BIGG BOSS 7 DAY 15 | “நடிக்க வாய்பில்லைனாலும் ஹோட்டல்ல பாத்திரம் தேய்க்கிற வேலை கிடைக்கும்”- விஷ்ணு

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஐஷு, அக்ஷயா, மணிச்சந்திரா, மாயா, நிக்ஸன், பூர்ணிமா, பிரதீப், விசித்ரா, விஜய், விக்ரம், வினுஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.
Vishnu Vijay
Vishnu VijayBigg Boss

பிக்பாஸ் 15ம் நாளான நேற்று…

சமையல் முடித்ததும் அண்டைவீட்டாருடன் புரணி பேசவே ஸ்மால் பாஸ் வீட்டில் கிச்சனுடன் சேர்ந்து வாசலில் ஒரு திண்ணையையும் கட்டி வைத்திருக்கிறார்கள் போல...!

அதில் அமர்ந்து வழக்கம்போல மாயாவும் பூர்ணிமாவும் வம்பு பேசுகிறார்கள். இந்த வார நாமினேஷனுக்கு, தான் யாருக்கு ஓட்டு போடவேண்டும், தனக்கு யார் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்ற ஒரு கணக்கெடுப்பு இருவருக்குள்ளும் இருந்தது. அதன்படி மாயா, “எனக்கு விஜய், கூல் சுரேஷ் ரெண்டு பேருமே ஓட்டு போட மாட்டார்கள்” என்கிறார்.

Vishnu Vijay
BIGG BOSS 7 | DAY 14 | எவிக்ஷன் இல்லை... தப்பித்த போட்டியாளர்கள்! கேப்டன் விக்ரமை வச்சு செய்த கமல்!
மாயா, பூர்ணிமா, வினுஷா
மாயா, பூர்ணிமா, வினுஷாBigg Boss

இப்படியாக, மாயாவும், பூர்ணிமாவும் “நான் இவங்களுக்கு போடறேன், நீ அவங்களுக்கு போடு” என்று நட்புறவு நாட்டு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அநேகமாக இவர்கள் இருவரையும் பிக்பாஸ் கங்கணம் கட்டி வருகின்ற வாரத்தில் பிரித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

இதன் நடுவில் விஜய் கால் ஸ்லிப் ஆகி கொஞ்சம் வீங்கி இருந்தது. அதற்கு ஐஸ் வைக்க வேண்டும் என்று டாக்டரின் அட்வைஸால், அவர் நிக்ஸனின் உதவியை நாடுகிறார்.

Vishnu Vijay
BIGG BOSS 7 | DAY 14 | எவிக்ஷன் இல்லை... தப்பித்த போட்டியாளர்கள்! கேப்டன் விக்ரமை வச்சு செய்த கமல்!

நிக்ஸனும் இரவு 3 மணி அளவில், சொந்த வீட்டிலேயே திருடனைப்போல ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் ஐஸ் கட்டியை பிரிட்ஜிலிருந்து எடுத்து வந்து விஜய்யின் காலில் வைத்து கட்டுகிறார். இதை அங்கிருக்கும் கேமராக்கள் பார்த்து பிக்பாஸிடம் போட்டு கொடுத்து விடுகின்றன. மறுநாள் டாஸ்கின் சமயம் பிக்பாஸ் நிக்ஸனை கேட்க, “ஆமா பாஸ், ஐஸ் எடுத்தேன். ஆனால் காலையில் கேப்டனிடம் சொல்லிவிட்டேன்” என்கிறார் நிக்ஸன்.

“கேப்டன், நிக்ஸன் சொன்னது உண்மையா? என்று நீதிபதியாக பிக்பாஸ் கேட்கவும்,

யுகேந்திரன்
யுகேந்திரன் Biggboss

“ஆமாம் பிக்பாஸ். நிக்ஸன் என்னிடத்தில் சொல்லிவிட்டான். ஆகையால் இந்த விதிமீறலை ஒருமுறை மன்னித்துவிடுங்கள்” என்கிறார் கேப்டன் யுகேந்திரன். ஆகையால் நீதிபதியும் நிக்ஸனை மன்னித்து விட்டார். இல்லையென்றால் நிக்ஸன் இந்நேரம் ஸ்மால் பாஸ் வீட்டில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்திருப்பார்.

இதில் தனி ஒரு டிராக்காக, ரவீனா - மணிச்சந்திரா நட்பு உலா வருகிறது. இவர்களுக்குள் இருக்கும் நட்பு, காதல்தான் என்று நாம் அடித்துக்கூறினாலும் அப்படி இல்லவே இல்லையென இருவரும் அடித்துக்கூறுவார்கள். நமக்கு ஏன் வம்பு, அவர்கள் நாடகம் பிக்பாஸ் முடிவதற்குள் வெளிவந்துவிடும்... அப்பொழுது பார்க்கலாம்.!

மணி - ரவீனா
மணி - ரவீனாBigg Boss

இதுல ஒரு பாயிண்ட் என்னன்னா… ஜோவிகாவும், பிரதீப்பும்தான் அடுத்தவர்களின் மைண்டுடன் விளையாட தெரிந்தவர்கள். அவர்களை எப்படி அடித்தால் அவர்கள் ரியாக்ட் செய்வார்கள் என்று இருவருக்கும் நன்றாக தெரிந்துள்ளது. அதன்படி அனைவரும் பிரதீப்பை நாமினேட் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கையில், ஜோவிகா மட்டும், “பிரதீப் மேல வோட் போட்டு வோட்டை வேஸ்ட் பண்ண கூடாது. அவரெல்லாம் இப்ப போகவே மாட்டார்” என்கிறார். சரியான கணிப்பு ஜோவிகா.

Vishnu Vijay
அப்போ படிப்பு முக்கியம் இல்லையா..? பிக் பாஸ் 7-ல் கொளுத்திப்போட்ட ஜோவிகா

அதேபோல், நாமினேட் பிராசஸ் ஆரம்பித்தது.  அனைவரும் அடுத்தவர்களை நாமினேட் செய்ய ஆரம்பித்தனர். இதுல கூல் சுரேஷ் நாமினேட் செய்தது பிரதீப்பை. “பிக்பாஸ் பிரதீப் அடுத்தவர்கள் மனம் புண்படுமாறு பேசுகிறார். நிறைய லூஸ் டாக்கும் விடுகிறார். அதனால் நான் அவரை நாமினேட் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, வெளியில வந்து “பிரதீப் நீ போனா யார் வருத்தப்படுகிறார்களோ இல்லையோ நான் வருத்தப்படுவேன்” என்கிறார். இதுதான் கூடயிருந்தே குழிபறிக்கிறது.

பிரதீப்
பிரதீப்Bigg Boss

அதன்படி இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் ஐஷு, அக்ஷயா, மணிச்சந்திரா, மாயா, நிக்ஸன், பூர்ணிமா, பிரதீப், விசித்ரா, விஜய், விக்ரம், வினுஷா என அத்தனை பேரின் பெயர்களும் இடம்பெற்றது.

அடுத்தது ஷாப்பிங். இதில் இரண்டு பேர்தான் ஷாப்பிங் செய்ய முடியும். அதன்படி யுகேந்திரனும், நிக்ஸனும் 11,000 ரூபாய்க்கு பர்சேஸ் செய்தார்கள். அதில் கோதுமை மாவு கிடையாது என்றார் பிக்பாஸ். பிரதீப், “யுகேந்திரன் சார் சக்கரை கூடுதலா எடுத்து வச்சுகோங்க… அடுத்தமுறை அதை கட் செய்திடுவாங்க” என்று குரல் தந்ததும், யுகேந்திரன் அவரிடம், “நீங்க வாய் திறக்காம இருந்தாலே போதும்” என்று சொல்லவும் அமைதியானார் பிரதீப்.

இன்னொரு பக்கம் விஷ்ணு பூர்ணிமாவிடம் தனது குறைகளை கூறிக்கொண்டு இருக்க, பூர்ணிமாவோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருக்கவும், “என்ன பூர்ணிமா, நா பட்டுக்கு எனது கஷ்டத்தை உங்கிட்ட சொன்னா, அதுக்கு நீ எந்த ரியாக்டும் செய்யமாட்டேங்கிற…” என்கிறார்.

Bigg Boss 7 Tamil
Bigg Boss 7 TamilBigg Boss

இங்க மாயா பூர்ணிமாவிடம், “எனக்கு என் அம்மா நியாபகம் வந்துடுச்சு. அதனாலதான் விச்சு பக்கத்துல உட்காந்தேன். அது கொஞ்சம் ஆறுதல இருந்துச்சு. ஆனா விச்சு என் அம்மா ஆக முடியாது” என்று ஒரு பிட்டை போடுகிறார்.

விஷ்ணு கிச்சனில் பாத்திரம் தேய்த்துக்கொண்டே, “பிக்பாஸ், நான் இங்க பிக்பாஸ்ல நடிக்கவந்த மாதிரி தெரியல… ஏதோ ஹோட்டல்ல வேலை செய்ற நினைப்புதான் இருக்கு. எத்தன பாத்திரம்? எல்லாரும் சாப்பிட வந்தாங்களா இல்ல விளையாட வந்தாங்களான்னு தெரியல… சாப்பிட்டு சாப்பிட்டு வரிசையா தட்டு தட்டா போடுறாங்க. என்னால தேய்க்க முடியல… பிக்பாஸ் முடிஞ்சதும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ., ஹோட்டல்ல வேலை கிடைச்சுடும்“ என்கிறார்.

ஸ்மால் பாஸ் விஷ்ணு, மாயா, பிரதீப் மூவரையும் அழைத்து, “நீங்களெல்லாம் என்ன இங்கேயே பர்மனன்ட்டா தங்கிட்டீங்க…? வீட்ல எல்லாரும் விரும்புற மாதிரி ஏதாவது விளையாடுங்க..” என்று உசுப்பேத்தி விடுகிறார்.

மாயா, பூர்ணிமா
மாயா, பூர்ணிமாBigg Boss

“நாங்க அட்டாக் மூடில் இருந்து அன்பு மூடுக்கு வந்தாச்சு” என்கிறார் மாயா.

“எனக்கு இந்த வீடு கலகலன்னு இருக்கணும். ஏன் எதுக்கு எப்படின்னு நான் சொல்ல முடியாது. சொன்னேன்னா என்னை போட்டு கொடுப்பீங்க… என்னை பொறுத்த வரைக்கும் இந்த வீடு ஆக்டிவா இருக்க வேண்டும்” என்கிறார் ஸ்மால் பாஸ்.

அடுத்ததாக வினுஷா, சரவண விக்ரம், பூர்ணிமா ஆகியோரையும் அழைத்து இதையே பேசுகிறார் ஸ்மால் பாஸ்.

பூர்ணிமா
பூர்ணிமாBigg Boss

அடுத்து கிச்சனில் பூர்ணிமா டீ போட தெரியாமல் டீ போடுகிறார். அதை மாயா கண்டண்ட்டாக மாற்றினார். இந்தப்பக்கம் ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு கூல் சுரேஷ் சொல்லிட்டு இருக்க, பூர்ணிமா ஹார்ட் வடிவத்தில் ஒரு சப்பாத்தி செய்து கூல் சுரேஷிடம் தர, ‘இது ஜெஸ்ஸி ஹார்ட்! இதை நான் சாப்பிடமாட்டேன்’ என அதை தனது மார்பில் அவர் வைத்துக்கொண்டது, அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com