Bigg boss 7: விசித்திரா - தண்ணீர் லாரி, மாயா - வைக்கோல்போர்.. விநோதமாக டாஸ்க்கும் குபீர் விளக்கமும்!

பிக்பாஸில் 54 நாளான நேற்று மாயாவின் ஷூவை ஜோவிகா கழற்ற அதை பூர்ணிமா தூக்கி எறிகிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 54 நாளான நேற்று மாயாவின் ஷூவை ஜோவிகா கழற்ற அதை பூர்ணிமா தூக்கி எறிகிறார். அது மிகவும் காஸ்ட்லி ஷூ என்று மாயா வருத்தப்பட, அதை நிக்சன் எடுத்துவந்து தருகிறார்.

இது ஒரு நிகழ்சின்னு இதையும் ஒரு கண்டண்டாக்கி அதையும் டெலிகாஸ்ட் செய்வதை என்னவென்று சொல்வது.

நிக்நேம் டாஸ்க்

அடுத்த டாஸ்காக விஷ்ணுவும், விக்ரமும் அனைத்து கண்டஸ்டுகளுக்கும் காரணத்துடன் நிக்நேம் சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் சொல்லவும், விஷ்ணு மாயாவை வைக்கப்போர் என்றார். ஏனெனில் வைக்கப்போர் உணவாகவும் பயன்படும் கொளுத்திவிட்டா அது மட்டுமே எரியாமல் அதன் அருகில் இருக்கும் அனைத்தையும் எரித்துவிடும் என்று விஷ்ணு சொன்னதும் மாயாவின் முகம் ஃபீஸ் போன பல்ப் போல் ஆனது.

maayaa
maayaaPT

அடுத்து பூர்ணிமாவை காதம்பரி என்றார். ஏனெனில் பூர்ணிமா பேசியே அனைவரையும் சாகடித்துவிடுவார் என்ற விஷ்ணு அக்‌ஷயாவை பருத்தி மூட்டை என்கிறார். ஏனெனில் ஒவ்வொருமுறையும் நாங்கள் அவரை நாமினேட் செய்வோம். ஆனால் பருத்திமூட்டை மறுபடியும் குடோனுக்கே வந்துவிடும் என்கிறார்.

விஷ்ணு சொன்னது சரிதான், ஒவ்வொரு வாரமும் அக்‌ஷயா தான் வெளியில் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் எப்படியாவது தப்பித்து இந்த வாரம் வரை பிக்பாஸில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

கூல் சுரேஷை “பதனீர்” என்கிறார். ஏனெனில் கண்டஸ்டண்டுக்குள் ஏதாவது ஒரு மேட்டர் நடந்துக் கொண்டிருக்கும். போகிறபோக்கில் அவரும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல ஏதாவது ஒரு மேட்டரை சொல்லிவிட்டு செல்வார். அது மேலும் கொழுந்துவிட்டு எரியும். அவர் ஒரு சின்ன ஒரு விஷயத்தை பெரியவிஷயமாக்கி விடுவார்.

அடுத்து மணி, ரவீனா... bye one get one offer... என்கிறார். இதற்கு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அர்ச்சனாவை இது தொட்டா சிணுங்கி என்றார்.ஏதாவது ஒரு சிறு விஷயத்தை சொன்னா கூட அழுதுடுவாங்க” என்றதும், இதற்கும் அர்ச்சனா அழுதுவிடுவாங்க போலதான் அவங்க முகம் இருந்தது.

NGMPC22 - 147

விசித்திராவை விக்ரம், தண்ணீர் லாரி என்றார். ஏனெனில் தண்ணீர் பிடிக்கும் பொழுது தான் குழாயடி சண்டை நடக்கும், அது போல தான் இவங்களும் தண்ணீர் லாரி பிரேக் பிடிக்காமல் போனால் எதிரில் வருபவன் காலி..என்றார்.

கேப்டன் தினேஷை பற்றி சொல்லும் பொழுது அவருக்கு இம்சை அரசன் என்று சொன்னார்கள். விக்ரமும் விஷ்ணுவும் இப்படி மாறி மாறி தான் சொல்லுவதை எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக இது fun-காக சொன்னது என்று முடித்துக் கொண்டனர்.

பூகம்பம் டாஸ்க்

இதன் தொடர்சியாக பூர்ணிமா தனது வாழ்க்கையில் நடந்த பூகம்பம் ஒன்றை அனைவரிடத்திலும் கூறினார்.

அவர் படித்து சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சமயம் எதார்த்தமாக இவருக்கு வேலை போக, அதை வீட்டினருக்கு தெரியபடுத்த விருப்பமில்லாமல், 14 பையன்கள் வசிக்கும் ஒரு சிறு அறையில் அவர்களுடன் சேர்ந்து இருந்ததும், அதை அக்கம் பக்கத்தினர் தவறாக சித்தரித்து அவரைப்பற்றி போலிசாரிடன் தகவல் சொல்லவும், அங்கு வந்த போலிசார் பூர்ணிமாவைப் பார்த்து நீங்க யூடியூபில் நடிப்பதைப் பார்த்து இருக்கிறேன். நான் உங்கள் ரசிகன் என்று அவரின் மேல் வழக்கு எதுவும் போடாமல் அவரை விடுவித்ததும், அதன்பிறகு பூர்ணிமா தனக்கென்று ஒரு வீடு, கார் வாங்கியதோடு பிக்பாஸ் வரை வந்ததாகவும் கூறி நம்மை வியக்கவைத்தார்.

கடைசியாக இந்த டாஸ்கில் ப்ராவோ வெற்றி பெற்று கோல்ட் ஸ்டார் வாங்கினார்.

கேப்டன் டாஸ்க்

அடுத்ததாக அடுத்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைப்பெற்றது. இதில் ஜோவிகா, நிக்சன், விஷ்ணு இவர்களை கேப்டன் பட்டத்தை பெறுவதற்காக ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்திருந்தனர். இவர்கள் மூவருக்குள்ளும் டாஸ்க் கலந்துக் கொண்டனர். இதில் நிக்சன் வெற்றிப்பெற்று அடுத்த வாரத்திற்கான கேப்டன் பதவியை பெற்றார். இனி என்னென்ன நடக்க போகிறது என்பதை நாளைப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com