BIGG BOSS DAY 45 | விக்ரமை கலாய்த்து தள்ளிய பிக்பாஸ்... விஷ்ணு - தினேஷுக்கு இடையில் எழுந்த சண்டை!

"நாமினேஷன் சமயத்தில் விசித்திரா என்னை குறுகுறுன்னு பார்த்தாங்க..." என்றார் மாயா. உடனே பதிலுக்கு பூர்ணிமா தானும் கூட்டு சேர்ந்துகொண்டார்!
கானா பாலா - சரவண விக்ரம் - ரவீனா
கானா பாலா - சரவண விக்ரம் - ரவீனாvijay tv

45ம் நாள் பிக்பாஸில் நேற்று ரவீனா, மணி, மாயா, பூர்ணிமா, நிக்சன் அனைவரும் அமர்ந்து வழக்கம்போல் வம்பு பேச ஆரம்பித்தனர். இதில் மாயா விசித்திரா பற்றி பேசும்பொழுது, "நாமினேஷன் சமயத்தில் விசித்திரா என்னை குறுகுறுன்னு பார்த்தாங்க..." என்றார். பதிலுக்கு பூர்ணிமாவும், “என்னையும் ஓரகண்ணால பார்த்தாங்க, நான் அவங்களை கவனித்தவுடன், ‘ஏதோ வாந்தி வருதுன்னு சொன்னியே... இப்போ சரியாச்சா’ன்னு பிளேட்டை மாத்தி பேசறாங்க” என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ‘நமக்கு எதுக்கு இவங்க வம்பு’ என்று நினைத்த நிக்சன் அங்கிருந்து எழுந்து சென்றார்.

விசித்திரா
விசித்திராvijay tv

மணியும் இதையேதான் நினைத்திருப்பார் போல. ரவீனாவைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். இவர்களை கவனித்த பூர்ணிமா, மாயாவிடம் “ரவீனா மணியை விட புத்திசாலி. ஆனா மணி, ரவீனாவை கேம் விளையாட விடமாட்டேங்கிறான்” என்று கூறினார்.

இன்னொருபக்கம் மாயாவும் பூர்ணிமாவும் விசித்திரா பற்றி பேசியதை ரவீனா விசித்திராவிடமே வந்து சொல்லிவிட்டார். இதனால் சற்றே மனவருத்தத்தில் இருந்தார் விசித்திரா.

‘உன்னைப்போல் ஒருவன்’ டாஸ்க்...

இதில் ஒருவரைப்போல் ஒருவர் இருக்க வேண்டும். அதாவது ஏழு ஆண் போட்டியாளர்களும், சக பெண் போட்டியாளர்களைப் போலவும்... 7 பெண் போட்டியாளர்களும் சக ஆண் போட்டியாளர்களைப் போலவும் கெட்டப் போடவேண்டும். இதைக்கேட்டதும் நிக்சன் விசித்திரா போன்ற கெட்டப்பில் வந்து பேசினார். நிக்சனின் பேச்சு விசித்திராவிற்கு வருத்தத்தை அளித்திருக்கவேண்டும். ஏனெனில் இந்த டாஸ்க் முடிந்ததும், விசித்திரா “யாரும் என்னை விச்சுன்னு கூப்பிடவேண்டாம். விசித்திரா மேடம் அப்படின்னே கூப்பிடுங்க. ஏன்னா நீங்க அம்மான்னு கூப்பிடுறதெல்லாம் சும்மாதான். விச்சுன்னு கூப்பிடும்பொழுது மரியாதை இல்லாமல் இருக்கு” என்று தனது மனக்குமுறலை கவலையுடன் கூறினார்.

மாயாவும் பூர்ணிமாவும் “நீங்களும் எங்களை மேடம் போட்டே கூப்பிடுங்கள். எங்களுக்கும் மரியாதை இல்லாமல் இருக்கு” என்று பதில் கூறியதும், விசித்திரா, “நான் வயதில் பெரியவர். அதனால் உங்களை பெயர் சொல்லிதான் அழைப்பேன். மேடம் என்றெல்லாம் கூப்பிட முடியாது” என்று சொல்லிவிட்டார். விசித்திரா பேச்சிலும் ஒரு நியாயம் இருப்பதுபோலதான் தோன்றுகிறது.

vj archana
vj archanavijay tv

கூல் சுரேஷ் அர்ச்சனா போன்ற கெட்டப்பில் வந்து “Bigg boss i want go home” என்று அழுது காட்டியது அர்சனாவிற்கு வருத்தத்தை அளித்தது. விசித்திராவிடம் வந்து, “நான் அழுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லையா? இவர் நான் அழறதை மட்டுமே சொல்லிக்காட்டுகிறார். இதிலிருந்து இவங்க மனசுக்குள்ள நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியுது” என்றார் வேதனையோடு.

விக்ரமைப்போல் கெட்டப்பில் இருந்த அர்ச்சனாவை பார்த்து, “விக்ரம், போய் பெட்ரூம் கதவை சாத்திட்டு வாங்க” என்று பிக்பாஸ் கலாய்த்தார். ஏனெனில் எப்பொழுது பிக்பாஸ் விக்ரமை கூப்பிட்டாலும், ‘போய் டோரை சாத்திட்டுவாங்க, மெயின் கதவை சாத்திட்டு வாங்க’ என்றே ஒரு வேலையை தருவார். அதை இப்போதும் விக்ரமும் “பார்த்தீங்களா பிக்பாஸ்... நீங்க கொடுத்தவேலையை நான் எப்படி கச்சிதமா முடிக்கிறேன்” என்று கூறியபடி கதவை சார்த்திவிட்டு வருவார். இந்நிகழ்வுகளை இமிடேட் செய்து காட்டி, கலாய்க்கும் விதமாய் பிக்பாஸ் அர்ச்சனாவை கூறியது தற்போது இணையத்திலும் வைரலாகி உள்ளது.

vj archana
vj archanavijay tv

சீக்ரெட் டாஸ்க்

பிக்பாஸ், இந்த வார கேப்டன் தினேஷை கூப்பிட்டு ஒரு சீக்ரெட் டாஸ்க் ஒன்றை தந்தார். இதன்படி இவர் போட்டியாளர்களை ட்ரிகர் செய்யவேண்டும். அதில் அவர்கள் ட்ரிக்கர் ஆகாமல் இருந்தால் அவர் வெற்றிபெற்றவராக கருதப்பட்டு அவருக்கு ‘கோல்ட் ஸ்டார் வழங்க வேண்டும்’ என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்தார். இதில் கானா பாலாவை ட்ரிகர் செய்ய நினைத்தார் தினேஷ். ஆனால் ட்ரிகரிங் ஆனது விஷ்ணு! விஷ்ணு ஒன்று சொல்ல தினேஷ் ஒன்று சொல்ல... இருவருக்குள்ளும் சரியான வாக்குவாதம் ஆரம்பித்தது.

இதில் தினேஷ் விஷ்ணுவை அநாகரிகமாக பேசிவிட்டார். தொடர்ந்து நரி என்றும் அமுல் பேபி என்றும் மாறி மாறி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில் தினேஷ் சபையோரிடம் “இது ஜஸ்ட் கண்டெண்ட். சீக்ரெட் டாஸ்க்” என்று தனது வாதத்தை முடித்துக்கொண்டார். இருந்தாலும் விஷ்ணு தினேஷ் பேசியதை மனதிற்குள் வைத்துக்கொண்டு சமயம் வரும்பொழுது கண்டிப்பாக பழிவாங்கக்கூடும். இந்த டாஸ்க்கின் முடிவில் நிக்சன் கோல்ட்ஸ்டார் வாங்கினார். இத்துடன் நேற்றைய டாஸ்க் முடிந்தது. இனி நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com