பிக்பாஸ்7: ”குழந்தைமாதிரி கேட்பாங்க” அதிகரித்த அவமரியாதையால் வீட்டிற்கு செல்லவிரும்பும் விசித்திரா!

பிக்பாஸ், டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொருத்தரின் சென்ஸிட்டிவான மனநிலையை குலைக்கும் விதமாக போட்டியாளருக்கு டாஸ்கையும் தருகிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸ் 65ம் நாள்

நாளாக நாளாக ஒவ்வொரு போட்டியாளார்களுக்கிடையே இருந்த போட்டிகளும் பொறாமைகளும் ஒரு கட்டத்தில் அதிகரித்து அது ஒவ்வொருத்தரையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி வருகிறது. யாரும் யாரையும் நம்புவதில்லை. இதில் பிக்பாஸ், டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொருத்தரின் சென்ஸிட்டிவான மனநிலையை குலைக்கும் விதமாக போட்டியாளருக்கு டாஸ்கையும் தருகிறார்.

vijay tv

அப்படி பட்ட டாஸ்க் இன்று மட்டுமே இரண்டு நடந்தது. ஒன்று போட்டியாளார்கள் மற்ற போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமான நடவடிக்கை என்ன என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் தரப்பட்டது.

இதில் ரவீனா விசித்திராவை தேர்ந்தெடுத்து அவரை பற்றி, “ நீங்க இப்படி பண்ணீங்க... ன்னு சொன்னா, அவங்க ஒத்துக்கமாட்டாங்க. நான் என்ன தப்புபண்ணினேன்னு குழந்தைமாதிரி கேட்பாங்க... இத மாத்திக்கிட்ட அவங்களுக்கு இந்த பிக்பாஸ் கேம் ரொம்ப உபயோகமாக இருக்கும்” என்கிறார்.

பிக்பாஸ் 7
BiggBoss7: ”எப்படி விளையடுவதுஎன்றே தெரியல” போட்டியாளர்களால் அதிருப்தி அடைந்த கமல்; வெளியேறிய ஜோவிகா!

இந்த டாஸ்கில் நிக்சன் அர்ச்சனாவை தேர்ந்தெடுத்தும், அர்ச்சனா பூர்ணிமாவை தேர்ந்தெடுத்தும், விசித்திரா, அர்சனா, தினேஷ் ரவீனா இவர்களை தேர்ந்தெடுத்தும் சொல்கிறார். அனன்யா அர்ச்சனாவை தேர்ந்தெடுத்தும், தினேஷ் நிக்சனை தேர்ந்தெடுத்தும், விக்ரம் மணியையும், அவர்களிடம் இருக்கும் குழந்தைதனத்தை எடுத்து சொல்கிறார்கள். அனேகமாக எல்லோர் சொன்ன குழந்தைதனமும் ஒன்றுபோல தான் இருந்தது.

விசித்திரா கடந்த சில நாட்களாக உற்சாகம் குறைந்து காணப்படுகிறார். மாயாவிடம் சென்று, தனது மனக்குமறலை சொல்லி, நான் வீட்டிற்கு போக ஆசைப்படுகிறேன் என்கிறார். ஒரு சைகாலஜியில் டாக்டரேட் பட்டம் வாங்கியவரே இவர்களை விட்டுவிட்டு வெளியில் செல்லவிரும்புகிறார்கள் என்றால் அங்குள்ளவர்களின் மனநிலையை நாம் நன்கு புரிந்துக்கொள்ளலாம்.

NGMPC22 - 147

அடுத்ததாக கோல்ட் ஸ்டார் டாஸ்கில் பொம்மலாட்டம் என்ற டாஸ்க் ஒன்று நடந்தது. இதில் பொம்மைகளாக சிலரும், குழந்தைகளாக சிலரும் பங்கேற்றனர். இதில் ரவீனா குழந்தை தன் கையில் இருக்கும் விஷ்ணு பொம்மையால் விசித்திராவை பத்தாதற்கு விக்ரம் குழந்தையும், அர்ச்சனா பொம்மையும், தினேஷ் குழந்தையும் சேர்ந்து விசித்திராவை வெறுப்பேத்த... விசித்திரா ஆட்டத்தை விட்டு வெளியேறி தனிமையில் அமர்ந்து அழுதுவிட்டார்.

என்னதான் இருந்தாலும் வயதிற்கு ஒரு மரியாதை வேண்டாமா? எப்பொழுது தான் வளரும் இளம்பருவத்தினர் இதை புரிந்துக்கொள்வார்களோ... இனி என்ன நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com