BIGGBOSS DAY 38| “அவ வேலைக்காரி” “பசங்கல்லாம் வேஸ்ட்”- எல்லா முகத்திரைகளையும் கிழித்த பிளாஸ்மா டிவி!

“விசித்திரா எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வந்து வேலை செய்ங்க... “ என்று கூறவும், கூல் சுரேஷே கொஞ்சம் கடுப்பாகி, “மாயா அவங்களை விடு அவங்களுக்கு கால் வலிக்கிறதாம். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.
BIGG BOSS DAY 38
BIGG BOSS DAY 38 BIGG BOSS

நேற்றைய 38 வது எபிசோடில் ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் விசித்திரா அர்ச்சனா சைடில் பலம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம், எதற்கெடுத்தாலும் அழுதுக்கொண்டிருக்கும் அர்ச்சனா அடிக்கடி கேமராவிற்கு முன் வந்து ' I want go to home' என சொல்லி அழுதபடி இருந்தார். ஆனால் விசித்திரா சப்போர்ட் அர்ச்சனாவுக்கு கிடைத்ததும், தைரியமாக உணர்ந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிலிருப்பவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.

VJ Archana
VJ ArchanaBIGG BOSS DAY 38

நேற்றைய எபிசோட்டில் அக்ஷயா, ஐஷு, நிக்சன் விஷ்ணு ஆகியோர் விசித்திரா பக்கம் வந்துவிட்டார்கள். மாயா கேப்டன் ஆனதிலிருந்து விசித்திராவையும், அர்ச்சனாவையும் விட்டேனா பார் என்ற ரீதியில் வேலை வாங்கியபடி இருந்தார். “நான் கேப்டன், நான் சொல்வதைதான் நீங்க கேட்டாகணும்” என்று மிரட்டும் தொணியில் சொல்லி வந்தார்.

நேற்று மதியம் விசித்திரா சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்க... “விசித்திரா எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் வந்து வேலை செய்ங்க..” என்று கூறவும், கூல் சுரேஷே கொஞ்சம் கடுப்பாகி, “மாயா அவங்களை விடு, அவங்களுக்கு கால் வலிக்கிறதாம். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார். “இதெல்லாம் நம்பறீங்களா... இதெல்லாம் நாடகம்” என்று மாயா சொல்ல... “இருக்கட்டும்மா... அட்ஜஸ்ட் செய்து போங்க...” என்றார் கூல் சுரேஷ்.

நிக்சனும் ஐஷூம் அடிக்கற லூட்டியைப்பார்த்து, பூர்ணிமா மாயாவிடம் “நிக்சன் ஐஷூக்காக ரொம்பவும்தான் தாங்கறான். இதெல்லாம் பார்க்க நல்லாவே இல்ல” என்றார். தொடர்ந்து கமல்ஹாசன் பிறந்தநாளை ஒட்டி போட்டியாளார்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் மாயா, கானாபாலா டீம் வெற்றிபெற்று கோல்ட் ஸ்டார் வாங்கியது.

இதில் நிக்சனுக்கு மனவருத்தம். “நாம என்னதான் பெர்ஃபாம் பண்ணினாலும் நமக்கு கோல்ட் ஸ்டார் கிடைக்கமாட்டேங்குதே” என்று கவலைப்பட அவருக்கு ஆறுதல் சொல்கிறார் ஐஷூ. அடுத்ததாக பிக்பாஸ் “பிளாஸ்மா டிவியில் சக போட்டியாளர்கள் மற்றவர்களைப்பற்றி கடந்த எபிசோட்களில் பேசியதை போட்டு காட்டுவோம். அது யார் யாரைப்பற்றி பேசியது, எதற்காக பேசியது என்பதை சொல்லவேண்டும்” என்றதும் அனைவரின் வயிற்றிலும் புளியே கரைந்திருக்கும்போல!

BIGG BOSS DAY 38
BIGG BOSS DAY 38

பிளாஸ்மா டிவி!

ஜோவிகா முன்பு ஒருமுறை தினேஷை பற்றி கூறும்போது, “அவர் ஆம்பிள இல்லைன்னு ஃபீல் பண்றாரா என்ன?” என்று கேட்டிருப்பார். இதை போட்டு காட்டிய பிளாஸ்மா டிவி ஜோவிகாவின் முகத்திரையை கிழித்தது. இதை நான் ஏன் சொன்னேன் என்ற காரணத்தை தினேஷிடம் விளக்கினார் ஜோவிகா.

விசித்திரா - அர்ச்சனா - தினேஷ்
விசித்திரா - அர்ச்சனா - தினேஷ்BIGG BOSS DAY 38

என்ன கூறினாலும், ஜோவிகா தினேஷை பற்றி சொன்னது தவறுதான். தினேஷின் இடத்தில் ஜோவிகா இருந்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறாகி இருக்கும். கிழிகிழி என்று கிழித்தெடுத்திருப்பார் ஜோவிகா. ஆனாலும் தினேஷ் ஜோவிகாவிடம் அப்படி நடந்துக்கொள்ளவில்லை.

BIGG BOSS DAY 38
BIGG BOSS DAY 37 | “நீ தண்ட கேப்டன், தண்ட ப்ளேயர்னு எனக்கு தெரியும்... நீ பேசவே பேசாத..!”

அடுத்ததாக நிக்சன். இவர் வினுஷாவை ஒருமுறை “வேலைக்காரி, முகம் குட்டியாக இருக்கு, அது சரியில்லை இது சரியில்லை” என்று உடல் பாகத்தை வர்ணித்திருப்பார். அருவருக்கத்தக்க பார்வையிலான ஒரு வர்ணனை அது. இதற்கு அனைவரும் போர்கொடி தூக்கவேண்டும்... தூக்குவார்களா.... மாட்டார்கள்!

வினுஷா பற்றி நிக்சன்
வினுஷா பற்றி நிக்சன்BIGG BOSS DAY 38

ஏனெனில் நிக்சன் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிக்காவிற்கு கைப்பிள்ளை. அதனால் ‘அவர் சொன்னது விளையாட்டுதனமானது’ என்று அவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் (!).

அடுத்ததாக பிராவோவைப்பற்றி மாயாவும் ஐஷூம் பேசிக்கொண்டதை பிக்பாஸ் பிளாஸ்மா டிவி வழியாக காட்டிக்கொடுத்தார். மாயா ஐஷுவிடம் “பிராவோ கண்ணாலே அப்படியே செக் அவுட் செய்கிறார்” என்றுகூற, அதற்கு ஐஷூ, “அவன் முகத்தப்பார்க்குறதே இல்லங்க... கீழேருந்து மேல பாக்கறான்” என்று கூறியிருந்தார்.

பிராவோ குறித்து மாயா - ஐஷூ
பிராவோ குறித்து மாயா - ஐஷூBIGG BOSS DAY 38

மேலும் “இந்த சீசன்ல பசங்க வேஸ்ட்” என்று கூறியிருந்தார் ஐஷூ. அதேதான்.. ‘பிராவோ இடத்தில் மாயாவோ பூர்ணிமாவோ அல்லது ஜோவிகா, ஐஷுவோ இருந்திருந்தால் பிரதீப் நிலைமைதான் ஏற்பட்டு இருக்கும். இவர்கள் உடைத்தால் மண்குடம் மற்றவர்கள் உடைத்தால் பொன்குடமா?’ என்றாகிவிடுகிறது!

ஆனாலும், தினேஷ் போன்று பிராவோவும் இவர்களை எதிர்த்து எதுவும் பேசவில்லை. அதற்கு காரணம் இவர்களிடம் வாயைக்கொடுத்து யார் வாங்கிக்கட்டிக்கொள்வது என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அதே போல் பூர்ணிமா விக்ரமிடம் வழிந்ததையும் போட்டு காட்டி அவர்களின் முகத்திரைகளை கிழித்து விட்டார்கள் பிக்பாஸ் அட்மின்கள்.

“கூல் சுரேஷின் பிரச்னையை கமல் சாரிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைப்பற்றி பேசாமல், பெண்களின் பாதுகாப்பின்மையை பற்றி பேசி பிரதீப்பை வெளியில் எடுத்து விட்டார்கள்” என்று விசித்திரா சொன்னதற்கு, மாயாவும் பூர்ணிமாவும், “இந்த பேச்சை நாங்கள் ஆரம்பிக்கவில்லை. கமல் சார்தான் ஆரம்பித்தார்” என்று ஒட்டுமொத்த போட்டுவிட்டனர். இதலாம் அடுக்குமா யுவர் ஆனர்?

கூல் சுரேஷ் குறித்து விசித்திரா
கூல் சுரேஷ் குறித்து விசித்திராBIGG BOSS DAY 38
அநேகமாக, பிரதீப்பிற்கு நடந்த சம்பவங்களுக்கு பதிலாக இது இருக்கட்டும் என இவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பிக்பாஸ் ப்ளான் பண்ணி போட்டதுதான் இந்த பிளாஸ்மா டிவியா என தெரியவில்லை. இருக்குமோ?

களேபரமான இந்த எபிசோட், இணையத்திலும் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. மாயா, ஐஷூ, பூர்ணிமா, ஜோவிகா, அட்சயா என இந்த பெண்கள் அணி, பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. அதனால் இவர்களின் ஓட்டுகளில் பிரச்னை வரலாம். யாராவதொருவர் வெளியேறக்கூட செய்யலாம். பார்ப்போம்... அடுத்து என்ன காத்திருக்குன்னு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com