BIGG BOSS Day 46 | மணிசந்திராவை வெளியேற்ற துடித்த மாயா... காத்திருந்த ட்விஸ்ட்!

“என்னைப் பொருத்த வரைக்கும் மணியைவிட நல்ல ப்ளேயர் விக்ரம். விக்ரமாவது இளைய தளபதி ஸ்டைல் பண்ணுகிறான். மணி எதுவுமே பண்ணுவதில்லை” - மாயா
மணி, ப்ராவோ, கானா பாலா
மணி, ப்ராவோ, கானா பாலாvijay tv

மாயா விஷ்ணுவிடம், “நீங்க என்னை மாதிரி கெட்டப் போட்டுட்டு வந்து என்னை இமிடேட் செய்தது எனக்கு சுத்தமா பிடிக்கலை. இனிமே நான் உங்களை நம்பமாட்டேன். அதுமாதிரி மணியை நான் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை. அவன் ரெண்டாவது வாரத்திலேயே போயிருக்க வேண்டியது. நான்தான் அவனை காப்பாத்தினேன். இப்ப என்னடான்னா அவன் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டு என்னையே எதிர்க்கிறான். என்னைப்பொருத்த வரைக்கும் மணியைவிட நல்ல ப்ளேயர் விக்ரம்தான். விக்ரமாவது இளைய தளபதி ஸ்டைல் பண்றான். மணி எதுவுமே பண்ணுவதில்ல” என்றார். அப்படியே நேராக விசித்திராவிடம் போனார்.

பூர்ணிமா - மாயா
பூர்ணிமா - மாயா

“விசித்திரா நான் உங்களை வெறுக்கலை. அதற்காக மன்னிக்கவும் இல்ல. நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தா நான் மன்னிச்சிருப்பேன். ஆனா நீங்க கேட்கல. ரெட் கார்ட் விஷயத்தில் உங்களால நான் ரொம்ப அப்செட்” என்று சொல்லவும், விசித்திரா “சரி நான் உன்னை மன்னிச்சிட்டேன். நீ என் மகள் மாதிரி” என்று கூறிவிட்டார். ஒருகட்டத்தில், இருவரும் சமரசம் ஆனார்கள். என்ன திடீர் பாசமென தெரியவில்லை இருவருக்கும். ஒருவேளை இதுவும் கண்டெண்ட்டா இல்ல பசி மயக்கத்தில் சமரசம் ஆகிவிட்டனரா என தெரியவில்லை!

பின் நடுராத்திரியில் விக்ரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் எதையோ எடுத்துச் சாப்பிட்டு வந்தார். அட, இதை ஸ்மால் பாஸ் பாத்திருப்பாரேப்பா!

மாயா கெட்டப் போட்ட விஷ்ணு, பூர்ணிமா கெட்டப் போட்ட மணி, விக்ரம் கெட்டப் போட்ட அர்ச்சனாவை போய் சந்தித்தனர். அங்கு கெட்டப் விக்ரமிடம் (அர்ச்சனா), “விக்ரம், நீ இந்த வாரம் கேப்டன் பதவிக்கு நிண்ணு. நாங்க உன்னை எப்படியாவது ஜெய்க்க வச்சுடுறோம்” என்கின்றனர். விக்ரம் கெட்டப் போட்ட அர்ச்சனாவும் “இந்த தடவ நான் மட்டும் கேப்டனா ஆகிட்டேனா... என்னோட கேப்டன்சிப் பதவியை பாருங்க” என்றார் துணிச்சலாக. அதற்கு பதில் சொன்ன விண்ணுவும் மணியும், “நீ எதுவும் செய்யவேண்டாம், நாங்க நீ எது செய்யனும்னு சொல்லுவோம். அத மட்டும் நீ செஞ்சா போதும்” என்று விக்ரமை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

மணி, ப்ராவோ, கானா பாலா
BIGG BOSS DAY 45 | விக்ரமை கலாய்த்து தள்ளிய பிக்பாஸ்... விஷ்ணு - தினேஷுக்கு இடையில் எழுந்த சண்டை!

நிறைவாக இந்த டாஸ்க்கில் மணிக்கு ஸ்டார் கிடைத்தது. இது மாயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பிராவோவிடம் வந்து “நீங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்து மணிக்கு ஸ்டார் கொடுத்து இருக்கீங்க. ஏன், நீங்களே அதை வச்சுக்க வேண்டியதுதானே? மணி வெளிய போனாதான் நல்லா இருக்கும்” என்றார். இதைப்பற்றி பிராவோ ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Rj Bravo
Rj Bravo

அடுத்ததாக ஒரு டாஸ்க் நடந்தது. சில தினங்களுக்கு முன் நடந்த லட்டுக்குள் ஸ்டார் போலதான் இதுவும் இருந்தது. முதலில் செல்பவருக்கு 5 லட்டு, இரண்டாவது செல்பவருக்கு 4 லட்டு, மூன்றாவது செல்பவருக்கு 3 லட்டு, நான்காவது செல்பவருக்கு 2 லட்டு, ஐந்தாவதாக செல்பவருக்கு 1 லட்டு என்ற இந்த டாஸ்க்கில், ரவீனாவிற்கு ஒரு ஸ்டாரும், விஷ்ணுவிற்கு 2 ஸ்டாரும் கிடைத்தன.

அடுத்து இரவில் விஷ்ணு பூர்ணிமாவிடம், “உன்னிடம் சில நல்ல குணம் இருக்கு, அதை நீ வெளியில் காட்டவில்லை. நீ சேர்ந்திருக்கும் இடம் தவறு” என்று அட்வைஸ் பண்ண, பதிலுக்கு பூர்ணிமாவும் “நான் நல்ல பொண்ணுதான். நான் என்னவோ கெட்ட பொண்ணுமாதிரியும், அதுல சில நல்லகுணம் இருக்குங்கற மாதிரியும் பேசறீங்க நீங்க” என்றதும், “நீ நல்ல பொண்ணுதான், ஆனா உன் நல்ல குணம் வெளியில தெரியல... “ என்றார். அப்படியே கொஞ்சம் ‘ஃபீலிங்க்ஸ் இருக்கா’ ‘இல்லையா’ என நீண்டது இவர்களின் உரையாடல்! இது போதுமே பூர்ணிமாவுக்கு... அடுத்தவாரம் வரைக்கும் விஷ்ணுவை தலையாட்டி பொம்மைப்போல ஆட வைத்துவிடுவார்.

இனி என்ன நடக்கிறது என்பதை நாமும் அப்படியே பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com