BIGG BOSS DAY 66 | பிக்பாஸ் கலைகல்லூரியில் கணக்கு டீட்டரின் கலாசார வகுப்பு!

ஒவ்வொருத்தரும் அடுத்தவர்களை எப்படி குறை சொல்லலாம், அவர்களை எப்படி மெண்ட்டல் டார்ச்சர் செய்யலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதால் இவர்களுக்குள் பெயருக்கு கூட fun இருக்கவில்லை.
Bigg Boss 7
Bigg Boss 7vijay tv

பிக்பாஸில் 66வது நாள்.

விஷ்ணுவின் கேப்டன்சியில் fun இருக்கவேண்டும் என்று பிக்பாஸ் சொல்லி இருந்தாலும், வீட்டில் உள்ள யாரும் fun செய்வதாக தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் அடுத்தவர்களை எப்படி குறை சொல்லலாம், அவர்களை எப்படி மெண்ட்டல் டார்ச்சர் செய்யலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதால் இவர்களுக்குள் பெயருக்கு கூட fun இருக்கவில்லை.

பொம்மலாட்டம் டாஸ்க்கில் குழந்தைகள் போல் பொம்மையை வைத்து விளையாண்டால் fun-ஆக இருக்கும் என்று நினைத்து பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார். ஆனால் அதையும் பிரச்னையில் கொண்டு போய் முடித்தார்கள். இதில் அர்ச்சனாவின் டபுள்கேமை கண்டு வெறுப்புற்ற விசித்திரா பிக்பாஸை விட்டே செல்லலாம் என்ற முடிவிற்கு வந்தார்.

vijay tv

அடுத்ததாக பிக்பாஸ் ‘இதிலாவது fun பண்ணுங்கடா’ என்று பிக்பாஸ் கலைக்கல்லூரி என்ற டாஸ்க் ஒன்றை தந்தார். இதில் சிலர் ஆசிரியராகவும் பலர் மாணவர்களாகவும் இருக்க, இவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரோலுக்கு தினேஷை தேர்வு செய்தனர். ஆசிரியர்களாக அர்ச்சனா, மாயா, நிக்‌ஷன் விஷ்ணு பங்கேற்றனர்.

அனன்யா, கூல் சுரேஷ், மணி, பூர்ணிமா, ரவீனா,விசித்திரா, விக்ரம், விஜய் ஆகியோர் மாணவர்களாக பங்கேற்றனர். அர்ச்சனா மாரல் சயின்ஸ் ஆசிரியர், மாயா கணக்கு ஆசிரியர், நிக்சன் விளையாட்டு ஆசிரியர், விஷ்ணு கெமிஸ்ட்ரி ஆசிரியர் என்றிருக்க வேண்டும் என பிக்பாஸ் கட்டளையிட்டு இருந்தார்.

மாரல் சயின்ஸின்படி ‘இந்த வீட்டில் சர்வே பண்றது எப்படி?’ என்றும், கெமிஸ்ட்ரியின் படி ‘வீட்டில் இருப்பவர்கள் ரிலேஷன்ஷிப்பை எப்படி மெயிண்டென் பண்ணவேண்டும்?’ என்றும், கணக்கு சப்ஜெட்டின்படி ‘இந்த வீட்டில் எந்த வகை பார்முலா சரியாக ஒர்க்காகும்?’ என்றும் சிலபஸை மாணவர்களுக்கு எடுக்க வேண்டும் என்பது பிக்பாஸின் கட்டளை.

vijay tv

இதில் மாயா டீச்சர் பக்கா கும்பகோணம் அக்ரஹாரத்து மாமி மாதிரி நடித்தது ரசிக்கவைத்தது. கலாசாரத்தை பற்றி அர்ச்சனாவிடம் பேசும்பொழுது, “ஸ்லீவ்லஸ் கலாசாரம் கிடையாது” என்றார் மாயா. பதிலுக்கு அர்ச்சனா, “நீங்க போட்டு இருக்கிற சுடிதாரும் கலாசாரம் கிடையாது. நான் புடவை கட்டி இருக்கேன். நீங்க போய் புடவை கட்டிட்டு வாங்க...” என்று சொன்னதும் மாயா பீஸ் போன பல்பு மாதிரி நிக்சனை திரும்பி பார்த்த பார்வை சிரிப்பை வரவழைத்தது.

வகுப்பறைக்கு கணக்கு டீச்சர் மாயா வந்தும், மாணவர்கள் “அவரை மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே...” என்ற பாடலுடன் வரவேற்றனர். மாணவர்களுக்கு ஈடுதரும் வகையில் மாயா டீச்சர் பாடியதும் உண்மையிலேயே fun-தான். அந்த வகுப்பறையில் கணக்கு டீச்சர் கலாசாரத்தைப்பற்றி பாடம் எடுகிறார். ஏனென்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் பள்ளி சார்ந்த இதுபோன்ற நாடகங்களில் ஆசிரியர்களை இப்படி வர்ணிப்போடு அறிமுகம் செய்திருக்க வேண்டாமென்றும் எண்ண எழுகிறது. இது எபிசோட் முழுக்கவும் ஒருசில இடங்களில் தொடர்ந்தது.

Bigg Boss 7
பிக்பாஸ்7: ”குழந்தைமாதிரி கேட்பாங்க” அதிகரித்த அவமரியாதையால் வீட்டிற்கு செல்லவிரும்பும் விசித்திரா!

மணி டேபிளில் தாளம் போடுவதை பார்த்த மாயா டீச்சர், “1ம் 1ம் 2 தான்” என்று ஒரு கானா பாடல் பாடுகிறார். அது உண்மையிலேயே சூப்பர் ஹிட். பிறகு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார். “ஒருத்தரை எலிமினேட் செய்ய என்ன செய்யவேண்டும்?” என்ற கணக்கு டீச்சரின் கேள்விக்கு, மாணவர்கள், “அவருக்கு பருத்திமூட்டை போன்ற நிக் நேம் வைக்கணும், அவரை தனிமைப்படுத்தணும், சண்டை போடணும்” என்கிறார்கள். மறுபடி 1ம் 1ம் 2 தான் பாட்டுடன் வகுப்புடன் முடிகிறது.

அடுத்ததாக அர்ச்சனா மாரல் சயின்ஸ் எடுக்க வருகிறார். வழக்கம்போல் அறிவுறையுடன் முடிக்கிறார். அடுத்ததாக வந்த நிக்சன் உண்மையிலேயே பட்டையை கிளப்பினார். டாஸ்க் கொடுத்ததும், “இந்த டாஸ்கை யார் நன்றாக செய்வார் என்று யோசிக்கணும்” என்று தொடங்கி அர்ச்சனாவை உதாரணப்படுத்தி அவரை வறுத்தெடுத்தார். இதற்கு அர்ச்சனா கோவப்படாமல் சிரித்தப்படி கைத்தட்டியதுதான் ஹைலைட். உண்மையில் fun ஆக முடிந்த இந்த டாஸ்கில் நிக்சனும், ரவீனாவும் கோல்ட் ஸ்டார் வென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com