BIGG BOSS Day 7 | ’வன்முறைக்கு இது இடமில்லை’ விஜய்க்கு ஸ்ட்ரைக் கார்டு.. எலிமினேஷனில் ட்விஸ்ட்!

அனைவருமே விஜயின் கேப்டன் பதவியை பற்றி தவறுதலாக எதுவும் கூறவில்லை. பூர்ணிமா, அவர் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதாக கூறினார்.
பிக்பாஸ்
பிக்பாஸ்PT

ஞாயிற்று கிழமையான நேற்றைய பிக்பாஸ் எபிசோட்டில் கமலஹாசன், இம்மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்று கூறி மார்பக புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்து பேசினார். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் அவசியம் மார்பகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய் கண்ட ஒருவரால், அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் துயரப்பட வைக்கும். ஆகையால் இது குறித்து விழிப்புணர்வு அனைத்து பெண்களுக்கும் தேவை என்று கூறினார்.

நேற்று ஜோவிகாவின் கூற்று சரி என்று கூறிய கமல்ஹாசன் இன்று அதன் தொடர்ச்சியாக படிப்பின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கூறினார். படிப்பு என்பது முக்கியம் தான் ஆனால் அது அவர்களது சம்பந்தப்பட்டது என்று பாத்திரத்தில் ஈயம் பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் தனது கருத்தை தெரிவித்தார்.

பிறகு அகத்தின் வழியாக அகத்துக்குள் சென்றார். அங்கு கடந்த வாரம் கேப்டனாக பதிவியிலிருந்த விஜய்யின் கேப்டன்ஷிப் பற்றி ஒவ்வொருவரையும் தனித்தனியாக கேட்டார். அனைவருமே விஜய்யின் கேப்டன் பதவியை பற்றி தவறுதலாக எதுவும் கூறவில்லை. பூர்ணிமா, அவர் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதாக கூறினார். ப்ரதீப் , விஜய் இரு வீட்டில் இருப்பவர்களை இணைக்க தவறியதாக கூறினார். மற்றபடி அவர் கேப்டன் பகுதிக்கு தகுதியானவர் தான் என்று கூறினர். மற்றவர்கள் அவரது கேப்டன்ஷிப் அருமையாக இருந்ததாக தெரிவித்தனர்.

அதேபோல் பிரதீப் சாப்பாட்டு விஷயத்தை பற்றி கூறும் பொழுது ”நான் 2000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினேன் என்றால் அதை நான் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் சிலர் எடுத்து வந்த பொருட்களை மறைத்து வைத்துக் கொள்கிறனர்” என்றார்.

இதை கேட்டதும் கமல்ஹாசன் சற்று ஷாக் ஆனார். ”யார் அது சொல்லுங்கள்” எனக் கூறவும் பிரதீப் விஷ்ணுவை நோக்கி கையை காண்பித்தார்.

விஷ்ணு நீங்கள் அப்படி செய்தீர்களா?” என்று கமல்ஹாசன் கேட்டார்.

ஆமா சார் நான் எடுத்து வந்ததை அவரு வந்து சாப்பிட்டார் சார்” என்று ப்ரதீப்பை காட்டவும், கமல் உள்பட அனைவரும் சிரித்தனர். ஆனால், இதை பிரதீப் சற்றும் எதிர்பார்க்கவில்லை உடனடியாக விஷ்ணுவிடம் ”போதும் மச்சி இத விட்டுடலாம்” என்று கூறி அவர் அந்த டாபிக்கை நிறுத்திவிட்டார்.

பிரதீப் உண்மையிலேயே தெரியாமல் பேசுகிறாரா அல்லது தெரிந்தே பேசுகிறாரா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் எதோ காய் நகர்த்துகிறார். இதை சரியாக கணித்த யுகேந்திரன் கமல்ஹாசனிடம் ”இங்கு பிரதீப் டே ஒன்னிலிருந்து ரூல்ஸ் படி விளையாடி கொண்டிருக்கிறார்” என்றார்.

நானும் நீங்கள் எல்லோரும் அப்படித்தான் விளையாடணும்னு எதிர்பார்க்கிறேன்” என்றார் கமலஹாசன்.

பிறகு விஜய்யின் கேப்டன்ஷிப்பை பாராட்டிய கமல்ஹாசன் தொடர்ந்து அவரிம், ”நீங்க நடத்திய ஓரங்க நாடகத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால், அது வன்முறை நாடகம்; முழங்கை பட்டு மூக்கு உடைந்து.. இதுல உள்ள வன்முறை ஏற்புடையது இல்லை. அது தவிர நீங்க அவரிடம் எனக்கு வெளியில் ஆள் இருக்கு என்கிறீர்கள்; மிரட்டி இருக்கிறீர்கள். இது பிக்பாஸ் வீடா இல்ல வேற ஏதாவதா?” என்று சற்று கடுமையாகவே கூறினார்.

சார் நான் அப்படி எதுவும் நடந்து கொள்ளவில்லை.. முதலில் பிரதீப் தான்..”

பிக்பாஸ்
பிக்பாஸ் 7: ”நானும் படித்தவன் கிடையாது; படிப்பை ஜோவிகாவே முடிவு செய்யட்டும்”-கமலின் ’ஷாக்’ பதில்கள்!

விஜய், இங்க குறும்படம்னு ஒண்ணு இருக்கு தெரியும்ல.. ? ” என்றதும் அரங்கம் ஆரவாரம் செய்தது. “வன்முறை ஏற்புடையதல்ல. அதனால்..” என்று அவரை எச்சரிக்கை செய்யும் நோக்கில் தனது கோட் பையிலிருந்து ஸ்டிரைக் கார்டு ஒன்றை காட்டினார்.

அதாவது போட்டியாளர்கள் விதிகளை மீறி தனது வன்முறையை வீட்டிற்குள் அரங்கேற்றினாலோ அல்லது வன்முறையை தூண்டக்கூடிய முறையில் நடந்து கொண்டாலோ அவர்களுக்கு ஸ்ட்ரைக் கார்டு வழங்கப்படும். அதுவும் மூன்று முறை தான் அதற்கு மேல் அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்” என்றார் கமல்ஹாசன்.

ஸ்ட்ரைக் கார்ட் வாங்கினதும் விஜய்யின் முகம் மாறியது. ‘இது முன்னாடியே தெரிஞ்சி இருந்தா எவ்வளவு பில்டப் எல்லாம் கொடுத்திருக்க மாட்டேன் குமாரு’ அப்படின்னு விஜய் சொன்ன மைண்ட் வாய்ஸ் நமக்கும் கேட்டது.

இதற்கு நடுவில் மாயாவும் பூர்ணிமாவும் ரகசியம் பேசிக் கொள்கிறார்கள். இது பிக்பாஸ்க்கு தெரிய கமல்ஹாசன் இருவரையும் கேட்கிறார், ”இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்களே என்ன விஷயம் அது?”

மாயா நியாயமாக பேசுவது போல், ”நீங்க விஜய்க்கு கார்டு கொடுத்ததெல்லாம் ஓகே.. ஆனா இன்னொரு ஆளுக்கும் நீங்க கார்டு கொடுக்குற மாதிரி இருக்கும்

அதற்கு கமல், ”எல்லாருக்கும் வரிசையாக வச்சிருக்கேன். நிறைய கார்டு உள்ளே இருக்கு, எல்லாருக்கும் இன்றைக்கே குடுத்துட்டேனா, எல்லாருமே வீட்டுக்கு கிளம்பி போய்ட வேண்டியது தான். அப்புறம் எப்படி பிக்பாஸ் நடக்கும்?

கமலின் பதிலால் மாயாவின் மூக்கு நூறு சுக்கு நூறாக உடைந்து கீழே விழுந்தது. இருப்பினும் சுதாகரித்துக் கொண்டு விசித்திரா மேட்டரை சபையில் இழுக்க பார்த்தார். “இல்ல... விஜய்க்கு முன்னாடி பிரதீப் நிறைய விஷயம் விசித்ரா மேடத்தை பத்தி பேசினாங்க, அதுக்காக சொன்னேன்” என்று மழுப்பினாள்.

அச்சமயத்தில் பூர்ணிமா எழுந்து, ”இன்னொரு விஷயமும் இருக்கு. பிரதீப் அடிக்கடி சாவடிச்சிடுவேன், சாவடிச்சுடுவேன்னு அடிக்கடி சொல்கிறார். கூல் சுரேஷ் அண்ணாவை கூட பிரதீப் ரொம்ப கடுமையா பேசினார். 24 அடி உயரத்தில் இருந்து கூல் சுரேஷ் கீழே தள்ளி விடுவாராம், கீழே இருந்த கம்பியில சுரேஷ் சொருகி கிடப்பாராம். பிறகு அவரைக் குத்து குத்துவென்று குத்துவாராம்..” என இதை சொல்லும் பொழுதே பூர்ணிமா சிரிக்க ஆரம்பித்தார்.

ஏன் சிரிக்கிறீங்க.. “ என்று கமல்ஹாசன் கேட்ட சமயம்,

சார், சாகப் போறது நான்தானே அதான் அவங்கஎல்லாம் சிரிக்கிறாங்க” என்றார் குல் சுரேஷ்

இதைக் கேட்டதும் அவர்களுடன் கமல்ஹாசனும் சேர்ந்து சிரித்தார்.

விஷ்ணுவும் அவர் பங்குக்கு, ”சார் பிரதீப் என்கிட்ட வந்து டாஸ்கல்ல தோத்துடுவோம்; நம்ம அப்பதான் அவங்களோட மேக்கப் பொருட்கள் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிடுவாங்க மேக்கப் இல்லாமல் எல்லா பெண்களும் அசிங்கமா இருப்பாங்க; அதனால அவங்களுக்கு வர்ற ஓட்டு கம்மி ஆயிடும்; அதனால நாம ஜெயிச்சு விடலாம்.. அப்படின்னு ஒரு ஐடியா கொடுத்தார் சார்” என்று சொல்லவும்,

மேக்கப்னால தான் ஓட்டு விழுவது நினைக்கிறது தவறு; அப்படின்னா, அழகான பொண்ணுங்க எல்லாருமே பிக் பாஸில் ஜெயிச்சிருக்கலாமே; எப்பொழுதும் ஆடியன்ஸ குறைத்து எடை போடாதீங்க அவங்களுக்கு எல்லாமே நல்லாவே தெரியும்” என்றார். ஆக பிரதீப்பிற்கு ஸ்டிரைக் கார்டு எப்படியாவது வாங்கி தந்துவிடவேண்டும் என்ற இவர்களின் ஐடியாக்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெரிந்தார்.

பிறகு விசித்ரா, மாயா, பூர்ணிமா மூவருக்குள்ளும் சண்டை நடந்தது. விசித்ரா மாயாவிடம் ’என்னை பற்றி எதற்கு நீங்கள் கமல் சாரிடம் சொன்னீர்கள்?’.. என்று ஆரம்பித்தது அது கொஞ்சம் கேட்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது.

பிறகு வந்த கமல்ஹாசன் இந்த வாரம் ”பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் செல்லப் போவது யாரு..?” என்ற கேள்விக்கு ஒட்டு மொத்தபேரும் பவா தான் என்று கூறினர். அதற்கு காரணம் அவரது வயது ஆகையால் அவருக்கு வேலை சொல்லமுடியவில்லை. அவரால் டாஸ்கை சரிவர செய்யமுடியாது என்று பலகாரணங்களை சொன்னார்கள். இது பவாவை அவமானப்படுத்தியது போல் இருந்தது. இருந்தாலும் கமல் அடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் செல்லப்போவது யார் என்று காக்கவைக்காமல் டக்கென்று கார்டை எடுத்து காண்பித்து விட்டார். அதில் யாரும் எதிர்பாக்காத ’அனன்யா’ பெயர் இருந்தது. இது அங்குள்ள அனைவருக்கும் ஷாக்காக இருந்தது.

அனன்யா கிளம்பி சென்றதும் பிக்பாஸ் வீட்டில் அடுத்த கேப்டன் யார் என்று போட்டி எழுந்தது. இதில் விக்ரம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்றுக் கொண்டவுடன் விக்ரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டியவர்களை தேர்வு செய்யும் டாஸ் எழுந்தது. இதில் சோம்பேறித்தனமாக இருப்பவர் வேலை அதிகமாக செய்யாதவர் என்று வரிசை படுத்தப்பட்டு ஆறு பேர் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு செல்வதாக இருக்கிறது. இதில் மாயா, கூல் சுரேஷ் பவா, ஐஷு, பிரதீப், விஷ்ணு என்ற பெயர்கள் இடம்பெற்றன. இவர்கள் நாளை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்லலாம். நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாக வெளியேறினார் பவா செல்லதுரை. தான்னால் இனிமேல் இங்கு இருக்க முடியாது என்றும் தான் நினைத்து வந்ததற்கு இங்கு வேறுமாதிரியாக இருப்பதாகவும் அவர் கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com