BIGG BOSS DAY 18 | பிரதீப்பை தூக்கி வீசிய விஜய்; ரவீனாவின் சிரிப்பு தெரபி எல்லாத்தையும் சரிசெஞ்சதா?

நேற்று ரவீனா தனது சிரிப்பால் வீட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தார். இது உண்மையிலேயே ஸ்டெரஸ் ரிலீஃப்பாகவே அனைவருக்கும் இருந்தது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

பிக்பாஸில் நேற்று போட்டியாளர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெற்றது. கிட்டதட்ட மல்யுத்த போட்டிபோலதான் இதுவும் இருந்தது. விக்ரம் ரவீனாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அவரை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார். இன்னொருபக்கம் விஜய் விஷ்ணுவை நகரவிடாமல் பார்த்துக்கொண்டார். நிக்ஸன் மற்றும் மணி ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தவர்களின் கைகளிலிருந்து ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச்செல்வதில் கவனத்தை செலுத்தினர். இதில் ஆக்ஸிஜன் பாட்டிலை தூக்கி வரும்பொழுது நிக்ஸன் மூடியிருக்கும் கண்ணாடி கதவில் மோதிவிட... அடுத்த நொடியே கண்ணாடி துண்டுதுண்டாக நொறுங்கி விழுந்தது. இதில் பிரதீப்பும் நிக்ஸனும் சிறுகாயம் அடைந்தனர்.

BIGG BOSS DAY 18
BIGG BOSS DAY 18BIGG BOSS

அடுத்த ரவுண்டில், விஜய்க்கும் பிரதீப்பிற்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இதில் விஜய் ஒருபடி மேலே போய் பிரதீப்பை தூக்கி தரையில் அடித்தார். இது, நமக்கே பீதியை ஏற்படுத்தியது. எப்பொழுது பிரதீப் மாட்டுவார், அவரை ஒரு கை பார்க்கலாம் என்றே விஜய்யின் எண்ணத்தில் ஓடியிருக்க வேண்டும். அதனால்தான் அத்தனை ஆக்ரோஷத்துடன் விஜய் பிரதீப்பை இப்படி தூக்கி அடித்திருக்க வேண்டும்.

முதல் வாரமே விஜய் தனது முஷ்டியை மடக்கி பிரதீப்பை குத்துவேன் என்றும், வெளியில் வந்தால் என் நண்பர்களை வைத்து ஒரு கை பார்ப்பேன் என்று மிரட்டும் தோனியிலும் சொன்னதால்தான் கமல்ஹாசனிடமிருந்து ஸ்டிரைக் கார்டு வாங்கினார். நேற்றைய போட்டிக்குப்பிறகு விஜய் மீண்டும் ஸ்டிரைக் கார்டு வாங்கலாம், அல்லது விஜய் எலிமினேட்கூட ஆகலாம்... அப்படியான மோசமான செயல்தான் அது!

பிக்பாஸ் 7
பிக்பாஸ்7: ’வன்முறைக்கு இது இடமில்லை’ விஜய்க்கு ஸ்ட்ரைக் கார்டு.. எலிமினேட்டில் எதிர்பாராத ட்விஸ்ட்!
BIGG BOSS DAY 18
BIGG BOSS DAY 18BIGG BOSS

சகபோட்டியாளார்கள்கூட இதுகுறித்து விவாதிக்கையில், விஜய்யின் இச்செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறினர். இப்போட்டியில் பிக்பாஸ் வீட்டினர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அனைவரும் ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து நாமினேட் செய்யவேண்டும். அதன்படி நாமினேட் நபராக ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விஷ்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரும் கூலாக “என்னை நாமினெட் செய்வதற்காகதான் இத்தனை போராட்டம் செஞ்சீங்களா... இதை முன்னாடியே சொல்லியிருந்தால் நானே நாமினேட் ஆகி இருப்பேனே... “ என்று கூற, அங்கிருந்த அனைவருமே தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர். நாமும்தான்!

ஆரம்ப நாட்களில் நிக்ஸன் யாருடன் அவ்வளவாக கலந்துரையாடாமல் ஒரு பயந்த சுபாவத்தைக் கொண்டவர்போல் காணப்பட்டார். ஆனால் இப்பொழுது ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்பது போல் அனைவரிடமும் அவர்களின் நிறை குறையைக் கூறுவதுடன், அவர்களுடன் சேர்ந்து விளையாட்டை எப்படி வெற்றிக்கொள்வது என்று பிளான் செய்வதிலும் ஆர்வத்தை காட்டி வருகிறார்.

BIGG BOSS DAY 18
BIGG BOSS DAY 18BIGG BOSS

அதன்படி ரவீனாவிடம் நேற்று எபிசோடில் பேசிய நிக்ஸன், “நீ இங்க விளையாடதான் வந்திருக்கிறாய், நீயும் மணியும் நேரத்தை செலவழிப்பதற்காக இங்கு வரவில்லை. முதல் வாரத்தில் நீ வந்தபொழுது இருந்த ஆர்வம் இப்பொழுது உன்னிடம் குறைந்துள்ளது. உங்களுக்கான நேரத்தை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரைக் கூறினார். இதற்காகவே நிக்ஸனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

இதையடுத்து ரவீனா அனைவருக்கும் சிரிப்பு தெரபி ஒன்றை சொல்லிக்கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் சிரிப்பிற்கு பெயர் போனவர்கள் ரவீனாவும், பிரதீப்பும். இருவரையும் சிரிக்க சொல்லாதீர்கள் என்று நெட்டிசன்கள் விளையாட்டாக சொல்வதுண்டு. ஆனால், நேற்று ரவீனா தனது சிரிப்பால் வீட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைத்தார். இது உண்மையிலேயே ஸ்டெரஸ் ரிலீஃப்பாகவே அனைவருக்கும் இருந்தது. இத்தனை பிரச்னைகளை தாண்டியும் இருவீட்டாரும் ரவீனாவால் சிரித்து மகிழ்ந்தது நமக்கும் மகிழ்சியை தந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com