் பண்ணி எங்க காதுல பூ சுத்தலாம்னு நினைக்கிறீங்க.... நடக்காது அம்மணி... நடக்காது”)

அத்தோட நிறுத்துவாங்கன்னு பார்த்தா,” நா ஜெயிலுக்கு கூட போய் ஷாப்பிங் ரீபேமெண்டுக்கு தேவையானத சரி செஞ்சுடறேன். ஆனா விஷ்ணுவோட கட்டி போட்டாங்கன்னா நா இருக்கமாட்டேன் என்றவர், ரவீனா... ஐ ம் சோ சாரி... சில்.. இங்க வா ஹக் பண்ணிக்கலாம் “ என்று சொல்லி ரவீனாவை கூப்பிடவும்,

“ஐய்யய்யோ வேண்டவே வேண்டாங்க... நீங்க திட்டுவீங்க... அப்புறம் சாரி கேட்பீங்க... இதெல்லாம் எனக்கு ஒத்து வராது ஒரு டிஸ்டன்ஸ்லேயே இருக்கலாம்” என்று மொத்தமாக அர்ச்சனாவின் மூக்கை உடைத்து செல்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com