பிக்பாஸ்7 Day 24: “இப்படிஎல்லாம் என்கிட்ட பேசாதீங்க” விசித்திராவுக்கு வந்த க்ரஷ்.. காதல் நிறைவேறுமா?

"இந்தாம்மா.. நீ ரொம்ப ஓவரா ஆடாத, உட்காரு” என்று விசித்திரா சொல்லவும், “இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க..” என்று மாயா சொல்ல, ஒரே அமளிதுமளி தான்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 24ம் நாள்

விசித்திராவிற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் படி ஹவுஸ்மேட் ஒவ்வொருவரிடம் உள்ள நல்ல குணம், கெட்ட குணம் இவற்றை கூறவேண்டும் என்று பிக்பாஸ் சொல்லவும், விசித்திராவும், சரி நம்ம மனசுல உள்ளதை சொல்லிடலாம் என்று நினைக்கையில் மாயாவுக்கும் விசித்திராவுக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

"இந்தாம்மா.. நீ ரொம்ப ஓவரா ஆடாத, உட்காரு” என்று விசித்திரா சொல்லவும்,

“இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க..” என்று மாயா சொல்ல,

“உனக்கிருக்குற பிரச்னையை நீ கேட்டாதான் அத நீ சரிபண்ணிக்க முடியும் “ என்று விசித்திரா சொல்ல...

“எனக்கிருக்குற பிரச்சனையை நான் பாத்துக்கறேன். அத நீங்க சொல்லணும்னு அவசியமே இல்ல... “ என்று மாயா சொல்லவும், இருவருக்குள்ளும் கசமுச வாக்குவாதம் , இதில் மாயாவுக்கு யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. இது மாயாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். கொஞ்சம் மன உளைச்சலில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

பிக்பாஸ் 7
BIGG BOSS DAY 22, 23 | ‘அநியாயம் நடந்தா ரொம்ப பொங்குறீங்க… கொஞ்சம் ஸ்லோவா பொங்குங்க’

இதை கண்டுக்காத விசித்திரா, தனக்கு கொடுத்த டாஸ்கின்படி அனைவரை பற்றியும் தனித்தனியாக பேசினார். “ரவீனாகுட்டி, கியூட், நீ அழகா முடிவு எடுப்ப.. ஆனா உன்னை யாரும் நம்பவில்லை. நம்புற மாதிரி நீ ஆட்டிட்யூடை வளத்துக்கணும்” என்று சொல்லவும். “ஓகே மம்மி “ என்றது குழந்தை.

”ஐஷூ குட்டி என் செல்லக்குட்டி, நீ எல்லோரையும் நம்பி எல்லாத்தையும் சொல்லாத..”

“பிரவீன் நீ நல்லவன்; நீ ரஃப்பா பேசினாலும் feel பண்ணி மன்னிப்பும் கேட்குற.. சிலபேரு மாதிரி போலியா கேட்காம உண்மையா கேட்குற..” (இந்த குத்தல் கூல் சுரேஷூக்கு)

”நிக்சன், தானா முளைச்சு மரமா வளர்ந்து பூ காய் தருகிற எக்ஸலண்ட் பையன்”

விசித்திரா
விசித்திராவிஜய் டீவி

”ஜோவிகா இங்க வருவதற்கு முன்னாடியே எனக்கு அவளை தெரியும், அந்த உரிமையில தான் சில கருத்தை நான் சொன்னேன். ஆனா, அவ அத தப்பா எடுத்துக்கிட்டா.. ” என்று பலரையும் விசித்திரா தன் கண்ணோட்டத்தில் சொல்ல... இறுதியாக மாயாவை பற்றி கூறும்போது,

“மாயா நீ நல்ல பொண்ணு தான்; உன்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. உன்னுடன் இருப்பவர்களிடம் அந்த ஃபயர் பற்றிக்கொள்ளும்.” என்றார்.

”பூர்ணிமா உன்கிட்ட வைஃப் இருக்கு”. என்றவர்,

மாயா
மாயாவிஜய் டீவி

இறுதியாக மாயாவின் கோபம் இப்போ என்னன்னா.. “மொபைல் டாஸ்கில் அவ போட்டோவை எடுத்து சார்ஜ் பண்ணலைன்னு கோபம், அதேபோல, எனக்கு என்ன வருத்தம்னா, என் போட்டோவை யாருமே எடுக்கலைங்கறது தான்” என்றதும், மாயா கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தார். ஆனாலும் மாயா இதை அவர் பாணியில் கண்டண்டாக மாற்றிவிட்டார். விசித்திரா சொன்னது அத்தனையையும் தனக்கு எதிரானது என்றும், அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறாப்புல குறை சொல்லுறார், இது எனக்கு சரிப்பட்டு வராது. இது நாட் கூல் என்றவர், குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதில் எந்த மீனும் சிக்கவில்லை.

மாயா இத்தோட நிறுத்தாமல் தன் தூண்டிலை மேக்கப் ரூமிற்கு கொண்டு சென்று விக்ரம் மீனை பிடித்தார். அவரிடம் ‘ வீட்டில் நடப்பது எதுவுமே சரியில்லை. யாரும் உண்மையானவர்கள் இல்லை. எல்லோரும் என்னை டார்கெட் பண்ணுகிறார்கள். என் மனசுல உள்ள பாரத்தை யாரிடம் இறக்கி வைப்பதுன்னு தெரியல.. இங்க உள்ளவங்களிலே உன்னைப்பார்த்தால் தான் நல்லவன் மாதிரி இருக்கு அதனால் தான் உன்கிட்ட என் மனகஷ்டத்தை சொல்லுறேன். இப்போதைக்கு நீதான் என் ஆறுதல்” என்று முதலை கண்ணீர் விடவும்,

NGMPC22 - 147

விக்ரமுக்கு தன்னை கூப்பிட்டு மாயா பேசினதும் தலை கால் புரியவில்லை. “மாயா, இந்த வீட்டில, நீ மட்டும் தான் புத்திசாலி, நீயும், பிரதீப்பும் தான் நல்லா கேம் ஆடுறீங்க.. உன்கிட்ட எனக்கு எப்போதும் ஒரு சாப்ட் கார்னர் இருக்கு. அதனால் தான் உன்கிட்ட பேசாம இருந்தேன். எனக்கு உன் கேம் புடிச்சுஇருக்கு. உனக்கு எப்பொ எல்லாம் ஏதாவது ஷேர் பண்ணனும்னு தோணுதோ அப்போ எல்லாம் என்னை கூப்பிடு.. ஐயம் ஆல்வேஸ் ஃப்ரீ தான். நீ உத்தரவு கொடுத்த நா இப்போ வெளில போவேன்.” என்று ஒரே நிமிடத்தில் மாயாவை தனது குருஜீ ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்.

மாயா தனது அடுத்த கேமாக விசித்திராவிடம் வந்து, நீங்க எங்க அம்மா மாதிரி என்று கட்டிக்கொள்கிறார்.

பூர்ணிமா மாயா
பூர்ணிமா மாயாவிஜய் டீவி

விசித்திராவும் கண்டண்டுக்காக ஒரு காமெடி பண்ணுகிறார். குரங்கு பொம்மையின் வாலை கிள்ளிக்கொண்டு கேமராவிற்கு முன் நின்றுக்கொண்டு ஸ்மால் பாஸ் எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு, ஐ க்ரஷ் யூ... நீங்க சரின்னு சொன்னா, நான் கிச்சன் பக்கம் வந்துடறேன் என்று புது பிட் ஒன்றை போடுகிறார்.

நிக்சனும் விசித்திராவிடம், நீங்க உண்மையா ஸ்மால் பாஸை விரும்புகிறீங்கன்னா, இதை சாப்பிடுங்க பார்ப்போம் என்று பச்சைமிளகாயை தருகிறார்.

காதலுக்கு முன்னாடி பச்சைமிளகாய் எம்மாத்திரம் என்று விசித்திரா பச்சைமிளகாயை ஒரே கடியில் சாப்பிட்டு விடுகிறார்.

அடுத்தது கோல்ட் டாஸ்க் கேம் வருகிறது. இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரை தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் சொல்வதை கேட்டு அவர்களுக்கு லைக் பட்டன் டிஸ் லைக் பட்டன் தரணும், இதில் ரவீனா தனக்கு கொடுத்த லைக் பட்டனை பிரதீப்பிற்கும் டிஸ்லைக் பட்டனை மணிக்கும் தர இதில் மணி ரவீனாவிடம் கோவித்துக்கொள்கிறார். நீ எனக்கு தான் லைக் பட்டன் தந்து இருக்கணும், பிரதீப்பிற்கு தந்து இருக்கக்கூடாது. என்கிறார்.

பிரதீப், மணி
பிரதீப், மணிவிஜய் டீவி

இது குறித்து பூர்ணிமாவும் மாயாவும் பேசிக்கொள்ளும் பொழுது, ”ரவீனா மணியைவிட மெச்சூர்டு , இந்த விஷயத்துல ரவீனாவுக்கும் மணிக்கும் சண்டை வருவதை பார்த்தா, *** சண்டை மாதிரில இருக்கு.” என்று பூர்ணிமா மாயாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மணியின் கையில் லைக் பட்டனும் டிஸ்லைக் பட்டனும் வரும்பொழுது, ரவீனாவிற்கு லைக் பட்டனும், விக்ரமுக்கு டிஸ் லைக் பட்டனையும் தந்து, மணி தன் நேர்மையான காதலை ரவீனாவுக்கு தெரிவிக்கிறார்.

இதன் பிறகு என்னென்ன நடக்க இருக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com