BIGG BOSS DAY 37 | “நீ தண்ட கேப்டன், தண்ட ப்ளேயர்னு எனக்கு தெரியும்... நீ பேசவே பேசாத..!”

பூர்ணிமா விஷ்ணுவைப் பார்த்து, “உங்களுக்கு பாயிண்டாவே பேசத்தெரியாது, ரெண்டு நிமிஷம் டென்சனாகாம பேசத்தெரியாது” என்று விஷ்ணுவை போட்டுத் தாக்கினார்
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 37ம் நாளான நேற்று பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே சண்டை ஆரம்பித்தது. எதற்காக இந்த சண்டை என்றால் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனா மளிகை சாமான்கள் எடுக்கச்சென்றிருந்தார்.

ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் மணியை, மாயாவும் பூர்ணிமாவும் தங்களின் திட்டப்படி மளிகை சாமான்கள் எடுக்கச் சொல்லியிருந்தனர். ஆனால் இவர்களின் திட்டத்தை ஏற்கெனவே நன்கு அறிந்திருந்த விசித்திரா, இவர்களின் திட்டத்தை தவிடுபொடியாக்க நினைத்து அர்ச்சனாவை அனுப்பி இருப்பார். இதில் பிக்பாஸினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே தகறாறு ஏற்பட ஆரம்பித்தது.

இதில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் விஷ்ணுவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையே சண்டை மூண்டது. இதில் பூர்ணிமா விஷ்ணுவை பார்த்து, “உங்களுக்கு பாயிண்ட்டாவே பேசத்தெரியாது, ரெண்டு நிமிஷம் டென்சனாகாம பேசத்தெரியாது” என்று போட்டுத் தாக்கினார்.

பதிலுக்கு விஷ்ணுவும், “நீ தண்ட கேப்டன், தண்ட ப்ளேயர்னு எனக்கு தெரியும், நீ பேசவே பேசாதே” என்று விஷ்ணுவும் பதிலுக்கு பூர்ணிமாவை பொரிந்துத் தள்ளினார்.

இதை பார்த்த அர்ச்சனா, பூர்ணிமாவிடம் “உங்களாலதான் இந்த இரண்டு வீட்டிற்கும் சண்டை வருது” என்று சொல்ல, அங்கு வந்த நிக்சன் அர்ச்சனாவிடம் சண்டை போட... கோபம்கொண்ட அர்ச்சனா நிக்கனை பார்த்து, “நீங்க பேசாதீங்க. உங்க சேர்க்கை சரியில்லை” என்று கூறவும், கோபம் கொண்ட நிக்சன் தனக்கு சப்போர்ட் பண்ண பிக்பாஸ் ஆட்களை (மாயா, பூர்ணிமா, ஐஷு, விக்ரம், ஜோவிகா) கூட்டி வந்து அர்ச்சனாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் இதெற்கெல்லாம் அசராமல் அனைவரையும் ஒரே ஆளாக எதிர்த்து நின்று பாயிண்ட் பாயிண்டாக பேசினார் அர்ச்சனா.

“வாடி போடி” என்று பேசிய ஜோவிகாவைப் பார்த்து அர்ச்சனா, “ஜோவிகா... மரியாதையா பேசு” என்றும், ஐஷுவைப் பார்த்து, “நீ யாருன்னு எனக்கு தெரியும். உன்னைப்பற்றி நிக்சன் என்னிடம் சொல்லிவிட்டார்” என்று சொல்லவும், ஒரே ரணாகளமாகி போனது.

ஒரு கட்டத்தில் “நீங்க நல்லா கத்துங்க, நான் போறேன் உள்ள...” என்றபடி அர்ச்சனா, உள்ளே போனதும் அர்ச்சனாவின் இடத்தை நிரப்பினார் விசித்திரா. இப்பொழுது நிக்சன் விசித்திராவை பார்த்து கத்த... “இந்த கோவத்தை நீ அன்னிக்கே பிரதீப்பிடம் காட்டி இருக்கனும்.. டூ லேட்” என்று நிக்சனை வெறுப்பேத்தி விட்டார்.

“இத்தனை நாள் அம்மா மாதிரின்னு வேஷம் போட்டு இருக்கீங்க... நீங்க அம்மா இல்ல சும்மா...” என்று பதிலுக்கு நிக்சனும் கத்த...

“ஆமாண்டா... நா சும்மாதான். இது என் கேம். நா யார நாமினேஷன் செய்யணும்னு எனக்கு தெரியும். நீ அந்த பக்கம் போய் கத்திட்டு இரு” என்று மறுபடி நிக்சனை வெறுப்பேத்தி விட்டார்.

இப்படி அர்ச்சனாவும், விசித்திரா ஒரு பக்கமும், நிக்சன், விக்ரம், மாயா, ஜோவிகா, பூர்ணிமா ஐஷூ ஒரு பக்கமும், ஆளுக்காள் காச் மூச்சென்று கத்த... நேற்றைய எபிசோட் மீன் சந்தைக்குள் நுழைந்ததைப்போன்று ஒரே இரைச்சல்! நல்லபடியான முடிவு எடுக்கப்பட்டால் சரிதான்.

இதில் விசித்திராவை பழிவாங்குவதாக நினைத்த மாயா, விசித்திரா கேட்ட டூத்பிஷ்ஷை தராமால் “உங்களுக்குத்தான் விரல் இருக்குல்ல... அதால பல் தேய்ங்க” என்று சொன்னது கேவலமான திட்டம். அதிகாரம் என்ற பெயரில் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தார் மாயா.

இருந்தாலும் பொறுமையாக விசித்திராவும் மாயாவிடம் டூத் பிரஸ் கேட்க, “இதோ தரேன், அதோ தரேன், மூஞ்சி கழுவி வந்து தரேன்” என்று தரவே இல்லை. பொறுமை இழந்த விசித்திரா ‘உன்ன எப்படி தர வைக்கிறேன் பாரு’ என வழக்கம் போல ரூல்ஸை பிரேக் செய்து, கார்டன் பகுதிக்கு வந்து அமர்ந்து விட்டார். அவர்கூடவே அர்ச்சனாவும் வந்து அமர்ந்து விட ஸ்மால் பாஸ் கேஸ் கனெக்‌ஷனை கட் செய்து விட்டார். பிறகு மாயா ஓடி வந்து விசித்திராவிடம் மன்னிப்பு கேட்டு டூத்பிரஸை கொடுக்கவும்தான், விசித்திராவும் அர்ச்சனாவும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

இவர்களின் சண்டை ஓயுமா... அல்லது தொடருமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com