BIGG BOSS 7 | DAY 14 | எவிக்ஷன் இல்லை... தப்பித்த போட்டியாளர்கள்! கேப்டன் விக்ரமை வச்சு செய்த கமல்!

“இந்த வார நூல் - ‘சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இதை எழுதியவர் திரு.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தனது ஐஏஎஸ் பரீட்சையை முதன்முதலில் தமிழில் எழுதியவர். திராவிடமானது நாடு தழுவியது என்பதை அதை இந்த புத்தகம் வெகு அழகாக சொல்லுகிறது” - கமல்
சரவண விக்ரம் - கமல்
சரவண விக்ரம் - கமல்Bigg Boss 7 Tamil

பிக்பாஸில் நேற்று கமல் போட்டியாளர்களிடம் தலைவரைப் பற்றி அதாவது விக்ரமைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்றார்

மணி கூறுகையில், “ரொம்ப பொறுமையா டெசிஷன் எடுத்தார் சார். எதுனாலும் தனியா போய் யோசிச்சு முடிவெடுப்பார்” என்றார்.

கூல் சுரேஷ் எழுந்து, “சினிமா ஹீரோ மாதிரி இந்த ஊர் மக்களுக்கும் அந்த ஊர் மக்களுக்கும் சண்டை வரக்கூடாது என்று முடிவெடுப்பார். அதாவது சண்டை சச்சரவு இல்லாமல் முடிவெடுப்பார்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7Bigg Boss 7 Tamil

“அப்படினா சச்சரவு இல்லை என்கிறீர்ளா?” என கேட்டார் கமல்.

“ஆமாம் சார். சண்ட வேற, சச்சரவு வேற. கண்டன்ட் வேற” என்று புது விளக்கம் தருகிறார் கூல் சுரேஷ்!

விஜய் எழுந்து “ரெண்டு வீட்டுக்குமே கம்ஃபர்ட்டபிளா இருந்தது” என்றார்.

ஐஷூ ஒருபடி மேலே போய், “பெஸ்ட் கேப்டன். நிறைய பேர் பல ஐடியாஸ் கொடுத்தாலும்கூட அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதுதான் செய்தார்” என்றார்.

ஜோவிகா சொல்லும் போது “அவர் ரொம்ப பொறுமைசாலி. ஆனால் அவர் ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ட்ராங்கா இல்லை என்பது எனது கருத்து” என்றார்.

சரவண விக்ரம் - கமல்
Bigg Boss 7 | Day 13 | போட்டியாளர்களுக்கிடையே நடந்த மோதல்களுக்கு கமல் சொன்ன தீர்ப்பு என்ன?

“ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சூனியம் செஞ்சா கூட அவங்க கிட்ட போயி எக்ஸ்ட்ரீம் லெவல் பொறுமையோட அட்டென்ட் பண்ணினார்” என்றார் பூர்ணிமா. ஆமா பூர்ணிமா, உங்களுக்கு விக்ரமிடம் ஒரு க்ரஷ் இருக்குன்னு மாயாகிட்ட சொன்னீங்களே… அது உண்மையா? பொய்யா? இல்ல அதுவும் சும்மா கண்டெண்டுக்காக சொல்றீங்களா? எது உண்மை?

பூர்ணிமா
பூர்ணிமாBigg Boss 7 Tamil

“கேப்டனா கைட் பண்ணாரு, ஆனா கேப்டன் ரோல் பண்ணது ஜோவிகா. கேப்டன் என்ன பேச வேண்டும் என்பதை டிசைட் பண்ணது ஜோவிகா” என்றார் விஷ்ணு.

“ரொம்ப பொறுமையான ஆளுதான் சார். ஆனால் இந்த தடவை தலைமைப்பணியை சரியா செய்ய தவறிட்டார். கேப்டன்னா இவரைவிட எனக்கு விஜய் பெட்டர் என்று தோன்றுகிறது” என்றார் பிரதீப்

விசித்திரா சொல்லும்போது “ஜோவிகா இதில் ரொம்ப இன்டெர்ஃபியர் பண்ணினார். விக்ரமோட அணுகுமுறை சரி என்றே தோன்றியது” என்றார் விசித்திரா.

விசித்திரா, மாயா
விசித்திரா, மாயாBigg Boss 7 Tamil

“பேஷண்ட்டா இருந்தார் சார்” என்று மாயா சொன்ன சமயம், “பேஷண்ட்க்கு என்ன ஸ்பெல்லிங்” என்றார் கமல். ஒரு ஊசியை எடுத்து நறுக்கென்று குத்தியது போல் மாயாவுக்கு சட்டென்று முகம் மாறியது.

”ரொம்ப சூப்பரான் கேப்டன் சார்” என்றார் ரவீனா.

நிக்ஸன் சொல்லும்போது “கேப்டன்ஷிப் நல்லா இல்ல ஆனா பொறுமையாக இருந்தார். கமெண்டிங் பவர் பத்தல” என்றார்.

நிக்ஸன் கோவித்துக்கொண்டு வெளியில் போகும் போது, “இங்க வாம்மா… இங்க வாம்மா… நல்ல கன்டென்ட் நீங்க சொன்னீங்க” என்று கூல் சுரேஷை அனைவர் மத்தியிலும் போட்டுக்கொடுக்கிறார் கமல். ஆனால் கூல் சுரெஷோ கோமாவில் படுத்து எழுந்து வந்த மாதிரி “எப்ப சார்…. எனக்கு நியாபகம் இல்லை” என்று கூறினார்.

வினுஷா சொல்லும்போது “கேப்டனுக்கு பவர் அதிகம் அதை எல்லார்கிடேயும் சொல்லுங்க…”ன்னு சொன்னேன்.

“நீங்க சொன்னீங்களா…?” என்றார் கமல்.

“ஆமா சார். நான் சொன்னேன் சார்” என்றார் வினுஷா.

கமல்
கமல்Bigg Boss 7 Tamil

”பாத்தீங்களா நம்ம மிஸ் பண்ணிட்டோம்மே… ”என்றார் நம்மை பார்த்து. கமலிடம் மொக்கை வாங்கிய வினுஷா, இது வேணும்னு கலாய்க்கிறாரா? வேண்டாம்னு கலாய்கிறாரா? என்ற சந்தேகத்துடனே அமர்ந்தார். இதுதான் நேற்றைய ஹைலைட்!

“ரொம்ப பொறுமையா இருந்தார் சார். இது நான் கத்துக் கொள்ள வேண்டிய விஷயம்” என்றார் யுகேந்திரன்.

“எல்லாரிடமும் கேட்டாச்சு, இவரிடமும் கேட்கலாம்” என்ற கமல், “பிக்பாஸ், சுத்தி வளைக்க வேண்டாம், நேரடியாக உங்களிடம் விஷயத்துக்கு வந்துட்டறேன். ஏன்னா நான் கேட்கிற கேள்விக்கு கூட கேப்டன் உங்ககிட்ட பதில் கேட்டுதான் சொல்லுவாரு. உங்களுக்கே கெடு கொடுத்து ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள சொல்லுங்கன்னு சொல்லுவாரு…” என்று பிக்பாஸிடம் கேட்கவும்,

சரவண விக்ரம்
சரவண விக்ரம்Bigg Boss 7 Tamil

“கமல் சார்…. இந்த வாரம் முழுக்க எங்கிட்ட நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு நீங்களுமா…..” என்று பிக்பாஸ் திருப்பிக் கேட்டுவிட்டார்!

“பாருங்க அவர எப்படி நோகடிச்சுரிக்கீங்க….” என்று விக்ரமை பார்த்து சொல்லிவிட்டு “பிக்பாஸ்…. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நீங்க பேஷண்ட்டா இருங்க ப்ளீஸ்” என்னும் போது விக்ரமுக்கு, ரீல் அறுந்து போச்சு மொமெண்ட்.

தொடர்ந்து, “விக்ரம் தலைமை பொறுப்பிலிருந்து விடுதலை என்று கத்தும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த விடுதலைக்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டார் கமல்.

விக்ரம், “கேப்டனா எனக்கு நிறைய பிராப்ளம். ஆனாலும் ஒரு விஷயத்தை நான் முடிவு செய்து வைத்திருந்தேன். இரண்டு வீட்டுக்கும் எவ்வளவு பிரச்னையா இருந்தாலும் நான் நைட்டு தூங்குவதற்குமுன் அந்த பிரச்னைக்கு உள்ள சொல்யூஷனோட நிம்மதியாக தூங்கணும் என்று நினைச்சேன், அதுபடிதான் செய்தேன்” என்று ஒரு குறும்படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒன்றை சொல்லி முடித்தார்.

சரவண விக்ரம்
சரவண விக்ரம்Bigg Boss 7 Tamil

‘எது விக்ரம், உங்களால ஒரு நல்ல முடிவு எடுக்க முடியாம ரெண்டு வீட்டாரும் பட்னி கிடந்ததுதான் சொல்யூஷனா?’ என்ற நமது மைண்ட் வாய்ஸை கட்டுப்படுத்த முடியவில்லை.

“ரெண்டு வீடும் சண்டை போட்டுக் கொள்ளும்போது அதை நிறுத்த முயற்சி செய்தீர்களா?” என்றார் கமல்.

”நான் நிறுத்த நினைத்தேன். முடியாத சமயத்தில்தான் பிக்பாஸிடம் சென்றேன்” என்றார் விக்ரம்.

“இரண்டு வீட்டிற்கும் சமாதானம் செய்து வைப்பது கேப்டன்ஷிப் கிடையாது. தலைமை என்பது விடுதலை அல்ல… அது ஒரு பொறுப்பு. அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு சில தகவல்களை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்கு படிப்பு கிடையாது. ஆனாலும் மக்களுக்கு என் மீது அன்பு இருக்கிறது. படித்த காந்தியும் பயன்படுவார் படிக்காத காமராசரும் பயன்படுவார்” என்று மறைமுகமாக அன்று நடந்த ஜோவிகா, விசித்திரா விவாதத்திற்கு மறுபடியும் ஈயம்பூசினார்.

பிக்பாஸ் 7 தமிழ்
பிக்பாஸ் 7 தமிழ்Bigg Boss 7 Tamil

“நானே இந்த முடிவை எடுக்கிறேன் என்று நீங்கள் அன்று நடந்த ஸ்டிரைக் பிரச்னைக்கு முடிவெடுக்க கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. நான் சொல்ல நினைப்பது ஒரு சிரமான கருத்தாகவும் இருக்கலாம். அதைப்பற்றி கவலைப்பட்டால், நாம் அந்த பொறுப்புக்கு நாம் தகுதி இல்லை என்று அர்த்தம்” என்றார் கமல். இவர் இதைக்கூறும் பொழுது நமக்கு கிளாஸ் டீச்சர், ‘தலையை சுத்தி மூக்கைத்தொடு’ என்று சொல்வது நியாபகம் வந்தது.

இதைச் சொல்லியே ஆகவேண்டும், “ஜோவிகா யாரையும் மரியாதை கொடுத்து பேசுவது இல்லை, என்னை வாடா போடான்னு கூறுகிறார்” என்று கமலிடம் விஷ்ணு கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோவிகாவிடம் “நீங்கள் வாடா போடா என்று கூறுவது மரியாதை குறைவான சொல். நீங்கள் அடுத்தவர்களை மரியாதை குறைவாக பேசும்பொழுது உங்களின் மரியதையும் குறைந்து உங்க சேஃப்டியும் குறையும். ஆகவே மரியாதை என்பது முக்கியம்” என்றார். ஆணித்தனமான வார்த்தை. இதற்கு நாம் கமலை பாராட்டியே ஆகவேண்டும். இனிமேல் ஜோவிகாவின் பேச்சில் மாற்றம் வருகிறதா என்பதை பார்க்கலாம்

ஜோவிகா
ஜோவிகாBigg Boss 7 Tamil

விசித்திராவிடம் “ஆரியமாலா…. இந்த அனுபவம் எப்படி இருந்தது” என்று கேட்டார்.

”இது டாஸ்க்கா இருந்ததனால ஒத்துக்கிட்டேன். எனக்கு ரொம்ப சவுண்டு ஒத்துக்காது. என் டீமுக்கு என் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இருந்தாலும் நான் செய்து காட்டுகிறேன் என்று கூறிவிட்டு சென்றேன் சார்” என்றார்.

Bigg Boss 7 Tamil

அடுத்ததாக கூல் சுரேஷிடம் திரும்பி, “இவ்வளவு ரகளை பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டு இருக்கும்போது இவர் ரன்னிங் கமெண்ட் கொடுத்துக்கிட்டே இருந்தார். அதை இப்போ பண்ணி காமிங்க. அதுவும் ஆங்கிலத்தில்” என்றார்.

கூல் சுரேஷால் பக்காவாக நடிக்க வரவில்லை. இருந்தாலும் முயற்சி செய்தார். ஆனால் அது ரசிக்கும்படியாக இல்லை.

அடுத்ததாக புத்தகம் பரிந்துரை செய்தார் கமல். “இந்த வாரம் நான் பரிந்துரை செய்கிற புத்தகத்தின் பெயர், ’சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்’. இதை எழுதியவர் திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தனது ஐ ஏ எஸ் பரீட்சையை முதன்முதலில் தமிழில் எழுதியவர். இந்த புத்தகத்தை நான் ஏன் பரிந்துரை செய்கிறேன் என்றால், நான் அடிக்கடி வலியுறுத்தும் கருத்தான, திராவிடமானது நாடு தழுவியது என்பதை இந்த புத்தகம் வெகு அழகாக சொல்லுகிறது. சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்ட நகர் பெயரெல்லாம் அப்படியே இப்புத்தகத்தில் இருக்கிறது. பொற்கை, வஞ்சிக்கோட்டை, தொண்டி என்று கிட்டதட்ட 400, 450 ஊர்களை இந்த புத்தகம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

கமல்
கமல்Bigg Boss 7 Tamil

உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் ஆராய்ச்சியாளர்கள் எழுதிய புத்தகத்தை நாம் படிக்கும் போது ஒரு புரிதலும் நமக்கு வரும். வரலாறு என்பது நமது கதை. அதை மாற்றி எழுத முடியாது” என்று கூறி மறுபடியும் அடுத்த வாரம் சந்திப்பதாக கூறி சென்றார். கமலின் இன்றைய பேச்சு பலருக்கும் மனதில் ஒரு வித உணர்சியை ஏற்படுத்தி இருக்க கூடும்.

ஏனெனில் வினுஷா அழுது கொண்டு இருக்கும் பொழுது, மணிச்சந்திராவும் ரவீனாவும் ஆறுதல் சொல்கிறார்கள். இது ‘அடுத்தவாரம் இவர்கள் மூன்று பேரின் பர்ஃபாமன்ஸ் இருக்குமோ?’ என்று எதிர்பார்க்க வைக்கிறது.

மாயா, பூர்ணிமா
மாயா, பூர்ணிமாBigg Boss 7 Tamil

மாயாவும் பூர்ணிமாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ”நான் வெளில போகலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்கிறார் மாயா. அதற்கு பூர்ணிமா “எதுக்கு போகணும்? இருக்கணும். இருந்து விளையாடிட்டு அப்புறம் போகணும்” என்றார்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விஷ்ணு, விக்ரம், வினுஷா, பிரதீப், பூர்ணிமா, மாயா இந்த ஆறு பேரையும் தேர்வு செய்கிறார் கேப்டன் யுகேந்திரன்.

ஆங்.... அப்புறம் சொல்ல மறந்துட்டோம்... இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது. அதற்கு பவா செல்லதுரை நடுவில் போனது காரணம். அதனால் மாயா காப்பாற்றப்பட்டார். இனி நாளை என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com