Bigg boss 7: மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறாரா விஷ்ணு?

இந்தப் பக்கம் கண்டெண்ட் கொடுப்பதற்காக பூர்ணிமாவும், விஷ்ணுவும் ஒருவருக்குள் ஒருவர் பேசி கொள்கிறார்கள். ஒருமணி நேரத்திற்கு மேல் பேசியும் ஒரு விஷயமும் இல்லை.
bigg boss 7
bigg boss 7vijay tv

பிக்பாஸ் 47ம் நாள்:

முதல் நாள் மாயாவும், விசித்திராவும் ஒருவருக்கு ஒருவர் சமாதானம் செய்துகொண்டனர் என்று பார்த்தோம் அல்லவா... அது வெறும் மணிக்கணக்குதான் என்பதை நிரூபித்துவிட்டார் மாயா.

அன்றிரவு பாத்ரூம் அருகில் நிக்சனிடம், “விசித்திராவை நம்பாதே... ஐஷு வெளியே போனதுக்கு அவங்கதான் முக்கிய காரணம். அவங்கதான் ஐஷுவை எலிமினேட் செய்து இருக்காங்க. ஆனா ஐஷு வெளியே போனதுக்கு நீ தான் காரணம் என்று அனைவரிடமும் சொல்லிட்டு வராங்க.” என்று நிக்சனிடம் பற்ற வைக்கிறார்.

இந்தப் பக்கம் கண்டெண்ட் கொடுப்பதற்காக பூர்ணிமாவும் விஷ்ணுவும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்கிறார்கள். ஒருமணி நேரத்திற்கு மேல் பேசியும் ஒரு விஷயமும் இல்லை. நேரம்தான் வீண்.

நமக்கும் கண்டெண்டாக விஷ்ணுவை நம்பக்கூடாது என்று மாயா சொல்லியதாக பூர்ணிமா விஷ்ணுவிடம் சொல்லுகிறார். இதுதான் நமக்கு தெரிஞ்ச செய்தியாச்சே... இதை தவிர என்றால் இரண்டு பேரும் போட்ட கடலை நமத்துபோன ஒன்றாகத்தான் நமக்கு தெரியவருகிறது.

இந்தப் பக்கம் மாயாவுக்கு விஷ்ணு மேல சரியான காண்டு. ஜோவிகா விக்ரமிடம், “இந்த விஷ்ணு என்னையும் பூர்ணிமாவையும் பிரிக்கப் பார்க்குறான்“என்று தனது மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்துக்கொள்கிறார். அத்தோடு விடாமல் பூர்ணிமாவை கூப்பிட்டு, “விஷ்ணு என்ன உன் கணவரா? அவர்கிட்ட போய் நம்ம எல்லாவிஷயத்தையும் சொல்றீங்க?” என்று கேட்டு விட்டார்.

bigg boss 7
BIGG BOSS Day 46 | மணிசந்திராவை வெளியேற்ற துடித்த மாயா... காத்திருந்த ட்விஸ்ட்!

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்நாள் போட்ட 'உன்னைப்போல் ஒருவன்' டாஸ்க்கின் படி, யாராக நடித்தார்களோ அவர்களைப் பற்றி பேசவேண்டும் என்று கூறியதும், கூல் சுரேஷ் கெட்டப் போட்டிருந்த விசித்திரா, கூல்சுரேஷைப் பற்றி பேசும்பொழுது அவருக்கு டிரஸ் சென்ஸ் கிடையாது, தான் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு கலரில் டிரஸ் போட்டுக்கொள்கிறார். இது எனக்கு பிடிக்காது, என்று அவரைப்பற்றி கழுவி ஊற்றினார். இதில் கூல் சுரேஷ் காண்டாகிவிட்டார் என்று அவர் முகம் காட்டிக்கொடுத்தது.

அர்ச்சனா விக்ரம் கெட்டப் போட்டிருந்தார் அல்லவா, அதனால் விக்ரமை பற்றி பேசும்பொழுது, “என்னை எல்லாரும் போன வாரம் ஒன்னுமே செய்யலை என்று சொன்னீங்க... விக்ரம் கெட்டப் போட்டா நான் சும்மாதான் இருக்கமுடியும். அததானே அவரு இத்தனை நாளா பண்ணிட்டு இருந்தாரு... அதனால தான் நானும் சும்மா இருந்தேன் என்று அவரை அசிங்கப்படுத்திவிட்டார். இத்துடன் நிறுத்தாமல், ஒருபடத்துல வடிவேலு சும்மா இருக்குறது எத்தனை கஷ்டம் தெரியுமா? அப்படின்னு கேட்டு இருப்பாரு, அது எந்த அளவு உண்மைன்னு விக்ரம் கெட்டப் போட்டதும் தெரிஞ்சது”ன்னு விக்ரமை விமர்சனம் செய்தார்.

இப்படி ஒவ்வொருவரும் அடுத்தவர்களைப் பற்றி கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். இதெல்லாம் முடிந்தபின், முதல் நாள் மாயா விசித்திராவைப் பற்றி நிக்சனிடம் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு விசித்திராவிடம் வந்து, “விச்சு மேம், எதுக்கு என்னை பத்தி பின்னாடி பேசுறீங்க?”

“நா என்ன பின்னாடி பேசினேன்? புரியலையே...”

“நீங்க அடுத்தவங்களைப்பத்தி எப்பொழுதும் நெகட்டிவாகத்தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும்” என்ற நிக்சனை பாத்து,

“ஒருத்தவங்களை பத்தி பேசுவேன்... ஆனா தப்பா எல்லாம் பேசமாட்டேன். இப்ப உனக்கு என்ன தெரியணும்? நேரா விஷயத்துக்கு வா” என்று விசித்திரா சொல்ல...

நிக்சன் ஐஷு மேட்டரை எடுத்தார். “ ஐஷு வெளில போனதுக்கு நான் தான் காரணம் என்று எல்லாரிடம் சொல்லிட்டு இருக்கீங்க... அவள் வெளியில போனதுக்கு நீங்க தான் காரணம். என்னையும் ஐஷு பத்தி தப்பா பேசி நீங்க நாமினேஷன் போட்டு ஐஷுவை வெளில அனுப்பிட்டீங்க... இனி உங்களுக்கு மரியாதை தரமாட்டேன், இனி உங்கள நான் விசித்திரானு தான் கூப்பிடுவேன். மேடம் எல்லாம் சொல்லமாட்டேன்” என்கிறார்.

vijay tv

அடுத்ததாக அடுத்தவார கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடந்தது. இதில் மறுபடியும் தினேஷ் வெற்றி பெற்றார். இந்தவார மோசமாக விளையாடிய போட்டியாளர் யார் என்று பிக்பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னதும் அனைவரும் சொல்லிவைத்ததுபோல விசித்திராவையும், அர்ச்சனாவையும் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் இருவரும் சிறைக்கு செல்லவேண்டும் என்று பிக்பாஸ் கூறவும், அதை மறுத்து நாங்க பெஸ்ட் பெர்ஃபார்மர்தான். அதனால் நாங்கள் சிறைக்கு செல்லமுடியாது என்று இருவரும் கூறவும், கேப்டன் தினேஷ் சக போட்டியாளர்களிடம் கலந்து ஆலோசித்து இவர்களுக்கான தண்டனை என்ன தரலாம் என்று கூடி பேசியதில் இருவரையும் வீட்டிற்குள் விடாமல் வெளியிலேயே தங்க வைக்கலாம் என்று முடிவெடுத்தார். இன்று மேலும் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com